Sunday, August 11, 2013

அத்தியாயம் 2 - அறிவு நிலை

அர்ஜுனன் தனது வில்லை கீழே வைத்து உட்கார்ந்துவிட்டதால், கிருஷ்ணன் அவனிடம் பேசினார். கிருஷ்ணன் சொன்னதாவது, ஒரு போர்வீரன் தனது கடமையை செய்ய வேண்டும், இந்த கடினமான சூழ்நிலையில் இந்த பலவீனத்தை எங்கிருந்து கொண்டு வருகிறய், என அர்ஜுனனிடம் கேட்டார். கிருஷ்ணன் மேலும் கூறினார், உனது இந்த செயலால் நீ சொர்க்கமோ அல்லது  எந்த புகழையோ அடைய முடியாது, எனவே பலவீனம் விட்டு, உன் கடமையை செய். அர்ஜுனனோ, எனது நெருங்கிய மற்றும் அன்பானவர்களை கொள்ளமுடியாது, என கூறிவிட்டு அமைதியானன்.
"நமது வாழ்க்கை: அர்ஜூனனின் பலவீனம் இணைப்பு மற்றும் அறியாமையினால் பிறந்த பயத்தினால் வந்தது, அது போலவே தான் நம் பலவீனம், நாம் அனைவரும் எந்த இணைப்பையும் இழக்கவிடாமலும், அதனால் பயத்தையும் தருகிறது. இது கார், உறவு, வீடு அல்லது ஏதாவது ஒன்று - நாம் எதையுமே இழக்க விரும்பவில்லை. நாம் எதிர்பாராத எதற்காகவும் தயாராக இல்லை. நம் வாழ்க்கை முழுவதும் நமக்கு சாதகமான நிலை வேண்டும். எப்போதும் சாதகமான நிலைமைகளை தர நாம் கடவுளிடம் வேண்டுகிறோம். மற்றும் உண்மையில், நாம் ஒரு சாதகமற்ற நிலையில் அல்லது ஒரு நிகழ்வை எப்படி எதிர் நோக்குவது என்று தெரியாது வாழ்கிறோம். நமது பெற்றோர்கள்  நம் வாழ்வில்  மரணத்தையோ அல்லது மோசமான சூழலை எதிர்கொள்ள நமக்கு கற்று தரவில்லை, ஆனால் அவர்கள்  சாதகமான நிலை எப்போதும் இருக்க பிரார்த்தனை செய்ய மட்டுமே கற்று தந்துள்ளனர். அடிப்படையில் நாம் இழப்பு மேலாண்மை பற்றி கற்றுகொள்வதே இல்லை, எனவே ஒரு கடினமான சூழ்நிலையில் நாம் அனைவரும் மிகுந்த மன அழுத்திற்கும், செயலற்ற நிலைக்கும் செல்கிறோம் (எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டன, ஒரு நாள் அவற்றை இங்கேயே விட்டு செல்லவேண்டும்)
அர்ஜுனன் பேசக்கேட்ட பிறகு, கிருஷ்ணன் சிரித்துவிட்டு பேசிய வார்த்தைகள் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் அடிப்படையாக இந்த உலகம் மற்றும் பிரபஞ்சங்களின் ஆதராமாக விளங்கப்போகின்றது.
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார்,  நீ எதற்காக வருத்தப்படுவது கூடாதோ அதற்காக வருத்தப்படுகிறாய். மனிதன் தினசரி  ஆடையை மாற்றுவது போல், ஆன்மாவும் தான் இருக்கும் உடலை  மாற்றிக்கொள்கிறது. ஒரு காலக்கட்டத்தில்,  உடலுடன் இந்த உலகத்தில் பிறந்த ஆன்மா, மரணம் மூலம் அந்த உடலைவிட்டு போய்விடும், மீண்டும் புதிய உடல் எடுத்து மறுபடியும் பிறக்கும்.
"நமது வாழ்க்கை: நம் அனைவருக்கும் தெரியும், ஒவ்வொரு நாளும் புதிய செல்கள் பிறந்து பழைய செல்கள் நம் உடலில் இறக்கின்றன. பிறப்பு மற்றும் இறப்பு நம் மூளை, இதயம், கையில்  மற்றும் எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. இருப்பினும், மக்கு அது தெரியாது! ஏனென்றால் இது உயர்கடவுளினால் கவனிக்கப்படுக்கிறது, நம்மால் இல்லை. நம்மில் பலருக்கு, இது அறிவியல்! (உங்கள் நண்பர் அல்லது மனைவி, நீ நேற்று போல் இல்லை என்று கூறுகிறார் என்றால், இப்போது, நீங்கள் புன்னகையுடன் ஏற்று கொள்ளலாம்) "
கிருஷ்ணன் மேலும் அர்ஜுனனிடம் கூறினார், ஞானமுடையோன்  இன்பம் மற்றும் வலியை ஒரே அளவில் ஏற்கிறான், உடல் அழிந்துவிடக்கூடியது அதனை பாதுகாக்க முடியாது, ஆனால் ஆன்மா அழிவற்றது யார் ஒருவராலும் அதற்கு அழிவு ஏற்படுத்தமுடியாது.
