Wednesday, September 7, 2016

அத்தியாயம் 10. ஆண்டவனின் புனித லீலைகளைப் பற்றிய யோகம்

மேலும்   பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொன்னவை:  எந்த ஒரு ரிஷிக்கும் அல்லது எந்த கடவுளின் உருவத்திற்கும் தன்னைப் பற்றித் தெரியாது என்றார்.  தன் மூல அவதாரங்கள் அவர்களுக்குத் தெரியாது.  அவரே வேதங்களுக்கு எல்லாம் மூலமானவர். எல்லா  கடவுள்களுக்கும் ரிஷிகளுக்கும் மூலமானவர் அவரே.  யாருக்கு பகவான் கிருஷ்ணர் பிறப்பே இல்லாதவர் என்று தெரியுமோ அல்லது அவரே இந்த மூவுலகங்களுக்கும் ஆண்டவர் என்றும் கடவுள்களுக்கு எல்லாம் மேலானவர் என்று தெரியுமோ, அந்த கொள்கையைப் பின்பற்றி வாழ ஆரம்பிக்கிறாரோ அவர் எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை பெற்றவராவார்.  ஒரு பிறப்பற்ற நிலையை அடைந்து விடுகிறார். உலகில் நடக்கும்   எல்லாவிதமான சம்பவங்களும் சரி, அல்லது அறிவு, புத்திசாலித்தனம், ஞானம், சத்தியம், பொய், வலி, பயம், இறப்பு பிறப்பு, வன்முறை, அஹிம்சை,   சமத்துவம், சமாதானம், புகழ், வெட்கம் எல்லாமே என்னிடமிருந்துதான் வருகின்றன.  அந்த ரிஷிகள். இதர தெய்வங்கள், மற்றவர்கள் எவருமே என்னால்தான் உருவாக்கப்பட்டவர்கள்.  இந்த எனது புகழை அறிந்து கொண்டவன் எவனுமே யோகத்தில் நிலைத்து நிற்பான்.  ஞானிகள் இதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.  அவர்கள் எண்ணங்கள் எல்லாமே என் மீது நிலைத்து நிற்கும்.  என்மீது பக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் பிறருக்கு எல்லாம் எடுத்துரைப்பார்கள்.  அவர்கள் எப்பொழுதும் என்னைப் பற்றியே பேசுவார்கள்.  அதில் அவர்கள் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். மற்றும் பக்தியில் திளைத்திருப்பார்கள்.  ஆதலால் யோகம் கற்கும்பொழுது என்னிடம் வருகிறர்கள்.  அவர்களுடைய் ஆன்மாவில் நான் இருக்கிறேன்.  அவர்கள் அஞ்ஞானத்தைப் போக்குகிறேன்.  ஞானத்தை அளிக்கிறேன்.  அவர்களை என்னுடன் இருக்கச் செய்கிறேன்.

