Tuesday, September 20, 2016

அத்தியாயம் 15 - பரமாத்ம சொரூபத்தின் யோகம்

வேதங்கள் யாவும் ஆலமரத்தைப் பற்றிச் சொல்கின்றன என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னார்.  அது தலை கீழாக வளர்கிறது.  வேர்கள் வானத்தை நோக்கி வளர்கின்றன.   கிளைகள் பூமியை நோக்கி, நீள்கின்றன.  வேர்களின் மேல் பாகமே வேதங்கள் ஆகும்.  கிளைகளில் அந்த மூன்று குணங்களைப் பார்க்கலாம்.  கீழே செல்லும் வேர்கள் மனித சமூகத்தை அடைகின்றன.   அதன் ஆரம்பத்தையும் சரி, முடிவையும் சரி, மக்கள் அறிவதே இல்லை. ஆனால் இந்த மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்பதை அறியவே வேண்டும்.  அதற்காக உபயோகிக்கும் ஆயுதம், 'விருப்பு வெறுப்பு அற்ற தன்மை' ஆகும்.  அதைக் கொண்டே கடவுளை அடைய முடியும்.   பகவான் கிருஷ்ணர் மேலும் சொன்னது - " இந்த உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாமே என் அங்கங்களே.   புலன்களோடும், புலனறிவோடும் குணங்களோடும் அவர்கள் ஒரு தத்துவத்தின் பெயரில் வாழ்கிறார்கள்.  இந்த புதிய உடலுடன், தனிப்பட்ட ஒருவருக்கு வகை வகையான காதுகள், கண், நாக்கு, மூக்கு மற்றும் புலன்கள் என்று அடைகிறார்.  புதிய புலன்களின் அறிவைக் கொண்டு, உடல் மீண்டும் மீண்டும் செயல்களில் ஈடுபடுகிறது.  எவரும் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில்லை.  தன்னுடைய குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதில்லை.  அத்துடன் தன் ஆன்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வதில்லை அது எப்படி புதிய உடலுக்குள் புகுந்து கொள்ளும் என்பதையும் அறிந்து கொள்வதில்லை.  இருந்தாலும், தன் ஆத்மாவைப் பற்றிப் புரிந்து கொண்டவன் இதை தெளிவாக உணரலாம்.  சூரியனின் ஒளியோ, நிலவொளியோ அல்லது நெருப்பின் ஜுவாலையோ என் மீதுதான் விழுகின்றன.   நான் ஒவ்வொரு கிரகத்திற்குள்ளும் பிரவேசிக்கிறேன்.   அவற்றை எல்லாம் முறையான வட்டங்களில் சுற்ற வைக்கிறேன்.  நானே உணவை ஜீரணிக்கும் நெருப்பாவேன்.  வாழ்க்கையின் காற்றே நான்தான்.  நானே தாவரங்களை அவற்றிற்குக் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டு வலுவாக வளர வைக்கிறேன்.   நான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் குடிகொண்டிருக்கிறேன்.  என்னிடமிருந்துதான் நினைவுகளோ, மறதியோ அல்லது எதுவுமே வருகிறது.  நான் எல்லா வேதங்களின் மூலமும் அறியப்படுகிறேன்.  நானே எல்லா வேதங்களையும் அறிந்தவனாகிறேன்.  அழியக் கூடிய பொருட்களைக் கொண்ட இந்த உலகமோ அல்லது அழியாத ஆன்மிக உலகமோ எல்லாமே என்னிடத்திலிருந்துதான் வருகின்றன.  நானே பரப்பிரும்மம் ஆவேன்.   நானே பரமாத்மா எனப்படுபவன்.   நானே எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவன்.   இதை அறிந்தவனும் என்னுள் வசி9ப்பவனுக்குமே இனி பிறப்பு என்பது கிடையாது.


