Saturday, September 24, 2016

அத்தியாயம் 18 - எதையும் துறப்பதும் கிடைக்கும் மோட்சம் - அது ஒரு யோகம்

'தியாகம் என்றால் என்ன?   துறப்பது என்றால் என்ன?   சன்னியாசம் என்றால் என்ன? என்றெல்லாம் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரைக் கேட்டான்.  அதாவது ஒரு சன்னியாசியாக வாழ்வது என்றால் என்ன? என்றெல்லாம் பகவான் கிருஷ்ணரைக் கேட்டான்.   எல்லா நடவடிக்கைகளையும் துறந்து விட்டு (பொருட்களால் வரும் ஆசைகளை விட்டு விட்டு)  வாழ்வதே சன்னியாசத்திற்கு வழிகோலுகிறது.   விளையும் பயன்களை எல்லாம் தவிர்த்து விடுவதே துறவிக் கோலத்திற்கு வழி கோலுகிறது.  எந்த ஒரு சமயத்திலு, பூஜிப்பது, தியாகம், தருமம் இவற்றைக் கைவிடலாகாது.  மிகவும் தூய்மையான ஆன்மாக்களைக் கூட மேலும் உயர்ந்த நிலைக்கு அவை இட்டுச் செல்கின்றன.  இருந்தாலும் ஒரு ஈர்ப்புடன் அவை செய்யப்பட்டால், அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.  முடிவுகள் எதையும் எதிர்பார்க்காமலேயே எதுவும் செய்யப்பட்டாலே, அவை நற்பண்புகளைச் சாரும்.  விதிக்கப்பட்ட கடமைகள் யாவும்  தேர்ந்தெடுத்துச் செய்யப்படுகின்றன.  ஒரு ஈர்ப்புடன் அவை எல்லாம் செய்யப்பட்டால், அவை ஆசையின் பால் செய்யப்பட்டதாகிறது.   கடமைகளைச் செய்யாமல் விட்டு விட்டால், அறிவற்ற நிலைமையைக் கொண்டு வருகிறது.  கடமையே செய்யாமல் ஒருவரும் இருக்க முடியாது.  ஆகவே முடிவுகளை என்னிடம் விட்டு விடு.  அதுவே சிறந்ததாகும்.  உடல், கடமையைச் செய்பவர், புலன்கள், எடுத்துக் கொள்ளப்பட்ட கடமைகள் மற்றும் பரமாத்மா எல்லோருமே இணைந்துதான் செய்யப்பட்ட செயல் நடைபெறுகிறது. ஆகவே தானும் சேர்ந்து செயலில் ஈடுபட்டான் என்று எவரும் கருதினால், அவன் அறிவற்றவனாகிறான்.   நல்ல பண்புகளை உடையவனாக இருந்தால், செய்பவன் பரமாத்மாவையே ஒவ்வொரு ஜீவனிடமும் பார்க்கிறான்.   செய்யப்பட வேண்டியது எந்தவித பற்றுதலும் இல்லாமல் செய்யப்படுகிறது.  அன்போ அல்லது வெறுப்போ இல்லாமலும், செய்பவரின் சுயச் செருக்கு இல்லாமலேயே செய்யப்படுகிறது.  மிகுந்த உற்சாகத்துடன் செய்யப்படுகிறது.  வெற்றிக்கு முன்னால் எதுவும் தள்ளிபடி செய்யவில்லை அல்லது தோல்விக்கு முன்னாலும் அப்படிச் செய்வதில்லை.    வேட்கைகள் மிகுந்து பார்க்கும்பொழுது, மனிதன் பிறரை வெவ்வேறு மனிதர்களாகப் பார்க்கிறான்.  எல்லா செயல்பாடுகளும் பெரும் முயற்சியால் அந்த வேட்கைகளை திருப்திப் படுத்திக் கொள்ளவே செய்யப்படுகின்றன.   காரியங்களைச் செய்பவருக்கு எப்பொழுதும் முடிவுகளைப் பற்றிய கவலைகளே மிகுந்து நிற்கும்.  பொறாமையும் பேராசையுமே மிகுந்து நிற்கும்.   அறிவில்லாமல் போகும்பொழுது, புத்தி எதிலும் இருளையே காண்கிறது.   செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் ஒரு மயகத்திலேயும், உதாசீனத்துடனுமே செய்யப்படுகிறது.  செய்பவர் ஏமாற்றுகிறார், சோம்பேறியாகவும் பொருட்களை விரும்புபவராகவும் இருக்கிறார். 