"நமது வாழ்க்கை: ஒரு விவசாயி செடியில் இருக்கும் ஒரு மலர்கின்ற அழகு மலரை நீக்க கூடாது என்று நினைத்தால் கூட, அந்த மலர் தானாக வாடிக் கருகிவிடும், அதே அந்த ஆன்மாவை அழிக்கவேண்டும் என்று நினைத்தால் அது இயலாத ஒன்று, அந்த ஆன்மா அடுத்த பிறப்பு எடுப்பதை மனிதனால் தவிர்க்கமுடியாது, அது அவனது அறியாமையே ஆகும்.எனக்கு ஒரு கேள்வி தோன்றியது, உலகில் மனிதர் எண்ணிக்கை 10000 ஆண்டுகளுக்கு முன் சில ஆயிரக்கணக்காக மட்டுமே இருந்தது, ஆனால் இன்று எப்படி 500 கோடி மக்கள் உள்ளனர். இந்த புதிய ஆன்மாக்கள் வந்தது எப்படி? 500 கோடி ஆன்மாக்கள் புதிதாக உண்டானதா? ... அடடா ... இல்லை ... எனக்கு பதில் கிடைத்தது, ஆன்மாக்களின் எண்ணிக்கை  விலங்குகள் மற்றும் தாவரங்களை உள்ளடக்கியது, நாம் கோடிக்கணக்கில் அவற்றை அழித்துவிட்டதால், அவை நமக்கு ஒரு பாடம் கற்பிக்க நம்மிடையே பிறந்துள்ளன."
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார்; யார் ஒருவன் ஆன்மாவை கொல்ல நினைக்கிறானோ அது அவன் அறியாமையே ஆகும். ஆன்மா புதிதாக உருவாக்கப்பட்டவோ மற்றும் அது அழிக்கப்படுவதோ இல்லை. ஆனால் அவை ஒரு உடலுடன் இணைக்கப்படுவது அவை சுமந்து செல்லும் நன்மை , பாவங்களை , ஆசை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. அதனை பொறுத்து ஆன்மா அதற்கேற்ற உடல் / வடிவத்தை (விலங்கு / தாவரம் / மனிதன் போன்ற) ஆன்மா எடுக்கிறது, ஆனால் எந்த ஆன்மா உயர்கடவுள் மட்டுமே இலக்கு என்று வாழ்கிறதோ, அது மீண்டும் பிறப்பதில்லை, அது கடவுளை அடைகிறது. ஆன்மாவை எரிக்கவோ/வெட்டவோ அல்லது எந்த வகையிலும் அழிக்க முடியாது. இந்த உண்மையை நீ உணர், உடல் மட்டுமே  அழிக்கப்படுகிறது ஆன்மா  அல்ல. இங்கு பிறந்து எதற்கும் மரணம் நிச்சயம். இங்கு இறந்த எதற்கும், பிறப்பு நிச்சயம், இதிலிருந்து மீள்வது உயர்கடவுளை சரணடைவதன் மூலம் மட்டுமே!