     "நமது வாழ்க்கை:  நான் இதைப் படிக்கும்பொழுது, ஒரு புதிய உடல், புதிய காதுகளுடனும்,கண், நாக்கு, மேலும் புதிய ஆன்மிகக் கொள்கைகள் - முன்ஜன்ம வாழ்க்கையைப் பொறுத்து அமைந்தவை - பிறக்கக் காண்கிறேன்.  இதில் இருக்கும் பேருண்மை என்னவென்றால், அவை இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை. 500+ கோடி ஜனங்கள் ஒவ்வொருவருடைய கை ரேகைகளும் வித்தியாசமாக இருக்கின்றன.  இதற்கு முந்தைய 400 கோடி ஜனங்களுடைய கை ரேகைகளும் ஒவ்வொன்றும்   வித்தியாசமாக இருந்தன. இதேதான் உண்மை - அதற்கு முந்தைய சந்ததிகளுக்கும் இதுவே உண்மை.  இது ஒரு பேராச்சரியமான தனித்தன்மையான அடையாளமாக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.   இதுவே கண் விழிகளுக்கும் பொருந்தும்.  அவை ஏன் ஒன்றாகவே இருக்கக் கூடாது.   குறைந்த பட்சம் உதாரணத்திற்கு சிலர் என்று கைக்கு வந்தவாறு தேர்ந்தெடுத்துப் பார்க்கும்பொழுது!   அவை ஏன் ஒன்றாக இருப்பதில்லை?    இப்படி தனிப்பட்ட வடிவமைப்பு எப்படி சாத்தியமாக ஆயிற்றுவெறும் கண்களுடன் அவை எல்லாமே பார்ப்பதற்கு ஒன்றாகவே தோன்றுகின்றன.  1.5 அங்குலத்திற்குள் - கட்டைவிரல் அகலம் - காணப்படுகின்றன.  அதே போல் இந்த உலகத்தில் 7 நபர்கள் ஒன்றாக இருக்கிறார்கள் என்றும் சொல்கிறோம். இருந்தாலும் இதுவரை நாம் அப்படிப் பார்த்ததில்லை.  பிறக்கும் இரட்டைக் குழந்தைகளிடம் கூட வேறுபாடுகள் காணப்படுகின்றன.  இதை எல்லம் உருவாக்கியது யார்? அல்லது வடிவமைத்தது யார்?   'கிளோநிங்'கைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.  அதுவும் ஒரே நபரின் செல்களிலிருந்தே உருவாக்கப்படுகிறது.... அது க்ஸீராக்ஸைப் போன்ற வழிமுறை.  அதே போலத்தான் டார்வினின் பரிணாமக் கொள்கையைப் பற்றியும் படிக்கிறோம்.   நான் தனிப்பட்ட வகையில் அதை இரசித்துப் படிக்கிறேன்.  மற்றும் அதைப் பற்றி சிந்திக்கிறேன்.  அதில் நான் கண்ட மிக இரசனையான உண்மை என்னவென்றால், அண்டைய உயிரினங்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையை அது எடுத்துக் காட்டுகிறது.   இருந்தாலும், எந்த ஒரு பரமாதமாவான கடவுளின் உதவியில்லாமல் உயிரினங்கள் எல்லாம் பிறந்து விட்டன அல்லது பரிணாமம் நடந்து விட்டது  என்று அது சொல்லவில்லை.    அப்படி நடக்கவும் முடியாது.   இந்த உலகின் பல காலக் கட்டங்களில், கடவுள் வித்தியாசமான உருவங்களை மேற்கொண்டார்.  வித விதமான மிருகங்களைப் படைத்துக் கொண்டே போனார். ஒரு சில கால கட்டங்களில் மனிதன் கூட வாழ்ந்து வந்திருக்க மாட்டான்.  .   க்டந்த 2000 வருடங்களில், நமது சரித்திரம் தெளிவாக இருக்கிறது.  ஆனால் எந்த பரிணாமத்தையும் நாம் பார்க்கவில்லை.  ஏதொ ஒரு புதிய மிருகம் உண்டானதாக கேள்விப்படவில்லை.  குறைந்த பட்சம் 5000 வருடங்களுக்குக் கேள்விப்படவே இல்லை.  இது நிச்சயம்.  இவை எல்லாம் பரிணாமத்தாலேயே ஏற்பட்டவி.  நாம் சற்றே மாறுபட்ட உருவான மனிதனை எதிர்பார்த்திருக்கலாம்.  ஆனால் நாம் எல்லோருமே ஒரே வகையினராகத் தான் இருக்கிறோம்.   இவை யாவும் நமக்கு ஒன்றைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.   அதாவது ஒரு பரமாத்மாவானவர், எல்லா உயிரினங்களையும் உருவாக்கி அவை எல்லாவற்றையும் பேணி வருகிறார்.  இந்த உலகில் வாழும் உயிரினங்கள் எல்லாவற்றின் மீதும் அவருக்கு ஒரு முழுமையான பார்வை இருக்கிறது.   அவற்றின் உயிர்கள் மீதும் அவருக்கு முழுமையான பார்வை இருக்கிறது.   மீண்டும் மீண்டும் உருவாக்கி மற்றும் அழித்தும் மற்றும் மாற்றை அமைத்தும் செய்து கொண்டே இருக்கிறார்.   மேலும் புதிய புதிய உயிரினங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன.  இருந்தாலும், வாழ்க்கையை வாழ்ந்துகொண்டும், ஒருவரோடு ஒருவர் ஒப்பனை செய்து கொண்டும், வேடிக்கைகள் பல செய்து கொண்டும் இருப்பது நமக்கு முக்கியம்.   நாம் ஒரு பரமாதமாவானவரால் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி நமக்கே முழு பிரக்ஞை இல்லை.  நாம் மட்டும் அல்ல, இந்த உலகம் முழுவதுமே அப்படித்தான் இருக்கிறது.  இதை நாம் செய்வதற்குக் காரணம், அந்த பரமாதமாவானவர் நம்மை விட்டு வெளியே இருக்கிறார் என்று எண்ணி வருவதால்தான்.  நமது வாழ்க்கையின் நிமித்தம் நாம் மேற்கொண்டு செயல்களைச் செய்து கொண்டே இருக்கிறோம்.  ஆமாம்...   நாம் எல்லா கடமைகளையும் சரி, எந்தவித பற்றுதல்கள் அல்லது ஒட்டுதல் இல்லாமல் செய்து கொண்டு, நம்முள் இருக்கும் அந்த பரமாத்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டும் வாழ்ந்து வரலாம்.

No comments:

Post a Comment