எதிர்பார்ப்புக்களின்
ஒரு சுருக்கம்: இந்த அத்தியாயத்தைப்
படிக்கும் முன் எவருக்கும் கொஞ்சம் கற்பனை தேவை என்பதைச் சொல்கிறேன். ஆகவே இப்பொழுது நாம், "சூரியனை"
மனத்தில் கற்பனை செய்து கொள்வோம். ஒரி சில
வினாடிகள் எடுத்துக் கொள்வோம். சரியா? அந்த சூரியன் எவ்வளவு பெரியது என்று நினைத்துக் கொண்டோம். அது ஒரு காகித அளவு இருக்குமா அல்லது கட்டிட
அளவா அல்லது ஒரு மலை போன்றதா? நம் கற்பனை
ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை. உண்மையில்
நேரிடையாக நாம் சூரியனைப் பார்க்கிறோம்.
வெகு தூரத்தில் இருக்கும் அந்த சூரியன்.
அது ஒரு காரின் டயரைப் போன்றதாக தோன்றுகிறது. ஆனால் பல லட்சம் அல்லது கோடி அளவு உங்கள்
கற்பனையைவிட அது பெரியது. நீங்கள்
நினைத்துக் கொண்ட அளவையே மேலும் 100 மடங்காக்கிப் பாருங்கள். அதன் பின் 1000 மடங்காகவும், அதன் பின் 2
மில்லியன்கள் மடங்காகவும் ஆக்கிப் பாருங்கள்.
அப்பாடியோவ்... நினைவு
போதவில்லை. மூளையால் அந்த உருவத்தை
ஜீரணித்து அறிய முடியவில்லை. மீண்டும் உங்கள்
மூளையைத் தட்டிவிட நினைக்கிறீர்கள்.
இதுவே கற்பனையின் எல்லையும் உண்மையுமாகும். ஆனால் நாம் எவருமே நமக்கு மயக்கமாகத் தெரிந்த
உருவங்களுடன்தான் வாழப் பிரியப் படுகிறோம்.
மீண்டும் சொல்ல வேண்டுமானால், இந்த கற்பனையின் சக்தி இந்த அத்தியாயத்தைப் படிக்கும் முன் உங்களுக்குத்
தேவை என்பதை சொல்லி விடுகிறேன்.
அர்ஜுனன்
இப்பொழுது பகவான் கிருஷ்ணரிடம் பதில் சொல்லும்பொழுது, தனக்கு இருந்த மயக்கமான நிலை இப்பொழுது இல்லை என்றான். ஒரு பொருள் விளங்காத நிலை விலகி விட்டது
என்றான். பகவான் கிருஷ்ணரே எல்லாமாக
இருப்பதை உணர்ந்து கொண்டான். அதை அடுத்து
தான் பார்க்கும் எல்லா உருவங்களிலும் கடவுளையே பார்க்க விரும்பினான். அதாவது கடவுளே சொல்லி இருப்பது போன்ற ஒரு
நிலையைக் காண விரும்பினான். ஒரு புனிதமான
உருவம் லட்சோப லட்சம் வகையான பொருட்களை அதனுள் கொண்டது என்றார். வெவ்வேறான நிறங்கள், வெவ்வேறான வடிவங்கள் மற்றும் கடவுள்கள், உயிரினங்கள் மற்றும் எல்லாமே அவற்றுள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் எவரும் இதற்கு முன் பார்த்ததே
இல்லை. எதை எல்லாம் அர்ஜுனன் பார்க்க
விரும்பினானோ , எல்லாமே, காலம், பூகோளம், இரகசியங்கள் மற்றும் உருவங்கள் - எல்லாவற்றையும் அர்ஜுனன் அதில் பார்க்க
முடியும்., என்றார் பகவான் கிருஷ்ணர். அப்படி
எல்லாவற்றையும் பார்ப்ப்தற்கு அர்ஜுனனுக்கு ஒரு புனிதமான பார்வை ஒன்று வேண்டும்
என்றார், பகவான் கிருஷ்ணர். அதையும்
அவனுக்கு பகவான் கிருஷ்ணர் அளித்தார்.
அதன் பிறகு எங்கெங்கும் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உருவத்தை
அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் காட்டினார்.
கால வரமப்ற்றதும் எதையும் உள்ளடக்கியதுமான அந்த உருவத்தை பகவான் கிருஷ்ணர்
காட்டினார்.
