Saturday, August 17, 2013

அத்தியாயம் 4 - செயலாற்றா நிலை யோகா

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், நான் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய கடவுளுக்கு இந்த யோகாவை கற்றுத் தந்தேன் அது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மற்றவர்களுக்கு கற்றுத் தரப்பட்டது, ஆனால் ஒரு காலத்தில் அந்த சங்கிலி உடைந்துவிட்டது. எனவே இன்று நான் மீண்டும் உனக்கு அதை கூறுகிறேன் என  அர்ஜுனனிடம் கூறினார்.
அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கூறினான், நீங்கள் அவரை விட குறைந்த வயதுடையவராய் தெரிகிறீர்கள், எப்படி நீங்கள் சூரிய கடவுளுக்கு இதை கற்பித்திருக்க முடியும்.
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், நீயும் பல முறை பிறந்தாய் இவ்வுலகில் மற்றும் நானும் பல முறை பிறந்தேன் இவ்வுலகில். இந்த உலகத்தில் எப்போழுதெல்லாம் நீதி குறைந்து, அதர்மம் ஓங்குகிறதோ அப்போழுதெல்லாம் நான் அவதாரமாக பிறந்து, நல்லவர்களை வாழவத்து, தீயவர்களை அழித்து இவ்வுலகில்  தர்மத்தை நிலை நாட்டுகிறேன்.
"நமது வாழ்க்கை: இந்து மத புராணங்களின்படி மகாவிஷ்ணு பத்து அவதாரங்கள் எடுப்பார், அவற்றில் கிருஷ்ணாவதாரமும் ஒன்று, இன்னும் ஒரு அவதாரம் நிலுவையில் உள்ளது. இது "கல்கி" அவதாரம் இதில் கடவுள், வாள் ஏந்தி ஒரு வெள்ளை குதிரையில் வருவார் என நம்பபடுகிறது. இந்த அவதாரங்களில் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், ஒரு சில அவதாரங்கள் தவிர மற்றவற்றில் அவர் மனிதனாய் வரவில்லை. இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எடுத்த முதல் சில அவதாரங்கள் மீன், பன்றி மற்றும் ஆமை ஆகிய வடிவத்தில் உள்ளது; ஏன் அவர் மனித வடிவில் இல்லை? மனித இனம் அந்த கால கட்டங்களில் இருந்ததா மற்றும் அவர்களின் பங்கு இவ்வுலகில் சிறியதாக இருந்ததா? எப்படியும்  இருக்கலாம் ... நான் ஜுராசிக் பார்க் திரைப்படம் பார்க்கும் வரை, டைனோசர்கள் பற்றி அறியாதிருந்தேன். அவை பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு இவ்வுலகில் பெருமளவு இருந்தன, ஆனால் இன்று  இந்த உலகத்தில் இல்லை ... உலகம் ஒரு காலத்தில் மறு சீரமைக்க / மாற்றத்திற்கு உள்ளாகிறது அர்த்தம் ... இன்று நாம் இன்று கஃல்ப் வளைகுடாவில் பெட்ரோல் கிடைப்பதை பார்கிறோம், இதன் அர்த்தம், பெட்ரோல் இருக்கும் அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு தாவரங்கள் மற்றும் விலங்குகள் இருந்த செழிப்பான பகுதியாக இருந்திருக்க வேண்டும், ஆனால் இன்றோ பாலைவனம். நாம் இன்று காணும் உலகம், எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளான ஒன்று ...  இதை என்னும் போது, நாம் ஓரளவு தெளிவடையலாம், ஏன் கடவுள் மனித வடிவில் வரவில்லை என்று. இது தவிர, எனக்கு தெரியாது "கல்கி"யாக கடவுள் குதிரையில் வருவாரா அல்லது அவர் பூமியில் ஒரு புதிய சூறாவளி அல்லது நிலநடுக்கம் அல்லது எரிமலை தொடராக, ஒரு புதிய வைரஸாக, பாக்டீரியாவாக, அணு குண்டாக அல்லது வேறு எதுவாகவும் "குதிரை" அல்லது "கல்கி"  என்ற பெயரில் வருவாரா, யாருக்கு தெரியும். நம் கணிணி அல்லது இயந்திரம் வேலை செய்யாவிட்டால்  நாம் என்ன செய்கிறோம், மீண்டும் "மறுதொடக்கம்"/" ரீஸ்டார்ட்" செய்கிறோம், இதை ஒருவேளை நாம் கடவுள் இந்த பூவுலகில் செய்த மறுதொடக்கங்களிலிருந்து தான் கற்றோமோ!
