களம், அல்லது புலன்
என்றால் என்ன என்று அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்டான். அவற்றை அறிந்தவன் என்பவன் யார்? என்று
கேட்டான். அறிவு அல்லது ஞானம் என்றால்
என்ன என்று கேட்டான். ஆத்மாவின் சரீரமே
அல்லது உடலே புலனாகும் அல்லது களம் ஆகும் என்றார் பகவான். இந்த உடலைப் பற்றியும் இந்தப் புலன்களைப் பற்றி
அறிந்தவனுமே ஞானியாவான். அவற்றை அறிந்து
கொள்வதே ஞானமாகும் அல்லது அறிவாகும்.
இந்த உடலுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன. அவை, சுயச் செருக்கு, புத்தி, 10 வகை
புலன்கள், மனம், ஆசை, வெறுப்பு, மகிழ்ச்சி, வலி, புத்திசாலித்தனம், மரியாதை
போன்றவையே அந்தப் புலன்கள் ஆகும். இவை
எல்லாமே மனத்தோடு ஒன்றி இயங்கும்பொழுது செயல்பாடுகள் விளைகின்றன. பணிவு, அடக்கம், மன்னிக்கும்
குணம், குருவின் மீது
மரியாதை, தூய்மை, என்றைக்கும்
நிலைத்து நிற்றல், சுயக் கட்டுப்பாடு, பொருட்களின்
மீது பற்று வைக்காமல் இருத்தல், சுயச் செருக்கு இல்லாம, பிறப்பு -
இறப்பைப் பற்றிய துல்லியமான அறிவு, வயது
மூப்படைந்த காலத்தில் வரும் நோய்களும் வலிகளும், பிள்ளை, மனைவி, இதர குடும்ப
அங்கத்தினர்களின் பாசத்திலிருந்து விலகி நிற்றல், பிடித்ததற்கும்
பிடிக்காததற்கும் ஒரே விதமான மனப்ப்பக்குவத்தோடு பார்த்தல், ஆத்மாவைப்
புரிந்து கொள்வதில் என்றும் ஒரே நிலை, - இவை
எல்லாம்தான் ஞானம் எனப்படும். இவற்றிற்கு
எல்லாம் மாறுபட்டவை அஞானமாகும். எவன்
ஒருவன் தன் உடலுக்கும் தனக்கும் வேறுபாடு உண்டு என்பதை அறிகிறானோ ஆனால் அந்த உடலே
அவன் அறிவாகும் என்று அறிகிறானோ அவன் என்னை அடைந்து விடுவான்.
"நமது வாழ்க்கை: முகம்
-பார்க்கும் கண்ணாடியைப் பார்க்கும்பொழுது ஒன்றை கவனித்திருக்கிறாயா? எத்தனை தடவை நாம் முகம் பார்த்தலஉம், ஒரே நாளிலேயே
எத்தனையோ முறைகள் பார்க்கிறோம், மீண்டும் மீண்டும் நாம் முகம்
பார்க்கும் கண்ணாடியைப் பார்க்க நினைக்கிறோம் அல்லவா? அதுவும் அலுவலக் கழிப்பறையிலோ
அல்லது ஹோட்டல்களிலோ, ஆஸ்பத்திரியிலோ அல்லது கடைகளிலோ எங்கு
வேண்டுமானாலும் சரி, நமது புலன்களை திருப்திப்படுத்திக்
கொள்வதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிட்டால், அது ஒரு ருசிகரமான தகவலைத் தரும். நமக்கு உடலின் வெளிப்புறத்தை தூய்மையாக
வைத்துக் கொல்ள நிரம்ப நேரம் தேவைப்படுகிறது.
நமது தோற்றம், நிறம், சருமத்தின்
மீது கவனம், சருமத்தின் மீது வளரும் முடி, என்று எத்தனையோ
நம் கவனத்தைக் கவருகின்றன. (வாசனா
திரவியங்கள் விற்பவருக்கு இவை நன்மை பயக்கும்.)