"நமது
வாழ்க்கை: எனக்கு இது முன்பே
தெரியும். அந்தக் காட்சியைக் காண தனிச்
சிறப்பு வாய்ந்த கண்ணாடிகள் தேவை என்றது போன்ற உண்மையை நான் அறிவேந். .. ஹ§ம்... அதுவும் சிறப்பான சில
திரைப்படங்கள், முப்பரிமாணங்களைப் பார்க்க உதவும் கண்ணாடிகளோடு பார்க்கவில்லைய் என்றால், என்னால்
எதையும் பார்க்க முடியாது. உண்மையில் நாம்
பார்ப்பனவெல்லாம், சற்றே புகை படர்ந்தாற்போல தெளிவாக இருக்காது. ஆனால் கண்ணாடியை அணிந்ததும் முப்பரிமாணம்
தெளிவாகப் புலப்படும். அதே போல் படங்களை
டீ.வி.யில் பார்க்கும்பொழுது, எல்லா நிகழ்வுகளையும் அந்த 9 திரைகளில் ஏதோ ஒரு தருணத்திலேயே பார்த்து அறிய
முடியவில்லை. இருந்தாலும் அந்த சமயங்களில் டீ.வி.யில் எல்லா காட்சிகளும் ஓடிக்
கொண்டுதான் இருக்கும். அதே போல் என்
கண்கள் சுமார் 180 டிகிரிக் கோண விலாசத்தைக் காண வல்லது. ஆனால் அந்த பரப்பளவை முழுக்க என்னால் மனம்
குவித்துப் பார்க்க முடியாது. அவற்றை மனம்
எப்படியோ புரிந்து கொள்ளும். இருட்டில்
என் கண்களுக்கு எதுவும் புலப்படாது. ஆனால்
சிறப்பான ஒரு பைனாகுலரால் எல்லாவற்றையும் காண முடியும். இத்தனைக்கும் கண்களைப் போல ஒரு தானியுங்கியான
வகையில் குவித்துப் பார்க்கக் கூடிய லென்ஸ் வேறு ஒன்றும் கிடையாது. இதைப் போல வேறு ஒன்று இன்னமும்
உருவாக்கப்படவில்லை. இப்பொழுது எனக்குப்
புரிகிற்து - அர்ஜுனனுக்கு ஏன் சிறப்பான ஒரு புனித கண் தேவைப்பட்டது என்று ..."
அந்த எல்லையற்ற உருவம், பல்லாயிரம்
வாய்களைக் கொண்டதாக இருந்தத். பல்லாயிரம்
கண்களைக் கொண்டதாக இருந்தது. அதன் மேல்
எங்கு பார்த்தாலும் புனித நகைகளையே கண்டான் அர்ஜுனன். ஆயிரம் ஆயிரம் கைகளில் எண்ணற்ற ஆயுதங்கள். அந்தக் கைகளில் எத்தனையோ மாலைகளையும் எண்ணற்ற
நிறங்கள் கொண்ட ஒளியையும் கண்டான். ஏதொஒ
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூடியது போலத் தோன்றியது. எங்கு பார்த்தாலும் ஆயிரம் ஆயிரம்
முகங்கள். அதில் அர்ஜுனன் எண்ணற்றவற்றைப்
பார்த்தான். பகவானைப் பார்த்து சொன்னான். "எல்லா தெய்வங்களையும் நான்
உன்னிடத்திலேயே பார்க்கிறேன். பல எண்ணற்ற
வகையான முகங்களைப் பார்க்கிறேன். எத்தனையோ கைகள், வயிறுகள் பார்க்கிறேன். எந்த
இடத்தில் ஆரம்பம் என்று தெரியவில்லை.
எங்கு மத்திய நிலை இருக்கிறது என்றோ முடிவு எங்கு என்றோ என்னால் காண
முடியவில்லை. எந்த ஒரு இடத்தை நான்
மேற்கோளாகக் காட்ட முடியும் என்று தெரியவில்லை.
எந்த கோணத்தை நான் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம் என்றும்
தெரியவில்லை. எல்லாமே எங்கும் பரவி
நிற்கிறது. ஆயிரம் ஆயிரம் மலர்கள், ஒளிக் கீற்றுக்கள் எல்லாம் எங்கெல்லாமோ பரவி நிற்கின்றன. அவை எல்லாவற்றையும் வேதமே உருவாக்கியது. அவை எல்லாவற்றையும் நீக்க முடியாது. சூரியனையும், சந்திரனையும் மற்றும் எத்தனையோ கிரகங்களையும் நான் பார்க்க முடிகிறது. இவை எல்லாவற்றையும் உங்கள் உடம்பிலே
பார்க்கிறேன். அங்கிருந்துதான் இந்த
பூவுலகத்திற்கு வரும் தீ, காற்று, நீர் - இவற்றின் முகங்களை நான் உங்கள் உடம்பில் பார்க்கிறேன். அந்த உருவம்
கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அதே
சமயத்தில் பிரமிப்பையும் பயத்தையும் ஊட்டுகிறது.
முனிவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்
பார்க்கிறேன். இராட்சசர்கள் எங்கேயோ
கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
படை வீரர்கள், மிருகங்கள், தொழிலாளர்கள், பறவைகள், பாம்புகள், நல்ல
காரியங்கள் மற்றும் எத்தனையோ உங்கள் வாயிருந்து வரக் கூடியவை எல்லாவற்றையும் பார்க்கிறேன். என் சொந்தக் காரர்கள் யாவரும் உன் வாய்க்குள்
சென்று மடிந்து கொண்டிருக்கிறார்கள்.
நல்லவர்களும் சரி கெட்டவர்களும் சரி, வெவ்வேறான வகையில் நடத்தப்படுவதை நான் பார்க்கிறேன். அவர்களுக்கு வேறொரு வாயில் புதிய பிறப்புக்கள்
உண்டாவதைப் பார்க்கிறேன். இந்த உலகத்தின் கடந்த கால நிகழ்வுகள் எல்லாவற்றையும்
நான் பார்க்கிறேன். தீப்பிழம்பு போல
இருக்கும் உங்களுடைய நெருப்பான முகத்தை பார்க்கிறேன். எல்லா உயிரினங்களையும் அது அழுக்கும். இவற்றை எல்லாம் நான் பார்த்து பிரமிப்பும்
பயமும் கொள்கிறேன்.
அர்ஜுனன்
கண்ட விஸ்வரூபம்
"நமது வாழ்க்கை: அர்ஜுனன் என்பவன் என்னையும் உன்னையும் அல்லாது
வேறு ஒருவனும் அல்ல. அவனே கடவுளின் இந்த
பரமாத்ம சொரூபத்தைப் பார்த்தவன். அவனால்
அந்தக் காட்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒருவேளை அந்தக் காட்சியை மேலும் ஒரு திண்மையுடன் தெளிவாகப் பார்க்க ஒரு
உபகரணம் வேண்டுமோ என்னவோ? அல்லது அதை
விட சிறந்தது ஒன்று வேண்டுமோ? நிச்சயம்
இப்பொழுது இருப்பதை விட அது மேம்பட்டு இருக்கும்.
...இப்பொழுது என்னைக் காட்டும் அந்த பரமாத்ம சொரூபமானது அது ஒரு டிஸ்னியின்
படத்தைப் பார்ப்பதை விட மேலாக இருக்கிறது.
அல்லது ஒரு அவதாரத்தைக் காட்டும் திரைப்படத்தை விட மேலாக இருக்கிறது. அதிலிருந்து வரும் ஒளி மிக் மிக
கவர்ச்சியாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் இருக்கிறது. வானிலிருந்து பூமி வரை நீண்டு
இருக்கிறது. பரமாத்மாவுக்கு ஆயிர்ம்
ஆயிரம் முகங்கள் - ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் - இருந்தன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் சருமத்தைக்
கொண்டதாக இருந்தன. செயல்பாடுகளும் வேறு, உருவமும்
வேறாக இருந்தன. அதில் நாம் ஒரு முகத்தில்
அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் பார்க்க முடிந்தது. மற்றொன்றில் இமாலய மலையையும் ஆல்ப்ஸ்
மலையையும் இன்னொரு முகத்தில் பார்க்க முடிந்தது.
பனிவிழும் ஆர்க்டிக்கை ஒரு முகத்தில் பார்க்க முடிந்தது. இன்னொரு முகத்தில் சஹாரா பாலைவனத்திலிருந்து
காலஹரி பாலைவனம் வரை பார்க்க முடிந்தது.
எல்லா அணு ஆயுதங்களையும் ஒரு முகத்தில் பார்க்க முடிங்ஹது. எரிமலைகளை எல்லாம் மற்றொரு முகத்தில் பார்க்க
முடிந்தது. இப்படி எத்தனை எத்தனையோ. அத்துடன் எல்லா 500 கோடி மக்களையும் ஒரே
வீச்சில் ஒரே சமயத்தில் பார்க்க முடிந்தது.
