கிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்கினார், மரணத்தின் போது / உடலை உயிர் விட்டுபிரியும் தருவாயில், ஒரு நபர் தன்
இலக்கு உயர் கடவுள் மட்டுமே என வழிபடுகின்றானோ அவனும்,எவன் ஒருவன் தியானத்தில் தன்னை ஈடுபடுத்தி தொடர்ந்து உயர் கடவுளை வழிபடுகின்றானோ
அவனும், வேதங்களை படித்து அவற்றில் உள்ள விதிகள் மற்றும் வழிகாட்டுதலின்
படி வாழும் ஒருவனும், ஆன்மீக சேவையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, முழுமையாக தொடர்ந்து செய்யும் ஒருவனும், மற்றும் எவன்
ஒருவன் சூரியன், சந்திரன் மற்றும் எல்லா கடவுள்களாக, என்னை
எண்ணத்திற்கு அப்பாற்பட்டவனாவாக, பொருள்களுக்கு அப்பாற்பட்டவனாவாக, பெரியவனாய், சிறியவனாய், எல்லாவற்றின் கட்டுப்படுத்தியாக, மிக
பழமையான மற்றும் உச்ச ஆளுமைடயை கடவுளாக புரிந்து வாழும்
யோகியும், உட்பட அனைவரும் என்னையே அடைகின்றனர்.
கிருஷ்ணன் கண்களை மூடி, மைய புள்ளியை தன் கண்களின் இடையே நிறுத்தி, "ஓம்"
என்ற மந்திர உச்சரிப்புடன், கடவுளை பற்றிய சிந்தனையில் மனதை கட்டுபடுத்தி
எப்படி தியான யோகா பயிற்சியில் ஈடுபடுவதென விளக்கினார். இதேபோல் அவர், பிரம்மா மற்றும் மனிதன் நாட்கணக்கில் உள்ள வித்தியாசம், மற்றும் காலம் மற்றும் நாள் / இரவு, ஆகியவற்றின்
அடிப்படையில் எப்போது ஒருவன் பிறப்பற்ற நிலையை அடைய முடியும் என்றும் விளக்கினார். இவற்றிற்கு அப்பாற்பட்டு எவன் ஒருவன் உறுதியாக உயர்
கடவுளை மட்டும் மரணத்தின் தருவாயில் வழிபடுகிறானோ அவன் நிச்சயம் என்னை அடைகிறான் என
கிருஷ்ணன் விளக்கினார்.
"நமது வாழ்க்கை: நாம்
ஒரு மிகவும் பிரபலமான கேள்வியை இன்று நம் முன் எழுப்புவோம், உலகம் ஒரு
விண்மீனால் இன்று அழிக்கப்பட போகிறது, அதை நடு வானில்
தடுத்தி நிறுத்தி அழிக்க அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனாவிற்கு
வாய்ப்பு இல்லை எனவே அதிகாரபூர்வமாக இவ்வுலகம் இன்னும் 2 மணி நேரம் மட்டுமே இருக்கும்
என்றால், நீங்கள் இப்போது என்ன செய்ய போகிறீர்கள்
...? நம்மில் பலர் நம் இறுதி ஆசையை பூர்த்தி செய்ய விரும்புவார்கள். சிலர் மதுபானகடையில், சிலர் குடும்பத்துடனும், சாலையில்
கூவிதிரிவோர் சிலர், மூலையில் அழுபவர் சிலர், தொலைபேசியில்
சிலர், காதலில் சிலர், சிலர் புனித
புத்தகம் படித்தோ மற்றும் தேவாலயத்தில் / கோவிலில்
/ மசூதியில் வழிபட்டோ (அடிப்படையில், உலகம் இன்று
முடிவுக்கு வர கூடாது என்று பிரார்த்தனை செய்து, கடவுள் ஏதாவது
மாயை செய்து அவர்களை காப்பாற்றி இன்னும் சில ஆண்டுகள் வாழ செய்ய) இருக்கலாம்.
பெரும்பாலானோர் இறுதி நேரத்திலும் தங்களின் உணர்ச்சியின் தேவையை பூர்த்தி
செய்வதிலும், எந்த ஒரு செயல் தன்னை மறக்க செய்து இன்பத்தை தருகிறதோ
அல்லது பயத்தை நீக்குகிறதோ அதிலும், தன் நிறைவேறா ஆசைகளை பூர்த்தி
செய்வதிலும் ஈடுபடக்கூடும், இதில் கடவுளை மட்டும் குறிக்கோளாக
வேறு எதையும் மனதில் நினைக்காமல் தன் கடைசி கணங்களை கழிப்பவர் மிகவும் குறைவாகவே இருப்பர்!
யார் ஒருவர், புனித நூல்களை படித்தோ அல்லது புனித இடத்தில் வேண்டிக்கொண்டு கடவுளை தேடுகின்றனரோ, அவர்கள் இன்னமும்
வெளியே காகிதத்தில் (சொற்களில்) அல்லது ஒரு இடத்தில் கடவுளை தேடி வருகின்றனர். அதில் தவறு ஒன்றும் இல்லை.
எனினும், நீங்கள் கடவுளை வெளியே
தேட ஆரம்பித்தால், உங்கள் பாதை மிக
பெரியது மற்றும் அதற்கு இறுதி என்பது கிடையாது. நம்மில் பலர் கடவுளை ஒரு வடிவத்தில்
அல்லது ஒரு செயலில் அல்லது இயற்கையில், அல்லது ஒரு இடத்தில் பார்க்க வேண்டும் என
நினைக்கிறோம் ... கடவுள் நமக்கு நம் கண் முன்னே வர வேண்டும் ... அவர் ஏன் வரவேண்டும்
உங்கள் முன்னே? .... கடவுள் உங்களின் உள்ளே உள்ளார், அவரே ஆன்மாக்களின் அடிப்படை ஆன்மா மற்றும் இங்குள்ள அனைத்து ஆன்மாக்களும் அவரின்
ஒரு பகுதி என்றால், உங்கள் ஆன்மாவில் தான் கடவுள் வாழ்கிறார்
... வெளியே அவரை தேட வேண்டாம் ... நீங்கள் எப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியாது! உங்கள் வாழ்வின் எந்த ஒரு கணமாகவும் இருக்கலாம்
அவர் உங்களை விட்டு பிரிவதில்லை! நீங்கள் யாருக்காவது உதவலாம், இறைச்சி உண்ணாலாம், தேநீர் அருந்தலாம், காயமடைந்திருக்கலாம், அல்லது வேலை செய்யலாம், மற்றும்
எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் எந்த ஒரு கணத்திலும், எல்லா
இடங்களிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்! நாம் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே
வாழ்கிறார் என்று நினைக்கிறோம், இது அறியாமை தவிர வேறு எதுவும் இல்லை.அவர் உங்களை தனியாகவிடுவதில்லை, அது வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும், இழப்பாகட்டும்
அல்லது வேறு ஏதுமாகட்டும், அவர் உங்களுடன் இருந்து உங்கள் வலியிலும்
மற்றும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார். நீங்கள் உறுதியுடன் இருக்கலாம், நீங்கள் அவரின் ஒரு பகுதியென, நீங்கள் கவலைப்பட ஒன்றும்
இல்லையென, ஆனால் நீங்கள் கடவுள் இல்லை! எப்படியாயினும்
இதை எல்லோரும் ஒரே அளவில் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தான், பல மதங்கள்
மற்றும் வழிமுறைகளை (பிரார்த்தனை, தியானம், ஆன்மிக
சேவை போன்றவற்றை) அவர் படைத்துள்ளார்.
No comments:
Post a Comment