"நமது வாழ்க்கை:  எல்லாவற்றிற்கும் மேலான ஒரு பரம சக்தியை ஒரு சூத்திரத்தால் விளக்கிச் சொல்லி விட முடியாது.  அல்லது வெறும் தர்க்க வாதத்தால் நிரூபித்து விட முடியாது.  ஐன்ஸ்டீன் தனது சூத்திரமான E=MC2 என்ற கணிதக் கோட்பாட்டை விவரிக்கும் முன் உலகம் அதை அறிந்திருக்கவில்லை.   ஜனங்கள் அதைப் பார்த்திருந்தால் எள்ளி நகைத்திருப்பார்கள்.  ஆனால் இன்றைக்கோ!  ஒரு கணினி இணைப்பைக் காட்டி விளக்கச் சொன்னால் உங்களால் முடியாமற் போகலாம்.   ஏன்ஏனென்றால் நாம் எதையும் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.   அதன் பின் நம்மால் அதை விளக்கிச் சொல்ல முடியும்.  ஒரு சிறிய கணினி இணைப்பையும் வடிவமைப்பு வரைபடத்தையும் புரிந்து கொள்ள 4 அல்லது 5 வருடங்கள் பிடித்தால், இந்த உலகத்தில் எல்லா உயிரினங்களையும் படைத்தவரைப் பற்றி சில நாட்களிலோ, மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ புரிந்து கொள்ள முடியுமா?  .. ஆகவே நாம் ஏன் எதையும் எள்ளி நகையாட வேண்டும் அல்லது பிறரை நம்பாமல் நகைக்க வேண்டும்நமக்கோ அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே!   ஆகவே அவரை நாம் புரிந்து கொள்ள எண்ண ஆரம்பித்தால், நாட்களிலோ, மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ கூட முடியாது என்று தெரிகிறது அல்லவா?   இல்லை.  அப்படி அல்ல.  ஒரு நிமிடமோ அல்லது நாளோ கூடப் போதும் அவரைப் புரிந்து கொள்வதற்கு.  ஏனென்றால் அவர் உங்களை தனியாக விட்டு விடுவதில்லை.  அவர் எப்பொழுதுமே உங்களுடன்தான் இருக்கிறார்.  சிக்கல் மிகுந்த எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உங்கள் மனத்திலிருந்துதான் வருகின்றன.  கேள்விகள் கேட்டு உங்கள் மனத்தையே விடை காணச் சொல்லுங்கள்.  உங்கள் மனத்திலேயே எல்லா இரகசியங்களும் அடங்கி இருக்கின்றன.  கண்டுபிடிப்புக்களும் அடங்கி இருக்கின்றன.   பதில்களும் அடங்கி இருக்கின்றன. எல்லாமே உங்களுக்குள் உள்ளடங்கியவை.  கொஞ்சம் சிரத்தையுடன் தேடுங்கள்.   கிடைத்து விடும்.  சந்தோஷமாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.  இந்த விஷயத்தில் கூகிளைப் போன்ற தேடும் எஞ்சின்கள் உதவப் போவதில்லை. (உறுதியான உளளமும் தளராத நம்பிக்கையுமே இதற்கு அடிப்படை வழிமுறைகளைக் காண்பிக்கும்.

    அர்ஜுனன் மேலும் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டான்.   பரமாத்மாவின் திவ்ய தரிசனங்களைப் பற்றி மேலும் கேட்டான்.  அவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆசைப் பட்டான்.  அதை ;அடுத்து பகவான் கிருஷ்ணரும் பேச முறபட்டார். "ரிஷிகளுக்குள் எல்லாம் நானே நாரதர்.  நானே ஆரம்பமாகவும், மத்தியிலும் முடிவிலும் இருக்கிறேன். நானே எல்லா உயிரினங்களிலும் இருக்கும் உயிராக இருக்கிறேன்.  நானே சூரியனாகவும், சந்திரனாகவும் மற்றும் விஷ்ணுவாகவும் இருக்கிறேன்.  வேதங்களில் நான் சாம வேதமாகவும் இருக்கிறேன்.  உணர்வுகளில் நானே மனமாகவும் இருக்கிறேன்.  ருத்திரர்களில் நானே சங்கரராக இருக்கிறேன்.  மலைகளில் எல்லாம் நானே மேருவாக இருக்கிறேன்.  படைத் தலைவர்களில் நானே ஸ்கந்தராக இருக்கிறேன்.  எதையும் கடவுளுக்கு முன் அர்ப்பணிப்பதில் நானே பிரார்த்தனையாக இருக்கிறேன்.  படை ஆயுதங்களில் நானே முதன்மையாக அரசனாக இருக்கிறேன்.  பாம்புகளுக்குள் நானே வாசுகியாக இருக்கிறேன்.  நானே வருணனாக இருக்கிறேன். மற்றும் நானே யமனாகவும் இருக்கிறேன்.  நான் காற்று, நானே கடல்மீன்களில் பெரியதான ஒன்றாக இருக்கிறேன்.  நானே ஓடும் நதி கங்கையாக இருக்கிறேன்.  நானே தன்னைப் பற்றியே உணரக் கூடிய விவேகமாக இருக்கிறேன்.  அதாவது நானே ஆத்ம ஞானத்தை உடையவனாக இருக்கிறேன்.  நானே எதற்கும் ஆரம்பமாக இருக்கும் அட்சரமான "அ " வாக இருக்கிறேன்.  நானே இறப்பு ஆவேன்.  நானே அதிர்ஷ்டமாக இருக்கிறேன்.  நானே எதையும் தாங்கிக் கொண்டு நினைவுகளின் மொத்த உருவத்தில் இருக்கிறேன்.  நானே மாதமாவேன்.  நானே மலராவேன்.  நானே ஏமாற்றுபவன்.  நானே சூதாட்டியாவேன்.  நானே முயற்சியின் மொத்த உருவாவேன்.  அதை அடுத்து ரிஷிகளைப் பற்றிப் பேசினார் நானே மனித முயற்சிகளின் உருவாவேன்.  நானே எல்லா கெட்ட பழக்கங்களின் உருவாவேன்.  நானே தண்டனையும் ஆவேன்.  நானே முழு அமைதியும் ஆவேன்.  நானே விவேகமும் அறிவும் ஆவேன்.   நானே ஒரு மரத்தின் விதையாவேன்.  நான் அசைவனவாகவும் இருக்கிறேன்.   நானே அசையாதனவாகவும் இருக்கிறேன். என் திவ்ய தரிசனங்களுக்கும் புனித உருவங்களுக்கும் எல்லையே இல்லை.  நான் சொன்னவை எல்லாம் சில சில உதாரணங்களே.  ஆனால் உயிருள்ளவையோ அல்லது உயிரில்லாதவையோ எல்லாமே என்னிடத்திலிருந்துதான் வருகின்றன.  இந்த உலகமும் சரி, இந்த பிரபஞ்சமும் சரி என்னுள் இருக்கும் ஒரு அங்கங்களே ஆகும்.  ஆனால் எந்த ஒரு இடத்திலும் சரி, எதிலும் சரி, நான் ஒரு முழுமையான அங்கமாக இல்லாதவனாக இருக்கிறேன்.   மீண்டும் சொல்கிறேன் - நான் எத்துடனும் நெருங்கிப் பிணைக்கப்படவில்லை.  நான் என் கடமையைச் செய்து கொண்டே செல்கிறேன்.

