Sunday, September 4, 2016

அத்தியாயம் 9 - காலம் ஆளும் யோகாவின் ரகசியம்

அவன் உயர் கடவுளின் அன்பு பெற்ற மற்றும் உண்மையான சீடர் என்பதால், கிருஷ்ணன் அவனுக்கு மிகப் பெரிய இரகசியம் சொல்கிறேன் என்றார். அவர், அனைத்து உயிரினங்களிலும் அவர் ஒரு பகுதியாக இருக்கிறார், ஆனால் எந்த ஒரு பகுதியிலும் அவர் முழுமையாக இல்லை. இங்கு அனைத்து உயிர்களும் வாழ்நாள் காலத்தில் உயிர்வாழ வேண்டும் பின் இறுதியில் வை வெளியேற அதன்பின் மீண்டும் இந்த உலகை அடைகின்றன. நானோ மீண்டும் மீண்டும் அவற்றை அனுப்ப, அதை இயற்கை என அழைக்கிறீர். நான் எச்செயலுக்கும் கட்டுபட்டவன் அல்ல , இருப்பினும் என் செயல்களை தொடர்ந்து செய்கிறேன். என் மேற்பார்வையில் இயற்கை நகரும் மற்றும் நிலைத்திருக்கிறுக்கிறவற்றை தயாரிக்கிறது அதனால் உலகம் உய்கிறது. நானே உணவு, மருந்து, மந்திரம், வெண்ணெய், தீ, உலகின் தந்தை, தாயார், ஆதரவாளரும், தாத்தா, நான் அறிந்து கொள்ள கூடிய ஞானம், தூய்மையாக்கி, "ஓம்" எனும் ஓசை மற்றும் அனைத்து வேதங்களாக இருக்கிறேன். நானே இலக்கு, பாதுகாப்பாளன், இறைவன், சாட்சி, உறைவிடம், தங்குமிடம், நண்பர், பிறப்பிடம், கலைப்பு, அடித்தளம், புதையல் மற்றும் பல வடிவங்களில் நான் அழியாதவனாய்  இருக்கிறேன். நானே எங்கும் நிலைத்து வெப்பம், குளிர், மழை ஆகியவற்றை தருகிறேன். நான் அழியாதவனாய், மரணமாய் மற்றும் பிறப்பாய், இருப்பவனாய் மற்றும் இல்லாதவானாய் உள்ளேன்.

"நமது வாழ்க்கை: நம் வாழ்வில் நடப்பவை அனைத்தையும் கடவுளின் அங்கமாக அறிவதற்கு கடினப்படுகிறோம் (கடவுளின் செயல் என எண்ணாமல், அதை கடவுளின் ஒரு பகுதியா). ஏனென்றால் தான் என்பது சுய செயல்கள், ஆசைகள் மற்றும் கர்வத்தால் ஆனது. ஓரு மனிதன் மிகவும் பலவீனமடைவது தான் நேசித்தவரை இழக்கும் போது அல்லது அன்பை இழக்கும் போது. நாம் ஏன் உண்மையில் அந்த நேரத்தில் பலவீனமடைகிறோம் என்றால் அந்த அன்பு மீண்டும் அடைய இயலாது என்பதால். ஆனால் ஏன் நாம் அதை அடைய வேண்டும்? ஏனெனில், நாம் சிந்தனையை விட தயாராக இல்லை, வேறு என்ன செய்ய என புரிவதில்லை. நம் கர்வம் நம்மை பயனற்றவராய் வகைப்படுத்துகிறது மேலும் ஒருவரை மறப்பது தவறு என எண்ணுவதால் நினைவலைகளில் சிக்குகிறோம்.
பல மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்க, தற்கொலை செய்ய, கொலைகள் செய்ய, தம்மை சேர்ந்தவறை துன்புறுத்தவும் செய்கின்றனர். ஆனால் ஏன்? கடவுள் அனைத்துமாகவும் மற்றும் நீங்கள் நேசித்தவறாகவும் வாழ்ந்த போது/ வாழும் போது, அவரே மறைந்தார் அல்லது மறக்க சொன்னார். உண்மை இதுவென்றால் யாருக்காக காத்திருக்க வேண்டும், எதற்காக அழவேண்டும். அவர் ஒரு வடிவில் மறைந்தால் இன்னொரு வடிவில் வருவார். மறவாதீர், நீங்களும் ஒரு நாள் விட்டு செல்வீர்கள் க்வரை. ஆனாலும் அவர்களுடனும் கடவுள் இருப்பார். எனவே மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், அதுவும் அவரே! அவர் உங்களுடனும், உங்களை சேர்ந்தவருடனும் என்றும் உள்ளார். நீங்கள் பிரார்திக்க வேண்டியது அவர்களும் உயர் கடவுளை அடைய வேண்டும், மீண்டும் பிறக்ககூடாது. எனவே எழுந்து நடங்கள், புகை உங்களை சூழ விடாதீர்.