            நற்பண்புகளுடன் செய்யும்பொழுது, ஒப்புதல் சரியான செயல்பாடுகளுக்கு வழிகோலுகிறது.  அந்த தீர்மானமான உள்ளம், முறிக்க முடியாதது மற்றும் தெளிந்த நம்பிக்கையுடன் கூடியது.   கடுமையான சந்தோஷமாக ஆரம்பிப்பது தூய்மையானதாக முடிகிறது.   வேட்கை நிரம்பிய நேரத்தில் புத்தியும் தீர்மானமும் எதையும் சரியானது அல்லது தவறானது என்று பிரித்து அறிய முடியவில்லை.  தீர்மானம் பெறும் முடிவுகளைப் பொறுத்தவையாக ஆகின்றன.  மற்றும் கிடைக்கப் போகும் பொருட்களைப் பொறுத்தும், மத சம்பந்தமானவற்றைப் பற்றியும், புலன்களின் திருப்தியைப் பொறுத்தும் அமைந்து விடுகின்றன.  தூயமையுடன்தான் ஆரம்பிக்கின்றன ஆனால் விஷமாக முடிந்து விடுகின்றன.  அறிவில்லாமல் போகும்பொழுது தவறானவை எல்லாம், நல்லவையாக எடுத்துக் கொள்ளப்படும்.  தீர்மானம் எல்லாம் மயக்கத்தின் அடிப்படையில் இருக்கும்.  கனவு படர்ந்தவையாகவும் புத்திசாலித்தனமில்லாததாகவும் மகிழ்ச்சி என்பது ஆரம்பத்திலிருந்து ஒரு பெரும் தவறான நம்பிக்கையாகவும் போய்விடும்.  இந்த மூன்று குணங்களுமே எவரின் மீதும் தாக்கம் கொள்கின்றன.   அறிவால் தூயமைப்படுத்தப்பட்டும், சுய அடக்கத்தின் பேரிலும் எவர் ஒருவர் கடமைகளைச் செய்கிறாரோ, அல்லது உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்கிறாரோ, போலியான செருக்கு உணர்வை தவிர்த்து செயல்படுகிறாரோ, அமைதியில் வாழ்ந்து வருகிறாரோ அவரே என்னைப் புரிந்து கொள்ள முடியும்.   என் உண்மையான சொரூபத்தில் பரமாத்மாவாகப் புரிந்து கொள்ள முடியும்.   அவரகளே முழுப் பிரக்ஞையுடன் எனக்கு சேவை செய்தும் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள்.   எல்லாவித செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், என் பக்தர்கள் என்னை அடைந்து விடுகிறார்கள்.  என்னைப் பற்றியே எப்பொழுதும் முழு பிரக்ஞையுடன் இருப்பவர், என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர், நான் அவருக்கு சென்று எல்லா உதவியையும் செய்வேன்.  அவர் இந்த வாழ்க்கையைக் கடக்க உதவி செய்வேன்.  அவரை என்றும் எதையும் இழக்க விட மாட்டேன்.    பரமாத்மா என்ற முறையில், நான் ஒவ்வொருவரிடமும் இருக்கிறேன்.   அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னிடம் சரணாகதி அடைந்து விட வேண்டியது ஒன்றுதான்.  நான் அவர்கள் மீது கருணை செலுத்தி கவனித்துக் கொள்வேன்.  மிகவும் இரகசியமான புத்திசாலித்தனம் என்னவென்றால், என்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.  பூஜிக்க வேண்டும்.   செய்யும் செயல்பாடுகளின் முடிவுகள் எல்லாவற்றையும் என்னிடமே விட்டு விடல் வேண்டும்.   அப்படிச் செய்வதால் நீங்கள் யாவரும் என்னிடம் தவறாமல்  வந்து விடுவீர்கள்.   உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்கிறேன்.   இதை அறிந்தவர்கள் எல்லோருமே பிறருக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.  இதை யார் யார் கேட்கிறார்களோ, நம்பிக்கையுடன் கேட்டு அனுசரிக்கிறார்களோ அவர்களும்  எல்லோரும் என்னையே வந்து அடைவார்கள்.    இதைக் கேட்டவுடன் அர்ஜுனன் பரமாத்மாவிடம் சொன்னது - தான் தன் கடமையை இப்பொழுது உண்ர்ந்ததாகவும் அதைச் செய்ய உடனடியாக தயாராகி விட்டதாகவும் தெரிவித்தான்.
                     

      சஞ்சயன் எல்லாவற்றையும் திருதிராஷ்ட்ரருக்கு எடுத்துச் சொன்னான்.  இந்த வார்த்தைகளே தனக்கு ஒரு நிலையான வகையில் நிற்பதற்கு உதவி செய்வதாகவும் சொல்லி அவற்றை தான் என்றைக்கும் மனத்தில் வைத்திருக்கப் போவதாகச் சொன்னான்.  அதற்குப் பிறகு அர்ஜுனன் போர்க்கள்த்திற்குச் சென்றான்.   பாண்டவர்கள் சண்டையில் அமோக வெற்றி அடைந்தார்கள்.