"நமது வாழ்க்கை: நாம் அனைவரும் நாம் ஒரு நேரத்தில் இறக்க போகிறோம் என்று அறிந்தே உள்ளோம், ஆனால் அது சாம், ஜான், அல்லது ரகு ஆகியோருக்கு வேண்டுமானால் அருகில் இருக்க முடியும், ஆனால் எனக்கு அருகே இருக்க முடியாது இப்படி யோசித்து நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் எப்போதும் 70 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச வாழ்வோம் என்று நம்புகிறோம். அது சரி இந்த உத்தரவாதம் அளித்தது யார்?  அப்படியே இருக்கட்டும் ... இந்த உத்தரவாதம் கொண்டு, நாம் என்ன செய்வது? நாம் பொறியியல் அல்லது எம்.பி.ஏ. அல்லது சி.ஏ படிக்க வேண்டும், பெரிய சம்பளம், 1 அல்லது 2 வீடுகள் வாங்க மற்றும் கடன் தவணை செலுத்தவேண்டும், (முழுமையாக அது அடைந்தவுடன், நாம் அடுத்த கடன் வாங்கவேண்டும்) 1 அல்லது 2 குழந்தைகள், பள்ளிகள் தேடல், கல்லூரி இடங்களுக்காக ஓடுதல் , ஓய்வூதிய திட்டம், நல்ல நான்கு சக்கர வாகனம், மற்றும் மகன் அல்லது மகள் நகரம் / நாடு தாண்டி தொலைவில் தங்கியிருக்க, ஒரு மூத்த குடிமக்கள் திட்டத்தில் வைப்பு பணம் மற்றும் ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணத்திற்காக காத்திருக்கப்போகிறோம்! (பெரும்பாலானோர்  இந்த நிலையில் உணர்கிறார்கள், தாம் வாழ்ந்தது ஒரு வாழ்வே அல்ல, மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் வாழலாம் என்று) இந்த வாழ்க்கையைத் தான் 400 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழுகின்ன்றனர், இதே போலத் தான் நம் முன் இருந்த சந்ததியினரும் வாழ்ந்தனர்... அதனால், நாம்  யார் ? உங்களுக்கு தெரியுமா, 25 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு பங்களாவில் (தாதரில்) மும்பையில் வசித்த ஒருவரை ,  அல்லது  கி.பி. 1247 ல் ராஜஸ்தான் அரண்மனையில் வசித்த ஒருவரை ... நாம் வாழ்க்கையில் நமது நோக்கம் என்ன என்பது நமக்கு தெரியாது... உண்மையில் தெரியாது! எனினும், நாம் அனைவரும் இந்த உடல் எங்களுடன் குறைந்தபட்ச 70 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் . என்ன செய்யவதற்காக?... நான் ஒரு வரலாற்று பெருமை மிகு அல்லது ஒரு பிரபலமான நபராக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை ... நமக்குத் தெரியுமா, எத்தனை நூல்களை மற்றும் மொழிகள் இங்கே அழிந்தன, எத்தனை பெரும் மக்கள் வரலாற்றில்  சுவடில்லாமல் போனார்கள் என்று, நாம் கி.மு 12000 ஆண்டு வாழ்ந்த யாரையும் அறிந்துள்ளோமா, இல்லை ...  வரலாறு மற்றும் புகழ் கூட நேரம் செல்ல இவ்வுலகை விட்டு செல்லும். எனவே நாம் அறிந்து வாழ வேண்டியது, இந்த உடல் நமக்கு சொந்தமானது அல்ல என்பதும், உயர்கடவுளை தவிர வேறொன்றும் நிலையானதல்ல என அறிந்து நம் ஆன்மாவை அதனிடம் அடைக்களம் அடைய வழிபடவேண்டும். அதன் அர்த்தம் இதுவல்ல, நாம் நம் கடைமையை செய்யக்கூடாதென்று, ஆனால் இந்த உலக விஷயங்களிலும், பொருட்களிலும் நம்மை அளவிற்கு அதிகமாக இணைத்துவிடக்குடாது( நம்மால் சுயத்தை உணர்ந்து உலக பொருட்களிலிருந்து, எந்த கணமும் நம்மை பிரிக்ககூடிய நிலையில் வாழ்வது)"
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், ஒரு போர்வீரனின் கடமை போர்க்களத்தில் போராட வேண்டியது, அவனது கடமையை நிறைவேற்றாததன் மூலம் அவன் பாவம் அடைய நேரிடும் என்பதே நியதி. உலகமோ, அதன் மக்களோ தனது கடமையை நிராகரித்து சென்ற வீரனை பாராட்டாது மற்றும்  பயத்தினால் அவன் போர்க்களத்தை விட்டு சென்றதாக நினைக்கலாம். இந்த பேராசை பிடித்தோரின் உடல்களை கொல்வதன் மூலம், நீ கடமையை நிறைவேற்றுவாய் மற்றும் உரிமையுள்ள நிலையையும் அடைவாய். கிருஷ்ணன் மேலும் கூறினார்,  இன்பம் மற்றும் வலி, ஆதாயம் அல்லது இழப்பு, வெற்றி மற்றும் தோல்வி ஆகியவற்றை ஒன்றாகவே கருதி தனது கடமையை செய்யும் ஒருவன் பாவத்தை அடைய மாட்டான், ஏனென்றால் அவன் கடமையை செய்கிறான் மற்றும் முடிவின்  பிரதிபலனைப் பற்றி கவலைப்படுவதில்லை.