அவர்களுடைய கடந்த கால சரித்திரங்களை எல்லாம் பார்த்து அறிய முடிந்தது. அவர்களுடைய எதிர்காலங்களையும் பார்த்து அறிய
முடிந்தது. எல்லா மிருகங்களையும் ஒன்று விடாமல் பார்க்க முடிந்தது. அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையும், எதிர்கால
வாழ்க்கையையும் பார்க்க முடிந்தது. அதே
போல் தாவரங்கள் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. இந்த பூமிக்குக் கீழே உள்ள நிலங்களையும் சரி, மற்றவற்றையும்
என்னால் பார்க்க முடிந்தது. , இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் பார்க்க முடிந்தது. அவற்றிற்கும் அப்பால் விவீறீளீஹ் ஷ்ணீஹ்
எனப்படும் பால்வழி நட்சத்திரக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது. அங்கு உள்ளது உள்ளபடிக் காண முடிந்தது. ஜீஸஸ், நபி நாயகம், விஷ்ணு, புத்தர் போன்றவர்களை எல்லாம் நான் பார்த்தேன். கிரேக்க கடவுள்களைப் பார்த்தேன். புனித முங்களை எல்லாம் தரிசித்தேன். எல்லா வேதங்களிலும் இருக்கும் அத்தியாயங்களை
எல்லாம் அந்த ஒரே கணத்தில் படித்தேன்.
அது மட்டுமல்ல. ஸ்விஸ் வங்கியில்
உள்ள இரகசிய கணக்குகளைப் பார்த்தேன்.
கோடீஸ்வரர்களின் இரகசிய எண்களையும் அறிவேன். இந்த பூமியின் எதிர்காலத்தைப் பார்த்தேன். இந்த
உலகத்தின் கடந்த காலத்தை பார்த்தேன்.
லட்சோப லட்சம் ஆண்டுகளுக்கான சரித்திரத்தை அங்கு பார்த்தேன். அதை எல்லாம் ஒரே வினாடியில் நான்
பார்த்தேன். இதுவரை காணாத நிறங்கள், கண் கொள்ளாக்
காட்சியாகப் பார்த்தேன். லட்சோப லட்சம்
பசு மாடுகள், லட்சோப லட்சம் பாகிடிரீயாக்கள், எல்லாவற்றையும் ஒரே கணத்தில் பார்த்துத் தீர்த்தேன். ஏழைகள் உணவுக்காக அலைந்ததைப் பார்த்தேன், வன்முறையையும்
பார்த்தேன், கோடீஸ்வரர்கள் பணத்தைக் குவித்து தம் அலமாரிக்களில் வைத்து சீரழிய விட்டதைக்
கண்டேன். அவை எல்லாம் அவர்களுடைய
கல்லறைகளில் இருந்த அலமாரிக்கள். பங்கு
மார்க்கெட்டுக்கள் சரிவதைப் பார்க்கிறோம்.
மோட்டார் வாகனங்களிலிருந்து எழும் மாசுப் புகைகளைப் பார்க்கிறோம். நமது பெற்றோர்கள்
பிறப்பதையும், இறப்பதையும் பார்க்கிறோம். குழந்தைகளின் பிறப்பையும் இறப்பையும்
பார்க்கிறோம். நமது பிறப்பையும்
இறப்புக்களையும் பார்க்கிறோம். உங்கள்
கற்பனை இது வரை நீடித்திருந்திருக்கும்.
அது முடிந்து கூட விட்டிருக்கும்.
. அர்ஜுனன்
பகவான் கிருஷ்ணருக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.
கடவுள்களின் உருவங்களையும், நெருப்பையும், கொலைகளையும் அழிவையும் மீண்டும் உருவாக்குதல்களையும் உன்னிடம் நான் கண்ட
பிறகு நிலையில்லாமல் தவிக்கிறேன்.
என்மீதே எனக்கு அமைதி இல்லாமல் போயிற்று.
என் வீரர்கள் யாவரும் சரி, என் மூதாதையர்களும் சரி, அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் உன்னிடம் வந்து சேர்ந்து
விட்டார்கள். இந்த வழியிலே ஒரு சிலருக்கு
மிக மோசமான அனுபவங்கள் கிட்டி விட்டன.