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், எவன் ஒருவன் இந்த உண்மையை உணர்ந்து கோபம், பயம் ஆகியவற்றிலிருந்து வெளியேறி, இணைப்புகள் அற்று தன் கடமையை செய்கிறனோ அவன் என்னால் ஏற்றுக்கொள்ளபட்டு என்னுடன் ஒன்றாகின்றான். ஞானமுடையோன் இதை அறிந்து செயலாற்றுகிறான்.
"நமது வாழ்க்கை: எப்படி நமக்கு தெரியும், நாம் எந்த இணைப்பு இல்லாமல் வாழ்கிறோம் என்று? ம்ம்ம்....உங்கள் வாழ்வில் நீங்கள் மிக அதிகம் நேசிக்கும் 3 விஷயங்களை (உறவு / பொருள் / அல்லது எந்த ஒன்று) நினையுங்கள்... இப்போது உங்கள் வாழ்க்கையில் இருந்து, நாளைமுதல் அந்த மூன்றையும் நீக்கி விட்டால் , நீங்கள் இன்னும் வாழ்க்கையில் விருப்பம் கொண்டுள்ளீரா அல்லது வாழவே விரும்புகிறீரா? .. ம்மில் பலருக்கு, தன் பதில் "இல்லை".  நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை, அதன் நன்மைக்கோ அல்லது கடவுளை உணர்ந்தோ, அதை எந்த கணமும் விட்டு விட தயாராக இருந்தால் நீங்கள் ஏற்கனவே யோகியின் நிலையில் வாழ்ந்து வருகின்றீர் என்பதாகும், இது புகழ் / ஆசை / மற்றும் சுயத்தையும் உள் அடக்கும். இவை அனைத்தையும் விட்டு உங்களால் கடமையை செய்ய இயலுமானால், நீங்கள் இந்த உலகத்தில் இங்கே அடைய எதுவும் இல்லை. இப்போது  இதை எழுதுகிறேன், நான் ஒரு துறவி இல்லை. நான் எல்லாவற்றையும் விட்டு வாழமுடியுமா என் வாழ்க்கையை? எனக்கு தெரியாது... ஆனால், நான் உட்பட என்னுடன் இருக்கும் சகலமும் காலத்தால் அழிந்துபடக்கூடியது என்று புரிந்திருப்பது,  என் வாழ்வில் சூழ்நிலைகளை கையாளவும், நல்ல வழியில் வாழவும் உதவும்! "
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், எவன் ஒருவன் செயலில் செயலற்ற நிலையையும், செயலற்றமையில் செயலையும் பார்க்க வல்லவனோ அவன் ஞானமடைகிறான். அவன் செயல்  மற்றும் அதன் முடிவுகளில் தன்னை  இணைப்பதில்லை, அந்த நிலையில் அவன் செய்யும் செயலில், எந்த பாவமும் அவனை பாதிக்காது. அவன் தனது வாழ்க்கையில் குறைந்தபட்சம் தேவைப்படும் பொருட்களோடு வாழ்கிறான்.