நமது வாழ்க்கை:   நமது அன்றாட வாழ்க்கையில் நாம், நம்மைப் பற்றியே கேள்வி கேட்டுக் கொள்வதில்லை. 'நாம் யார்நமது வாழ்க்கை என்றால் என்னநம்மை கட்டுப்படுத்துபவர்கள் யார்?" என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் கொள்வதில்லை.  நம்மைப் பற்றியோ அல்லது இந்த உலகத்தில் என்ன பங்கு வகிக்கிறோம் என்றெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.  எந்த ஒரு கேள்வியையும் நம்மைப் பற்றிநாம் கேட்டுக் கொள்வதில்லை.   இந்த உலகத்தின் ஒரு அங்கமாக நாம் ஏன் இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொள்வதில்லை.  இவ்வகை கேள்விகளைக் கேட்டுக் கொள்வதற்கு சிரமப்படுகிறோம்.  ஏனென்றால் இவற்றிற்கு எல்லாம் நமக்கு விடைகள் தெரியும்.  பொருட்களின் மீது நமக்கு உள்ள பற்றுதலை கொஞ்சம் கூடச் செய்யும்.  அது மட்டுமல்ல, பிறரோடு நாம் போடும் பொட்டிகளில் பின் தங்கி விடுவோமோ என்ற பயமும் நமக்கு உண்டு.  இவ்வகை கேள்விகளை நான் ஏன் கேட்கவேண்டும் என்று கேட்கக் கூடிய பலர் இருக்கிறார்கள்.  நான் என் வாழ்க்கையில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  குழந்தைகள் உண்டு.  எனக்கு செல்வங்களும் உண்டு.  பின் ஏன் எதைப் பற்றியும் நான் கவலைப் பட வேண்டும்?   தவிரவும் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பதில் நேரம் வீணாகத்தான் போகிறது.   எதையும் புரிந்து கொள்வதை விட்டு விட வேண்டுமென்றாலும் சரி, அல்லது பரமாதமாவைப் பற்றி தெரிந்து கொள்வதை தவிர்த்தாலும் சரி, நல்ல காரியங்களைச் செய்து கொண்டு வாழ்க்கையை இப்படியே வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, எறுமைப் போல, குரங்கைப் போல, ஓனாயைப் போல, ஒரு தாவரத்தைப் போல அல்லது பறவையைப் போல அல்லது வேறு எந்த உயிரினத்தைப் போலவாவது வாழ்ந்தால், நீங்கள் சொல்வது முற்றிலும் சரி என்று ஒப்புக் கொள்கிறேன்.   ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.  உங்களுக்கும் மகிழ்ச்சி, சோகம், வெற்றி, தோல்வி என்று எல்லாம் வந்து சேரும்.  வேறு எவரும் அந்த பரமாத்மா நிர்ணயித்தபடி வாழும் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பீர்கள்.  ஒரே ஒரு வேறுபாடு ஒன்றுதான் இருக்கும்.   அதாவது எவர் ஒருவர் பரமாத்மாவின் புனிதத் தன்மையை உணர்கிறார்களோ அவர்கள் எல்லோரும் மன அமைதி குன்றி வாழ மாட்டார்கள்.  எந்த ஒரு சமயத்திலும் எந்த சில சம்பவங்களும் அவர்களை பாதிக்காது.  பிறந்த எல்லோருமே பரமாத்மா நிர்ணயித்தபடி வாழ்வதில்லை.   அப்படி என்றால் இந்த வாழ்க்கைச் சூழலில் எந்தவித சமநிலையற்ற தன்மை இருக்கவே இருக்காது.   ஏனென்றால் ஒவ்வொருவருமே பிறப்பே இல்லாத நிலையை அடைந்து விடுவர்.  இந்த பூமி வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.  ஆனால் அந்த சுழற்சியை நாம் உணர்வதில்லையே.  அதே போல் சூரியன், "உதிக்கிறது" என்கிறோம்.  "மேற்கே மறைகிறது" என்கிறோம். நம் எல்லைகள் அவைதான்.  பகவானை உணர்வதற்கு நல்ல தீர்மானமான உள்ளமும் நம்பிக்கையும் அவசியம் வேண்டும்.  அவை இல்லாமல், வாழ்க்கை என்று ஓடிக் கொண்டுதான் இருக்கும்.   அந்த வாழ்க்கையில் நடப்பது எல்லாமே, "நம்"முடைய செயல் என்று நம்பிக் கொண்டிருப்போம்.   அதனால், "அறியாமையே இன்பம்" என்று பெருமையாகப் பறை சாற்றிக் கொண்டு இருக்கலாம்.