அதன் பின் ருசி பார்க்கும்பொழுது நிரம்ப நேரம் செலவிடுகிறோம். விரும்பிய உணவைத் தேடுகிறோம். ஹோட்டல்களில் உண்கிறோம். நொறுக்குத் தீனிகளை நாடுகிறோம். உடலுக்கும் மனத்திற்கும் மகிழ்வைத் தேட பல
வழிகளில் முனைகிறோம். நம்மில்
பெரும்பாலோர் இந்த உடலையும் புலன்களால் எழும் உணர்வுகளை திருப்திப்படுத்த எத்தனையோ
வழிகளில் முனைகிறோம். நம்மிடமிருந்து நம்
உடல் வேறு, நாம் வேறு என்று வேறுபடுத்தி உணர்வதில்லையே. மிகவும் அரிதாகவே அப்படி உணர்கிறோம்... ஆகவே நம் உடலை ஒரு வலி வந்து தக்கும்பொழுது
உங்கள் மனத்தையும் புலன்களையும் அது வெகுவாகத் தாக்குகிறது. ஏனென்றால் உங்கள் உடலுக்கு மட்டுமே மிக அதிக
கவனம் செலுத்தி வந்திருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் புலன்கள் திருப்திப் படாத பொழுது, உங்களுக்கு
கோபம் வருகிறது. உங்கள் மனம் கட்டுப்பாடு
அற்றுப் போகிறது. (உதாரணம்: ஒரு சில நாட்களுக்கு ருசியான உணவு
இல்லாவிட்டால், உங்களுக்கு மனைவி மீதோ அல்லது உணவு தயாரிப்பவர் மீதோ கோபம்
வருகிறது.) ஒரு சிலருக்கு தங்கள் மீதே
அவ்வளவு நம்பிக்கை கிடையாது; ஏனென்றால் தோற்றத்தில் அவ்வளவு
எடுப்பாகத் தோன்ற மாட்டார்கள். இதற்கு
யார் பொறுப்பு? அவர்கள்தானே
அதற்குப் பொறுப்பு.... அறிவு அல்லது ஞானம் என்பதே உயர்ந்தது. நமது மனம் அதை நாடியே எப்பொழுதும்
சிந்தித்திருக்க வேண்டும். அதன் பிறகு
நமது உடலும் அதன் புலன்களும் அதற்குப் பிறகே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி இருந்தால், நாம்
கட்டுப்பாடு உடையவர்க்ள் ஆவோம்."
'பரமாத்மாவானவர் ஒவ்வொரு மனிதனிடமும்
குடிகொண்டிருக்கிறார்." என்றார் பகவான் கிருஷ்ணர். சிறியதோ, பெரியதோ எல்லா
உருவத்திலும் அவர் குடிகொண்டிருக்கிறார்.
அவர் எப்பொழுதும் பிரிவுபடாத நிலையில் இருக்கிறார். இருந்தும் பிரிவுபட்ட நிலையிலும் இருக்கிறார். அசையாத நிலையிலும் இருக்கிறார். அசையும் நிலையிலும் இருக்கிறார். அவரே ஒளியாகவும் இருக்கிறார். இருளாகவும் இருக்கிறார். இவற்றை எல்லாம் புரிந்துகொள்வதே ஞானம். இயற்கையிடமே எல்லா பொருட்களும் மண்டிக்
கிடக்கின்றன. அதுவே எதற்கும் காரணப்
பொருளாகும், அதாவது உயிருள்ள ஒரு பொருளாகும். அந்தப் பொருளுக்கு ஆசை, சுயச் செருக்கு, நெருக்கம், அவை
உபயோகப்படுத்தும் புலன்களின் உதவியால் செயல்பாடுகளை உருவாக்குகின்றன. அவை நல்லது கெட்டது என்றும், மகிழ்ச்சி/வலி
என்றும் தோற்று விக்கின்றன. நானே
எல்லாவற்றையும் சாட்சியாக நின்று கணித்துக் கொண்டிருக்கிறேன். நானே எதையும் அனுமதிக்கிறேன்; மகிழ்ச்சியையும்
அனுபவிக்கிறேன். மற்றும் எதையும்
அனுபவிக்காமலும் இருக்கிறேன். என்
கடமையைச் செய்து கொண்டே தொடர்கிரேன் .......
எதன் மீதும் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் தொடர்கிறேன்.
எவர் ஒருவர் இதைப் புரிந்து கொள்கிறாரோ, புரிந்து
கொண்டு செயல்படுகிறாரோ, அவர் மீண்டும் பிறப்பதில்லை. அவர் மேற்கொண்டு பிறப்புக்கள் அற்றவராகப் போய்
விடுகிறார். அவர் பரமாத்மாவின்
தரிசனத்தைப் பெறுகிறார். தன் ஆத்மாவை
அழித்துக் கொள்வதில்லை. இதனால் அவர்
கடவுளையே அடைகிறார். எவன் ஒருவன் எல்லா
ஆசைகளும் இப்படித்தான் அடித்தளத்தில் உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்கிறானோ, அவனே மிக
உயர்ந்த புனிதத்தன்மையை அடைகிறான். எவன்
ஒருவன் இந்த உடலைப் பற்றியும், உடலைப் பற்றிய அறிவையும், இயற்கையைப்
பற்றியும் வாழ்வு முறைகள் பற்றியும் அறிய முடிகிறதோ அவனே எந்த ஒரு நிலையையும்
கடந்து பரமாத்மாவிடம் சேர முடியும்.