"நமது வாழ்க்கை: நாம் பல முறை பார்கிறோம், மக்கள் தொழில்முறை வாழ்க்கையில் தங்களின் தனிப்பட்ட பிரதிபலனை மட்டும் பிரதான இலக்காக கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையை தொடங்குகின்றனர், அவர்களது நிறுவனத்தை இரண்டாம் பட்சமாக்கிவிடுகின்றனர். தனிப்பட்ட வாழ்வில் அவர்களது குறிக்கோள் "இரட்டை இலக்க சதவிகிதம் சம்பளம் அதிகரிப்பு", "பணி உயர்வு" போன்றவை மட்டுமே.. அவர்கள் தம் மேலதிகாரியுடன் முதலில் கேட்பது நான் என்ன செய்தால் இந்த ஆண்டு அவற்றை அடைவேன் என்று... அவர்கள் கேட்காதது, நான் இந்த ஆண்டு என்ன கற்றறிய வேண்டும், என் திறனை எந்த வகையில் உயர்த்த முடியும் என்று நினைக்கிறீர்கள், எப்படி நான் திறம்பட என் கடமையை செய்ய அதை பயன்படுத்தமுடியும் என்று ... தற்போதைய தலைமுறை வேலை பெறுவதே அவர்களின் திறனை பொறுத்தே, ஆனால் வேலையில் சேர்ந்தவுடன்  குறுகிய கால சுய இலக்குகளை பற்றி மட்டுமே கவலை கொள்கின்றனர். அவர்களின் நடவடிக்கைக்கு காரணமாக பயம் இருக்கலாம் அல்லது தெளிவற்ற சிந்தனை இருக்கலாம். தன்னை அறிந்த சுய நம்பிக்கை கொண்ட ஒருவன் முடிவை பற்றி கவலைப்படாமல், தன் செயலில் கவனம் செலுத்துகிறான் ... நீங்கள் உங்கள் மனதில் சமன்திறன் கொண்டு, திறமையான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது, சம்பளம் மற்றும் பதவி உயர்வுகள் உங்கள் வழியில் தானே வரும் ... நீங்கள் கண்டுபிடித்த விலைமதிப்பற்ற மற்றும் அரிய பொருள் "நீங்கள்" தான், எனவே உங்களை நீங்கள்   இழக்காதீர்கள்!
யாருக்கு அளவிற்கு அதிகமான சொத்துக்கள் அவருடைய அன்றாட வாழ்வின் தேவையை மீறி உள்ளதோ, அவர் பொருள்சார்ந்த இயல்பில் இணைக்கப்படுகிறார். பொருள்சார் விஷயங்கள் அவரை விடாது. அவருக்கு, எந்த அளவும் போதுமானதாக இருக்காது. அவரிடம் 300 கோடி டாலர்கள் இருந்தாலும் கூட, அவர் சொல்ல போகிறார் இது அவசர தேவைக்கு கூட பத்தாது என்று. ஏனென்றால் அந்த நேரத்தில் அவரது சொத்து அவரை வேலைக்காரனாக்கி (முதலீடு, கடன், அந்தஸ்து போன்ற பல இணைப்புகள் உருவாகிவிடும்) மற்றும் அவனை கோழையாக்கிவிடுகின்றன. கணிணியில் விண்டோஸ் ஆப்ரேடிங்க் சிஸ்டத்தில் நாம் எந்த மென்பொருளை உபயோகமே படுத்தாமல் வைத்துள்ளோமோ, அதை நீக்க பரிந்துரை செய்யும், ஏனென்றால் அவை இடத்தை அடைப்பதோடு அல்லாமல் செயல் திறனையும் குறைக்கும், அதே போல் வாழ்விலும் நீங்கள் பயன்படுத்தா சொத்து, உங்கள் மூளையை அடைப்பதோடு அல்லாமல், உங்களை அடிமையாக்கி, அவற்றை காப்பதில் உங்கள் வாழ்வையை இழக்கசெய்யும், உண்மையில் அவை உங்களின் சாபம்.