     ஆனால் பகவானைப் புரிந்து கொண்டவர்கள் மட்டும் பரமாதமாவின் எல்லையற்ற தன்மையேதான் எல்லாம் என்பது தெரியும்.  அவர்கள் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும், ஜனங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதும், செயல்பாடுகளில் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் சுற்றிலும் பார்க்கக் கூடியவற்றோடு இருக்கும் எந்த உறவுகளும் சரி, எல்லாம் ஒரு முழுமையை அடைந்தவை.  ஆனால் அவரே தன் கடமையைச் செய்கிறார்.  தனக்குள்ளேயே இருக்கும் கடவுளை உணர்ந்து பார்க்கிறார்.

    ஒரு வகையான மனப்பாங்கை அடைவது சுலபம்.  இது ஒரு சிலருக்கு சாத்தியப்படும்.  வேறு சிலருக்கு கொஞ்சம் அனுபவம் வேண்டும்.  இந்த மனம் என்பது ஒரு பழக்கத்திற்கு உட்படுவதாகும்.  அதன் செயல்பாடுகள் அப்படித் தான் இருக்கும்.  குற்றத்தை அடைப்படையாகக் கொண்ட திரைப்படங்களை ஒரு வருடத்திற்குத் தொடர்ந்து நீங்கள் பார்த்து வந்தால் போதும், நீங்கள் அதன் பின் பார்க்கும் இடமெல்லாம் குற்றம் புரியும் இடமாகவே தோன்றும்.  நீங்கள் மதத்தையே பிரசாரம் செய்யும் டி.வி. சேனல்களையே பார்த்து வந்தால், அவற்றைப் பற்றியே பேச ஆரம்பிப்பீர்கள்.  

No comments:

Post a Comment