"நமது வாழ்க்கை: "ஏன்?"
என்று
கேள்விகள் கேட்டே நமது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். அந்த கேள்விக்குக் கிடைக்கும் பதில் இருக்கும்
தர்க்க வாதத்தைப் புரிந்து கொள்கிறோம்.
அதன் மூலம் நமது அறிவு பெருகுகிறது.
குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த உத்தியைத் தான் அனுசரித்து அறிவைப்
பெருக்கி வருகிறோம். ஆகவே பெரும்பாலான
சமயங்களில் நமக்கு ஏதோ ஒரு தர்க்க ரீதியான தகவல் வேண்டி இருக்கிறது. அது நாம்
புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.
அது தரும் தகவலை அறிவு என்று கொண்டு, மனத்தில் பதிய
வைத்துக் கொள்கிறோம். அதை வைத்துக் கொண்டு
வாழத் தொடர்கிறோம். இருந்தாலும், எப்பொழுதுமே
நமக்கு அந்த தர்க்க வாதம் தேவைப் படுவதில்லை.
அதில் திருப்திப் பட்டு வாழ முனைவதில்லை.
எங்கெல்லாம் நேர்மறை அல்லது எதிர்மறை நன்மைகள் நிரம்ப இருக்கின்றனவோ
அங்கெல்லாம் இது உண்மையாகிறது. நாம்
எடுத்துக் கொண்ட நிலையில், நாம் எதையும் தர்க்க வாதம் இல்லாமல்
ஒப்புக் கொள்கிறோம். தெருவில் நடந்து
சென்று கொண்டிருக்கும்பொழுது யாரோ ஒருவர், "அடுத்த
தெருவில் எரிமலை வெடித்து சிதறிய நெருப்புக் குழம்பு தெளித்து ஓடுகிறது"
என்று சொன்னால், - பலர் காயமுற்று விட்டனர் என்று சொன்னால், அங்கு நாம்
செல்லக் கூட மாட்டோம். அப்படி ஒரு
சாத்தியக்கூறு இருக்க முடியாது என்று நமக்குத் தெரிந்தும் நாம் அங்கு செல்ல
மாட்டோம். யாரோ ஒருவர், கடவுளின்
விக்கிரகம் பாலைக் குடிக்கிறது என்று சொன்னதும் நாமும் கையில் ஒரு டம்ளர் பாலை
எடுத்துக் கொண்டு செல்கிறோம். யாரோ
ஒருவருடைய வாயிலிருந்து கடவுள் விக்கிரகம் ஒன்றை வெளியில் எடுத்து விட்டால், அதை நாம்
கடவுளின் அனுக்கிரகம் என்று உணர்கிறோம்.
இந்த இயல்பே நம் மனத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நமது புலன்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு
இருக்கிறது. யாராவது, 'ஒரு குரங்கைப்
பற்றிய சிந்தனையே வேண்டாம் உங்களுக்கு" என்று சொன்ன்வுடன் நீங்கள் குரங்கைப்
பற்றியே நினைக்கிறீர்கள். ஏனென்றால் அது
ஏன் என்று அறிந்து கொள்ளவே விரும்புகிறோம். ஒருவேளை, 'ஒரு குரங்கைப்
பற்றி நீங்கள் நினைத்தால், உடனே இறந்து விடுவீர்கள்" என்று
யாராவது சொன்னால், உடனுக்குடன் நீங்கள் அதையே
நினைப்பீர்கள். ஏனென்றால் ஒரு பயம் உங்களை
ஆட்கொள்ளுகிறது. ஏதோ ஒரு மாற்றம் நிகழுமோ
என்ற பயமே தீமை நேருமோ என்ற பெரும் பயத்தை உருவாக்குகிறது. நமக்கு ஏன் அந்த பயம்
வருகிறது? ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் நிலையில்
நாம் சுகமாக உணர்வுகளுக்கு உறுதுணையாகவே இருக்கிறோம். அதிலிருந்து நாம் நிச்சயம்
மாற விரும்பவில்லை. இருந்தாலும் நமக்கு
உடல், உறவு என்று
பலவற்றோடு கொண்டுள்ள உறவுகளிலிருந்து விலக விரும்பவில்லை. ஆகவே மாற்றங்களை நாம்
விரும்பவில்லை. ஆகவே பயம்
ஆட்கொள்கிறது. எப்பொழுது பயம் பற்றிக்
கொள்கிறதோ அப்பொழுது தர்க்க வாதம் தேவைப் படாது.
