Tuesday, September 20, 2016

அத்தியாயம் 16: புனிதமும், இராட்சஸ குணமும் நிறைந்த யோகம்.

'இயற்கை இருவகைப்படும்" என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்னார்.  ஒன்று புனிதமானது.  மற்றொரு இராட்சஸத் தன்மையைக் கொண்டது.  தூய்மை, பயமற்ற தன்மை, நிலைத்து ஒரே நிலையில் நிற்றல், ஆத்மாவைப் பற்றித் தெரிந்திருத்தல், ஆடம்பரமே இல்லாத எளிமையான தன்மை, சத்தியம், அஹிம்சை.  கோபமே வராத குணம், பக்குவமும் பணிவும், மன்னித்து அருளும் தன்மை, சக்தி, செருக்கு இல்லாமை, போன்றவையே புனித குணங்களாகும்.   கோபம், அறியாமை, தன்னையே புகழ்ந்து கொள்ளுதல், தூயமையில்லாமை, சத்யத்தோடு ஒழுகாமல் இருத்தல், ந்ல்ல குணங்களோடு இல்லாமல் இருத்தல், அநதந்த கணங்களில் தன் சுய சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருத்தல், போலியான நம்பிக்கை, புலநின்பங்களில் ஒரு தீவிர பற்றுதல், வெறி மிகுந்த கோபம், சோகப்படுதல், அநீதியான வழியில் செல்வம் சேர்த்தல், அதை வைத்து புலனின்பம் நாடுதல், எதிர்காலத்திற்காக மேலும் மேலும்  செல்வம் சேர்த்துக் கொண்டே போதல் (சில விடுபட்டிருக்கின்றன)........  இவை எல்லாம் இராட்சஸ குணங்களைச் சாரும்.    அத்துடன் இராட்சஸ குணம், சுயச் செருக்கைக் கொண்டு வருகிறது, பேராசையும், அனாவசிய பெருமிதத்தையும், பொய்யான தியாகங்களையும், போலியான நம்பிக்கைகளை வைத்திருத்தல், மற்றும் பழக்கங்களுக்கு அடிமையாதல்புலன்களின் இன்பத்தை நாடுதல், தன்னையே மரியாதை செய்து கொள்ளுதல், வெறியுடன் ஒன்றையே பற்றி நிற்றல், அதிகார துஷ்பிரயோகம் என்பன வெல்லம இராட்சஸ குணங்களைச் சேர்ந்தவை.  இந்த குணங்களோடு இருப்பவர்கள் கடவுளையும் நேசிப்பதில்லை.  தங்கள் உடல்கள் மூலம் என்னையும் பார்ப்பதில்லை அல்லது பிறர் உடல்களின் மூலமும் என்னைப் பார்ப்பதில்லை.   இவ்வகையில் தீங்கே அல்ல்து தீமைகளையே செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் இராட்சஸர்களுக்க்கு நடுவில்தான் பிறக்கிறார்கள்.  அவர்களுடைய செயல்களினால், இந்த இராட்சஸ குணமுடையவர்களால் என்னை அடையவே முடிவதில்லை.  பேராசை, கோபம் மற்றும் அதிகமான பாலியல் ஆசைகள் எல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை.  அப்பொழுதுதான் அந்த இராட்சஸ குணங்களிலிருந்து விடுபட முடியும்.   இந்த இருள்நிறைந்த நிலையிலிருந்து வெளியே வருபவர்கள் தமக்கும் சரி, பிறருக்கும் சரி, நல்லவற்றையே செய்து கொள்ள முடியும். இவற்றை எல்லாம் தவிர்க்கக்கூடியவர்கள் இருளில் எதையும் செய்ய முடியாது.  எப்பொழுதும் எதிலும் ஒரு முழுமையை அடைய முடியாது.  சந்தோஷத்தையும் அடைய முடியாது.  அத்துடன் பரம உயரத்தில் இருக்கும் ஆன்மிக இலக்கையும் அடைய முடியாது.