     "நமது வாழ்க்கை:  ஒரு மனிதன் எந்தவித பலன்களும் இல்லாமல் ஒரு செயல்பாட்டை ஏன் செய்ய வேண்டும் என்று நான் ஆச்சரியப்பட்டதுண்டு.    அப்படிப் பேசுவது ஏனோ நன்மை பயக்கலாம், ஆனால் அது வாழ்க்கையில் நடப்பது அல்ல.  மற்றும், வாழ்க்கை என்பது தனிப்பட்ட உயர்வையும், பணம் சம்பாதிப்பதும் மற்றும் குடும்பத்தைக் காப்பாற்றுவதும்தானே!  அதுதானே வாழ்க்கையின் முழு அர்த்தமாகும். அவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு நான் எப்படி வாழ முடியும்.  கீதை என்பது பொது ஜனங்களுக்காக ஏற்பட்டது அல்ல. . . இப்படித்தான் என் எண்ணங்கள் இருந்தன.   உங்களுக்கும் அப்படித்தான் தோன்றி இருக்கலாம்.  .  ஏதோ ஒரு நிலையில், நம் இருவருக்குமே சரியான பதில்கள் கிடைத்து விட்டன...  செயல்பாடுகளில் ஈடுபடுவதே வாழ்க்கையின் ஆதாரம்பொதுஜனங்கள் என்ற அளவில் நம்மால் எதையும் செய்யாமல் இருக்க முடியாது.  ஆனால் முடிவுகளை எதிர்பார்ப்பதை வேண்டுமானால் செய்யாமல் விட்டு விடலாம்.  ஏனென்றால் முடிவுகளே நம்மை எதிர்பார்க்கத் தூண்டுகின்றன.  எதிர்பார்ப்பு ஆசைகளைத் தூண்டுகிறது.  ஆசைகள் அதற்குப் பிறகு கஷ்ட நஷ்டங்களுக்கும் மாயைகளுக்கும் காரணமாகிறது.    செயல்பாடுகளில் ஈடுபடுவதால், நாம் எல்லோரும் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று நம்மில் ஒரு சிலர் நினைக்கலாம்.   ஏனென்றால் முடிவுகளைக் கடவுளே கொடுப்பார் என்பதால் அப்படிச் செய்யலாம். ..  இன்னொரு எதிர்பார்ப்பும்  இருக்கிறது.   இது கடவுளைப் பற்றியது.  ..  உங்கள் க்டமையைச் செய்யுங்கள் முடிவுகளை கடவுளிடம் விட்டு விடுங்கள்.  ..  இது நமக்கு அதைவிட சற்று எளிதானது.  நமது வளர்ச்சி பிறருக்கு முக்கியமாக இருக்கும்பொழுது, மற்றும் அதில் நாம் பெருமைப் படாமல் இருக்கும்பொழுது, அந்த வளர்ச்சியுடன் நம்மை பொருத்திப் பார்க்கும்பொழுது, அந்த வளர்ச்சி எந்தவித துன்பத்தையும் கொண்டு வரப்போவதில்லை.   தவிரவும், இந்த ஆற்றலோடு இருக்கும் நமக்கு  நம் கடமையில் ஒரு அங்கமே அது.  அதைச் செய்வது அல்லது அதை தலைமைப் பண்போடு நடத்திச் செல்லும்பொழுது, நாம் நம்மையே அதில் ஆழ்ந்து விடுகிறோம்.  அது மட்டுமல்ல. ஒரு பொதுஜன அங்கத்தினர் என்ற முறையில் நாம் எல்லோருமே புலன்களின் தேவைகளுக்காகவே எதையும் செய்கிறோம்.  இருந்தாலும் தேவைப்படும்பொழுது எல்லாம் நம்மை நாமே எதிலிருந்தும் தள்ளி வைத்துக் கொண்டு பார்க்க தெரிய வேண்டும்.   அந்தக் காரணத்திற்கு நடப்பனவற்றை எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணித்து விட வேண்டும்.  அந்தப் பரமாத்மாவிடமே எதையும் விட்டு விட்டு நம்மோடு எதையும் பொருத்திக் கொள்ளக் கூடாது.  மீதமுள்ள எல்லாவற்றையும் நாம் பொறுத்துக் கொள்ளலாம்.   இன்றைக்கு எந்த ஒரு தெளிவுடன் வாழ்கிறார்களோ அதே தெளிவுடன் நாளைக்கும் வாழப் போகிறார்கள் என்று சொல்ல முடியாது.  நாம் குழந்தைகளுடன், மனைவியுடன், பெற்றோர்களுடன், சகோதரர்களுடன், நண்பர்களுடன் மற்றும் அந்தவித உபயோகமான செல்வங்களுடன் இருக்கலாம்.   ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - அவை எல்லாம் ஒரு நாளைக்கு நம்மை விட்டு நீங்கி விடும்.  எல்லாமே இந்த வாழ்க்கையை விட்டு நீங்கி விடும்.   ..   ஆனால் நாம் மாத்திரம் கடவுளோடு இல்லாமல் தனித்து விடப் போவதில்லை. .     அந்தப் பரமாதமா உங்கள் மனத்திலேயே  குடிகொண்டிருக்கிறார். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள்.   ..  இந்த சக்தியோடு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள், உங்கள் கடமைகளைச் செய்து வாருங்கள்...  கவலைகளை விட்டு விடுங்கள் மற்றும் உங்கள் பெருமிதத்திலிருந்து, சுயச் செருக்கிலிருந்து மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து விலக்கிக் கொள்ளுங்கள்."

No comments:

Post a Comment