எப்படி எல்லா நதிகளும் கடலை நோக்கிச் செல்கின்றனவோ எல்லா வீரர்களும், பிரபல
மனிதர்களும் சரி, உன் வாய்க்குள் சென்று நுழைந்து தங்கள் அழிவைத் தேடிக் கொள்கிறார்கள். எங்கு பார்த்தாலும் நெருப்பைக் கக்கிக்
கொண்டிருக்கும் முகங்கள். இதே தீ எரிந்து
கொண்டிருக்கும் முகங்களை உன்னிடம் பார்த்திருக்கிறேன். அதே முகத்தோடு நீயும் எனக்கு
பதிலளித்தாய். " நானே அழிவுமாவேன். நானே காலத்தின் முடிவும் ஆவேன். இந்த உலகத்தை அழிப்பதில் என் நேரத்தைச்
செலவழித்துக் கொண்டிருக்கிறேன். அதில் உள்ள உயிருள்ளவறையும் சரி, உயிரில்லாதவற்றையும்
சரி அழிப்பதில் முனைந்திருக்கிறேன். அதை
ஒவ்வொரு கணத்திலும் செய்து கொண்டிருக்கிறேன்.
அர்ஜுனனே போரில் ஈடுபடாவிட்டால் கூட, கௌரவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் நிச்சயம் கொல்லப்பட்டு
விடுவார்கள். அர்ஜுனன் இந்த
நிகழ்வுக்கெல்லாம் ஒரு சிறு ஆயுதம் போல.
அவர்கள் எல்லோரையும் கொல்லப் போவது அர்ஜுனன் அல்ல. பகவான் கிருஷ்ணர் அவர்களை ஏற்கனவே கொன்று
விட்டார். அந்த அழிவு ஒரே ஒரு கணத்தில்
ஏற்படப் போகிறது. அர்ஜுனன் பகவானை அடி
பணிந்து வணங்கினான். இப்பொழுது எனக்குப்
புரிகிறது - உங்களை ஏன் எவருமே புகழ்ந்து வருகிறார்கள் என்று எனக்குப் புரிகிறது. ரிஷிகள்
உன்னையே நோக்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.
நீங்களோ அழிவற்றவர். நீங்களே எல்லா
கிரகங்களுமாக ஆவீர்கள்.
உங்களிடமிருந்துதான் எதுவுமே உருவாகி வருகின்றன. உங்கள் முன் பக்தி சிரத்தையுடன் நான்
வணங்குகிறேன். வெவ்வேறு சமயங்களில் உங்களை
வெவ்வேறான நாமங்களும் நமஸ்கரித்து வந்திருக்கிறேன். உங்களை வெகு சாதாரண மனிதராகவே பார்த்து
வந்திருக்கிறேன். ஒருவேளை சில சமயங்களில்
உங்களை நான் கேலியாகவோ கிண்டலாகவோ கூடப் பேசி இருக்கலாம். என்னை மன்னித்து விடுங்கள். நீ9ங்களே இந்த பிரபஞ்சத்தின்
தந்தையாவீர்கள். நீங்களே இந்த உலகின் மஹா
பெரிய குருவாவீர்கள். நீங்களே பரப்
பிரும்மம் ஆவீர்கள் என்பதை நான் அறிவேன்.
உங்கள் உருவத்தைப் பார்க்கும்பொழுது நான் எல்லையற்ற மகிழ்ச்சி
அடைகிறேன். இப்பொழுது உங்களை மிக சாந்தமான
சொரூபத்தில் நான்கு கரங்களுடன் பார்க்க விரும்புகிறேன். அது என் மனத்திற்கு அமைதியைக்
கொடுக்கும். அந்த உங்கள் சொரூபத்தை
தயவுசெய்து இப்பொழுது எனக்குக் காட்டுங்களேன்.
" என்னுடைய பரமாதம சொரூபத்தை, எல்லாவற்றையும் அடக்கிய ஒரு பெரும் சுவரூபத்தை நீ பார்த்து விட்டாய். இதுவே என்னுடைய மூல சுவரூபம். இதை வேறு எவரும் ஊன்றிப் பார்த்ததில்லை
இதற்கு முன்பு. இதை எந்த பூஜை
புனஸ்காரங்களால் பார்த்திருக்க முடியாது. இந்த உருவத்தை உன் ஒருவனால்தான் பார்க்க
முடிந்தது. இதற்காக நீ பயந்து விட
வேண்டாம். குழம்பிப் போய் விட வேண்டாம். நீ கேட்ட உருவத்திற்கு என்னை நான் மாற்றிக்
கொள்ளவும் முடியும்." என்றார் பகவான் கிருஷ்ணர். இதை அடுத்து அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன்
கூடிய பரம சுவரூபத்தைக் காட்டினார்.