     "  நமது வாழ்க்கை:  நாம் சற்று எண்ணிப்பார்ப்போம்.   மூன்றே மூன்று செயல்பாடுகளில் நம்மைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் சற்றே எண்ணிப் பார்ப்போம்   ... வேண்டுமானால் 1 லிருந்து 60 வரை எண்ணுவோம்.  .. அவற்றில் ஒன்றைப் பற்றிக் கூட நாம் பெருமை கொண்டு வாழ்ந்தொஒமானால், நாம் இன்னமும் கீதையைப் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.  நம்மைப் பற்றிப் பெருமைப் பட்டுக் கொள்ள நமக்கு ஒன்றும் இல்லை.    எல்லாமே அந்த பரமாதமாவிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.   அல்லது நாம் எல்லோரும் அவ்வளவு நல்லவர்கள் அல்ல என்று எண்ணவே தேவையில்லை.  புனித குணங்களின் சேர்ப்போ அல்லது இராட்சஸ குணங்களோ தனிப்பட்ட முறையில் ஒரே மனிதரிடம் குவிந்து கிடப்பது அல்ல.  அவை ஒரு கலவையாக இருக்கலாம். ஒருவர் சமூகத்தில் வகிக்கும் நிலை, பணம், அதிகாரம், போன்றவை எல்லாம் வெகு சுலபமாக, பேராசை, துஷ்பிரயோகம், மற்றும் வீண் பெருமை இவற்றைத் தானே கொண்டு வந்திருக்கின்றன.   இந்த குணங்களுக்கு மனிதர்கள் இரையாகி விடுகிறார்கள்.  ஒரு வாயிற் காப்பாளர் தன்னுடைய சிறிய அதிகார நிலையிலேயே பெரும் கர்வம் மற்றும் அகந்தையைக் காட்டலாம்.  ஒரு அதிகாரிக்கு இது வரும்.  ஒரு அரசியல்வாதி அப்படி நடந்து கொள்வார்.  நமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை நாம் நம்மை அறியாமலேயே துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கலாம்.  நமக்கு திருப்தியைக் கொண்டு வருவதற்காக அப்படிச் செய்து கொண்டிருக்கலாம். அவற்றை எல்லாம் முழுமையாக நம்மிடமிருந்து ஒதுக்குதல் வேண்டும்.  நம் ஆன்மிகத் தொடர்பிலிருந்து அவற்றை அகற்றுதல் வேண்டும்.  அதை ஏன் செய்ய வேண்டும்?   ஒரு கோவிலோ அல்லது மசூதியோ தொழுவதற்கு ஏற்ற இடம்.  அமைதியாக தொழுதல் நடக்க வேண்டிய இடம் அது.  எங்கெல்லாம் அந்த இடங்கள், வருவாயைத் தேடும் இடங்களாகி விட்டனவோ ஜனங்கள் அமைதி உணர்வை இழந்து, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு, பூஜை புனஸ்காரங்கள் செய்ய முற்படுகின்றனர்.   (கோவிலுக்குச் செல்வது ஒரு கடமையாகி விட்டது.   அங்கு நிறைந்திருக்கும் பரமாத்மாவைப் பற்றி நினைப்பதை விட ஒரு கடமையாகக் கருதி கோவிலுக்குச் செல்கிறோம்.)   இவை எல்லாம் புனித காரியங்களா அல்லது இராட்சஸ செயல்களின் மறு உருவங்கலா?   நம் எல்லோருக்குமே இதற்கு பதில் தெரியும்.    ....  நாம் செய்து கொண்டிருப்பவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்தால், நம்மிடம் இராட்சஸ குணங்களும் குடிகொண்டிருப்பதை அறிகிறோம்.  நிரந்தரமாகவும் முழுப் பிரக்ஞையுடனும் அவற்றை எல்லாம் நாம் வெட்டி அகற்ற வேண்டும்.  ...  எவரெவருடன் எல்லாம் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்என்பதை சற்றே எண்ணிப் பார்ப்போம்.   ... மனைவியா, தாயாரா , நண்பர்களா அல்லது குழந்தைகளா?   ....!!!! இதற்கு பதில் ஒன்று தான்    அதாவது இவர்களில் ஒருவரிடமும் கூட நாம் இணைந்து இருந்ததில்லை.  ஆனால், நம்முடனேயேதான் என்பதுதான் சரியான பதில்.  அதாவது மேற்கண்ட இராட்சஸ குணங்கள் யாவும் நம்மிடையே இருந்தால், நமக்கு நாமேதான் முதல் எதிரி என்று புலனாகிறது.

No comments:

Post a Comment