கிருஷ்ணன் மேலும் அர்ஜுனனிடம் கூறினார், தியாகங்கள் மூலம் மக்கள், சர்வ வல்லமை உடைய கடவுளை அடைய முயற்சிக்கின்றனர். சிலர் பொருட்களையும், சிலர் கேட்பதையும், சிலர் உணர்வுகளையும், சிலர் சுவாசத்தையும், சிலர் ஆடம்பரத்தையும், சிலர் உணவையும் தியாகம் செய்து தங்கள் பாவங்களை அழித்து, கடவுளை அடைய முயற்சிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலானது, உயர்கடவுளை பற்றிய அறிவும் மற்றும் இணைப்புகள் இல்லாமல் கடமையை செய்வதும், நீ ஒரு குருவிடம் இருந்து இந்த அறிவை பெறலாம். அந்த அறிவு அனைத்து விருப்பங்களையும் அழிக்க தீ போல செயல்படும். தன்னை உணர்ந்து, தன்னுள் அமைதியை அடையும்  ஒரு அறிவுடையோனின் ஆன்மாவை விட, எந்த ஒரு தூய்மையாக்கும் பொருளும் இவ்வுலகில் இலலை. எவன் ஒருவன் இதை சந்தேகபடுகின்றானோ, அவனுக்கு இவ்வுலகம் மட்டும் அன்றி எவ்வுலகிலும் நிம்மதி இல்லை.
"நமது வாழ்க்கை: குரு (ஆசிரியர்) நமக்கு பல்வேறு நடைமுறைகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில், நமது வாழ்வை பற்றி நமக்கு அறிவாற்றலை தந்து உதவுகின்றனர். குருவின் தேவை நபருக்கு நபர் வேறுபடும். அனைவரும் மத கூட்டங்கள் அல்லது குருவின்பால் கற்று கொள்ள வேண்டும் என்பது இல்லை... இதன் தேவையை ஒரு மனிதன் சுயமாக மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்தியாவில், நம்மில் பலரும் ஏதாவது ஒரு குருவை பின்பற்றுகிறோம், அது நம் வாழ்வை நல்வழியில் முன்னோக்கி செல்ல உதவலாம். ஆனால் ஒன்றில் தெளிவு தேவை, அஃது உங்கள் ஆன்மாவைவிட புனிதமானது வேறேதும் இல்லை, எனவே உங்கள் ஆன்மாவின் நல்லறிவின்படி வாழ்வதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம், சில குருமார்கள் வணிக மக்களாக மாறிவிட்டனர், அவர்களின் பெரும் நேரம் விளம்பரத்திற்காகவும் மற்றும் சொத்துக்கள், பிராண்ட் பெயர்கள், தொடர் மருத்துவமனைகள் / உணவகங்கள் / கல்லூரிகள், நன்கொடை உள்வரவு, நிறுவன வலிமை மற்றும் பொருட்கள் விற்பனை ஆகியவற்றை பராமரிப்பதில் செலவிடுகின்றனர். அவர்கள் தங்க நாற்காலியில் உட்கார வேண்டும், சில பாடகர் அவர்களை பற்றி பாடி மகிழ்ச்சியடைய செய்யவேண்டும், பின்பு அவர் உங்கள் மற்றும் எனது வாழ்க்கை பற்றி கேளிப்பேசி நாம் எத்தனை பெரிய முட்டாள் என புரியவைப்பார். நாம் யாரையும் வம்புக்கு இழுக்கவோ அல்லது குறை சொல்லவோ விரும்பவில்லை. மேலும் அவர்கள் எதிர்பார்பின்றி செயலில் ஈடுபடலாம், அப்படி அவர்கள் இருக்கும்போது, நாம் யார் அவர்களை பற்றி நீதி சொல்ல!
குருவானவர் நீங்கள் நடந்து செல்ல ஒரு பாதையின் வழியைகாட்டுவார், ஆனால் பாதையில்  நீங்கள் தான் நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு குருவை சார்ந்து இருந்தால், நீங்கள் நடக்கவே இல்லை அங்கேயே நிற்கின்றீர்கள் என்று பொருள்!

நீங்கள் யாரை நம்பும் முன்னும் நன்றாக ஆராயுங்கள், ஆனால் முடிவெடுத்தபின் உங்கள் மனதில் சந்தேகம் வர அனுமதிக்க முடியாது. ஏனென்றால் சந்தேகம் உங்களையும், சார்ந்தவர்களையும் அழித்துவிடும்.

No comments:

Post a Comment