கிருஷ்ணன் சொர்க்கத்தையும் மற்றும் பிறப்பு பற்றி அர்ஜுனனிடம் கூறினார். வேதங்கள், புனித சோமா பானம் குடிப்பவர் , தூயவர், அர்ப்பணிப்பவர் மற்றும் வழிபடுபவர்  என அவர்கள் அனைவரும் சொர்க்கம் சென்று கடவுளர்கள் மற்றும் தேவர்களுக்கான ம தெய்வீக இன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுடைய பலன் தீர்ந்தவுடன் மீண்டும்  இவ்உலகத்தில் பிறக்கின்றனர். அவர்கள் அனைத்து வேதங்களை பின்பற்றினாலும், இச்சுழற்சியில் சுழல்கின்றனர். என்னை முழுமையாக யார் வழிபாடு செய்கின்றனரோ , அவர்களுக்கு நான் என்னித்தில்  இடத்தை தருகின்றனர். மேலும் வேறு தேவர்களை வணங்குகிறார் அல்லது வேறு எந்த வடிவங்களில், அவர்கள் வணங்கினாலும் அவர்கள் என்னையே வணங்குகிறனர். நானே எல்லாமும் மற்றும் உயர் கடவுளாய் இருக்கிறேன், அறியாமை இதை மறக்கின்றனர். நானே அனைத்தையும் அனுபவிப்பவன் , நானே அனைத்தையும் இழப்பவன்,  ஆனால் அதை அறியாதவன் தோல்வியடைகிறான். தேவர்களை வணங்குபவர், அவரை சென்றடைகின்றனர்; மூதாதையர் வழிபாடு செய்பவர்கள், அவரை சென்றடைகின்றனர்; பொருட்களை வணங்குபவர், அவற்றை அடைகின்றனர்; என்னை வணங்குபவன் என்னிடம் வந்தடைகிறான். பக்தியோடு ஒருவர் என்னிடம் ஒரு இலையை, ஒரு பூவை, சிறிது நீரை தந்தாலும் அதை அன்போடு ஏற்கிறேன். எனவே எதை நீ செய்தாலும் அதை எனக்கே அர்ப்பணி. அதனால் செயற்வினையிலிருந்தும், நன்மை, தீமையிலிருந்தும் விடுபெறுவாய் மற்றும் என்னை வந்தடைவாய். எனக்கு விருப்பமானவர் அல்லது விருப்பமற்றவர் என ஒருவரும் இல்லை, ஆனால் என்னை முழுமனதுடன் வழிபடுவரின் உள்ளே நான் இருக்கிறேன், அவர்கள் என்னுள் இருக்கின்றனர். பாதகனும் என்னை அடையலாம், முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதன் மூலம். எனவே உன் மனதை என்னில் நிறுத்து, பக்தி செலுத்து, உன்னை அர்ப்பணி இதன் மூலம் என்னை வந்தடையலாம்.