நமது அறிவு தோல்வி பெறுகிறது. ...
அந்த ஒரு நிலையில், நாம் நோய்வாய்ப்படலாம், மூட
நம்பிக்கையைக் கொள்ளலாம், சமநிலையிலிருந்து பிறழ ஆரம்பிக்கலாம். ஆகவே "ஏன்?" என்ற
கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அதை உபயோகிக்காவிட்டால், அதைப் பற்றி நாம் கவலை கொள்ள
வேண்டும். அதே சமயத்தில், தர்க்க
வாதத்தைப் பற்றி சற்றுக் கூட நாம் கவலைப் படுவதில்லை. (அதை நாம் புரிந்து கொள்ள முடியும்). அதையே நாம் அறிவாக சேமித்து வைத்துக்
கொள்கிறோம். (நெருப்பு சுடும்! அதை நாம்
சோதித்துப் பார்ப்பதில்லை. இந்த தகவலை
அறிவாகவே எடுத்துக் கொள்கிறோம்).
.... ஆகவே அறிவு என்பது நமது
உடலைப் பற்ரியோ, நம்முடைய ஒட்டுதல்களைப் பற்றியோ ஏன் எதைப் பற்றியும்
முழுமையாக இருத்தல் வேண்டும். அப்படி
நம்மிடம் உணர்வுகள் இல்லாவிட்டால், (பயம், சந்தோஷம், முதலிய
உணர்வுகள்) போன்ற உணர்வுகள் நம்மை கட்டுப்படுத்த ஆரம்பித்து கஷ்டங்களைக் கொண்டு
வரும்.
கடவுளும்
சரி, அவருடைய படைப்புக்களும் சரி, எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. . . .
அவரை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், நமது கொள்கையும் அப்படித்தான் இருக்கும். ஒரு மிகத் மெல்லிய துணுவாக இருக்கும் அணுவானது
நம் தேசத்தையே அழித்து விடும். வெகு சிறு
அளவு காற்றே எந்த ஒரு அமைப்பையும் அழிக்க வல்லது.
மிக மிக சிறிய அணுவைப் போன்ற ஒரு செல் நம் உடலையே தோற்றுவிக்க வல்லது. அப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். அப்படிப் பார்த்தால், வானம் எப்படி திறந்த வெளியாக இருக்கிறது? வெகு தூரத்திலிருந்து எப்படி பார்க்க முடிகிறது? ஆனால் அதை நெருங்கப் பார்த்தால், முடிவதில்லை.
மேலும் தள்ளிப் போய் தூரத்தில் போய் விடுகிறது. அதற்கு முடிவே இல்லை. அப்படித்தான் கடவுளும். அவருக்கு ஒரு ஆரம்பம் என்று கிடையாது.
முடிவும் என்று கிடையாது. அவரே மிக மிக சிறிய அணுவைப் போன்றவர். ஆனால் மிக மிக பெருமை படைத்த உயர்ந்தவர். அவரிடமே எல்லா இரகசியங்களையும் இருக்கச் செய்து
கொண்டு விட்டார். அவற்றின் அறிவை எல்லாம்
நம் மனத்தில் புதைத்து விட்டார்.
பிரபஞ்சத்திலும் பரவி இருக்கச்
செய்து விட்டார். அதே போல், நீரைப் போல, நீங்கள் விரும்பும் உருவத்தில் தம்மை வைத்துக்
கொள்கிறார். ஆகவே நாம் எந்த கோணத்தில்
பார்க்க விரும்புகிறோமோ அதே கோணத்தில் அவரை நாம் பார்க்கலாம். அவரை ஒரு மலராகப்
பாருங்கள்; உடனே
அவர் மலராகவே உங்களை நெருங்கி வந்து பார்ப்பார்.
அவரை ஒரு கத்தியாக மனத்தில் வரியுங்கள். அவர் ஒரு க்த்தியாகி உங்களை நோக்கி
வருவார். ஆகவே எல்லாமே உங்களைப்
பொறுத்திருக்கிறது. (நாம் என்று நான் சொல்லும்பொழுது, அது அவரையும் சேர்த்துச் சொல்வதாகும். அவரில்லாமல், நீங்க்ளும் இல்லை, நானும் இல்லை, நாமும் இல்லை.)"
No comments:
Post a Comment