"நமது வாழ்க்கை: 7 அடி உயரமுள்ள ஒரு மனிதனைப் பார்க்கும்பொழுது
- அடர்ந்த தோள்களை உடையவனாக 46 அங்குலம் அகலம் கொண்டவை - நம்மைக் கடந்து
செல்லும்பொழுது, நமக்கு எங்கேயோ கொஞ்சம்
பயம் தோன்றத்தான் செய்கிறது. ஒரு கடலுக்கு
முன் அமர்ந்து அலைகளைப் பார்க்கும்பொழுது, நன்றாகவே இருக்கிறது. பெரும் அலைகள் எழும்பி வருகின்றன. நமக்கு நரம்புகள் புடைத்து
பயமுறுத்துகின்றன. சாலைகளில் நடந்து
செல்லும்பொழுது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு
பெரும் ஓசை எழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இரு வாகனங்கள் ஒன்றுக் கொன்று மோதிக் கொண்டு விட்டன. சில மனிதர்கள் இறந்து விழுந்து
கிடைக்கிறார்கள். இரத்த வெள்ளத்தில்
கிடக்கிறார்கள். மீண்டும் நரம்புகளில்
வலியும் சோகமும். நாம் அவ்வளவுதான்
என்றாலும், எங்கிருந்தோ வந்து விட்ட
கடவுளை பார்க்கிறோம். அவர் அவ்வளவு அளவிட
முடியாதவர் அல்ல என்று தெரிகிறது. (ஓ!
மனிதர்களுக்கு அளவுகோல் என்று ஒன்று வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் அளப்பது முடியாமற்
போய் விடுமே. உதாரணத்திற்கு 2000
மீட்டர்களுக்கு மேல் (6000 அடிகள்) அதுவும் எத்தனை தலைகள், எத்தனை கைகளும், கால்களும் - எப்படி இருக்கும்
அந்தக் காட்சி? உங்கள் வாழ்க்கையிலேயே மிக
நெருக்கமான ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள்.
அவருடைய பணி இப்பொழுது மாறி விட்டது.
அன்றாடம் அவர் குறைந்தது 2 நபர்களையாவது கொல்ல வேண்டுமென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களை வந்து
பார்ப்பார்கள். அவரைப் பற்றி நீங்கள்
அப்பொழுது என்ன நினைப்பீர்கள் - அதுவும் இந்த ஒரு செயல்பாட்டைச் செய்ய வரும்பொழுது
எப்படி நினைப்பீர்கள். ஆகவே எப்பொழுதுமே
நமக்குப் பிடித்த செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கடவுளை நாம் திடீரென்று
அவருடைய அழிக்கும் சுபாவத்தைக் காண்கிறோம்.
அது நமக்கு சாதாரண செயலாகவா தோன்றுகிறது? இல்லை. இல்லவே இல்லை.
கொஞ்சம் எலுமிச்சை சாறு கொஞ்சம் ஐஸ்கட்டிகள், -
இவற்றை அப்பொழுது வேண்டுவோம். ஒரு
சிலர், 'உம்! எல்லாம் நன்றாகவே
இருக்கிறது' என்பார்கள். நாமும் பகவானுடைய எல்லாம் சூழ்ந்த உருவத்தைக்
கொஞ்சம் நினைத்துப் பார்த்தோம்,. இந்த ஒரு கற்பனை எல்லாம்
அவருடைய மஹா சக்தியே. அவரில்லாமல் இந்த
கற்பனை எழுந்திருக்கவே எழுந்திருக்காது.
அர்ஜுனன் வேறு யாருமில்லை. நீயும்
நானும் போல ஒருவன்தான். கடவுள் தன் சுய
விஸ்வரூபத்தைக் காட்டி விட்டார். அப்படி
ஒரு விஸ்வரூபத்தைக் காட்டி விட்டு இருக்கும்பொழுது அவருடைய சாந்த சுவரூபத்தை
நான்கே கைகளோடு பார்க்க வேண்டும். ...நம்மால் இப்பொழுதும் கற்பனை செய்து கொள்ள
முடிவதுதான். ஆகவே நானே அதை உனக்குத்
தருகிறேன்... அதைப் பற்றி வாழ்க்கை
முழுவதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
No comments:
Post a Comment