"நமது வாழ்க்கை: நாம் பல வடிவங்களில் தெய்வங்களை வணங்கலாம், ஆனால் அவை இறுதியில் ஒரேயர் சக்தியை அடைகிறதென கடவுள் கூறியுள்ளார். அப்படியானால் இங்கு மதங்களின் பெயரால் எதற்கு பிரச்சினைகள்? என்ன சாதிக்க விரும்புகிறோம்? கடவுள் நம்மை தன் நிலத்திற்கும், விதிகளுக்கும், கோட்பாடுகளுக்கும் நீதி வாங்கி தர வேண்டுகிறாரா? அறியாமை, பயம், அரசியல், தன் இன அடையாளம், கர்வம் இவை அனைத்தும் அறிவை மறைத்து, தன் கடவுளை காக்க போரிட செய்கிறது. தானே தன் கடவுளை காப்பதாய் இருமாப்பு கொள்ளவைக்கிறது (கிருஷ்ணனின் மற்ற அனைத்து வடிவங்களும் அவரது எதிரி என நாம் அவருக்கே சொல்கிறோம்). இப்படி ஒரு எண்ணம் இருந்தால் கீதையை மீண்டும் ஒருமுறை, அல்ல, பலமுறை படியுங்கள். அவனே உயர் கடவுள் அனைத்தையும் பாதுகாக்கிறான். ஒருவன் தன் உண்மையில் வழிபடவிரும்பினால் அவன் சொற்களை பின்பற்றவேண்டும். ஆனால் அதை விட்டு, புனித நூலை ஓரிடத்தில் மறந்துவிட்டு அவனிடமே சண்டைசெய்ய கூடாது. உங்களின் வெறுப்பு மற்றும் பழிவாங்கள் நடவடிக்கைகள் உண்மையில் வேறு மதத்தின், இனத்தின் மீதோ நடக்கவில்லை, ஆனால் உயர் கடவுளின் மீது நடக்கிறது. (உண்மை இங்கு ஒரே கடவுள், சிலர் அதை அல்லா, இயேசு, புத்தன் மற்றும் கிருஷ்ணன் எங்கின்றனர்)
இங்கு யாரவது நான் பகவத் கீதையை காக்கின்றேன் என கூற முடியுமா? யாராலும் முடியாது. அதன் வாழுதல் கடவுளால் நடத்தப்படுகிறது. ஆராய்ந்து பாருங்கள், இங்கு கரநாடக / இந்துஸ்தானி இசையோ, பரத நாட்டியமோ, சில மொழிகளோ சரியான பதிவேடுகள் இல்லாமல் காலம் கடந்து வாழ்கின்றன. ஏனென்றால் மக்கள் அதனை பின்பற்றினார்கள், அது அவர் வாழ்வின் பாகமாகிவிட்டது. ஆனால் பகவத் கீதையை நாம் பின்பற்றவில்லை அதனால் தேவையற்ற சண்டைகளிலும், கொடுமைகளிலும் மகத்தின் பெயரால் ஈடுபடுகிறோம். யாருக்கு தெரியும் ஒருவேளை கடவுள் இவ்வுலகில் முட்டாள்களும், அறிவாளிகளும் சமமாக இருக்க நினைக்கிறாரோ!
ஒரு இரகசியமாய் கடவுள்  நமக்கு சொன்னதெல்லாம் , நம் செயல்களையும் அதன் முடிவுகளையும் அவருக்கே அர்ப்பணிப்பதன் மூலம் அவரை அடையலாம் என.  இது தோல்வியின் போது சுலபமானது ஆனால் வெற்றியடையும் போது கடவுளிடத்தில் தருவது நமக்கு கடினமாகிவிடுகிறது. வெற்றி மற்றும் புகழ், நீங்கள் அவருக்கு அர்ப்பணிக்காவிட்டால் உங்களை அடிமையாக்கிவிடும். நம் வாழ்வில் பார்கிறோம் பலரை, ஏதோ ஒரு துறையில் சாதித்தற்காக (ஒரு எழுத்தாளனோ, ஒரு நடிகரோ, ஒரு பத்திரிக்கையாளரோ) மாயையின் வசப்பட்டு எல்லாவற்றிலும் பங்கெடுத்து, தான் அறியாதையையும் பேசி சிக்கல்குள்ளாகுகின்றனர்.  ஆனால் சிலர் மட்டும் தன் நிலை பேணுகின்றனர். இரவு விருந்துகள், ஆடை அலங்காரங்கள் என அடுத்தவர் விருப்பத்திற்கும், புகழ்ச்சிக்குமாய் வாழ்வது மாயையல்லவா. இதிலிருந்து வெளியே வர உண்மையை அறிந்து உயர் கடவுளுக்கு அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்.
"

No comments:

Post a Comment