"நமது வாழ்க்கை: கடமையை செய்வது என்பது நம்மை பொறுத்தவரை, நம் குடும்பம் மற்றும் நம் வேலை என்ற எல்லைக்குள் மட்டுமே. நம் வாழ்வை தவிர, பெரும்பாலானோர்   வெளியே நடக்கும் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நம் தேவைகளை நிறைவு செய்வது கடமையின் ஒரு பகுதியாக உள்ளது, ஆனால் அதுவே அனைத்தும் இல்லை.  நாம் நமது குரலை வேறு எதற்காகவும் கொடுப்பதில்லை! மன்னிக்கவும், நாம் செய்கிறோம் ... நாம் நாடு, அநீதி / ஊழல் / சமூக தேவைகளை / மாற்றங்களை பற்றி நமது நண்பர்கள், குடும்பத்துடன் உட்கார்ந்து சோர்வடைய பேசுகிறோம், மேலும் நம்மை தவிர வேறு யாராவது வந்து நமக்காக அந்த வேலையை செய்வார் என்றும் உறுதியாக நம்புகிறோம் (நம்மை விட மற்றவர்கள் மீது அதீத நம்பிக்கை , அந்த விஷயத்தில்). நாம் பிரபல சமூக காரணங்கள் பின்னால் சென்று, சாலையில் நாம் மெழுகுவர்த்தி ஏந்தி நடக்க தயாரகிறோம், ஆனால் நாம் நமது அடுத்த வீட்டில் நடக்கிற பாகுபாடை நிறுத்த அடியெடுத்து வைக்க மறக்கிறோம். நாம் எகிப்தில் மற்றும் தில்லியில் நடப்பதை பற்றிப் பேசி ஆவேசப்படுகிறோம் ஆனால் நம் அருகிலுள்ள சமூகம் அல்லது தெருவில் நடக்கும் பிரச்சனையை பற்றி கவலைகொள்வதில்லை. இதற்கு அப்பால், த்தனை பேர் நமது வீட்டிற்கு வெளியே சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், இது நமது சமூகத்தின் / பொருளாதாரம் / அரசியல் / சுகாதார / சூழலின் சுத்தத்தை பற்றியதும் ஆகும் ... ஆனால் நாம் அனைவரும் கடமை உணர்வுள்ளவர்கள் ... நாம் நமது பேருந்திற்காக, நாம் நமது வேலைக்காக, நமது தூக்கத்திற்காக மற்றும்  நம்முடைய அனைத்து தேவைக்காகவும் ஓடுகிறோம் ... ஆனால் நம்முடைய  தேவைகளுக்கு மட்டுமே! "
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், முழுமையை அறிந்த ஒருவன் தன் எண்ணங்களை கிளை விட்டு படர விடுவதில்லை, முழுமையற்ற ஒருவன் அவற்றை படர விட்டு  தெளிவற்ற மற்றும் குழப்பமான நிலையை அடைகிறான். முழுமை உணர்ந்த ஒருவன், இங்கிருந்து எடுக்கப்படும் எல்லாம்   ஒரு நாள் இங்கேயே விட்டு போக வேண்டும் என்று அறிந்துள்ளான். அவன் இங்குள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்றவைகள் ஒரு காலத்தில் உருமாறி அழியும் என அறிந்து வாழ்கிறான்.
"நமது வாழ்க்கை: நாம் பெரும்பாலான நேரத்தில் கற்பனை உலகில் வாழ்கிறோம். நம் மனதில்  எவ்வளவு நேரம் நம்முடன் பேசுகிறோம்,  நம் மனதில் மற்றவர்களுடன் எவ்வளவு நேரம் பேசுகிறோம் , பேச மட்டும் அல்லாமல் கற்பனை திறன் மூலம் அவர்களின் நடத்தைகள் உருவாக்கி அதற்கு நம் பதிலையும், நடத்தையையும் பிறப்பிக்கின்றோம்! நாம் ஒரு அலுவலகத்தில் / செயலுக்குள் /குடும்பதிற்குள் நுழையும் முன்னே, நாம் நிலைமை என்ன என்று முன்முடிவு செய்கிறோம். நம் நேரத்தை உருவகப்படுத்துதல் மற்றும் கற்பனையிலேயே மிக அதிகம் செலவு செய்கிறோம், இன்னும் பலர்  நீண்ட எதிர்காலத்தை உருவகப்படுத்தி வாழ்கின்றனர்... அவர்கள், தங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும், எத்தனை பணம் சம்பாதிப்பேன் என்று வாடுகின்றனர்... அவர்கள் தற்போதைய வாழ்வையும் வாழ்வதில்லை, எதிர்காலத்தையும் வாழ்வதில்லை.  சிலர் கடந்த காலத்தை உருவகப்படுத்தி  இப்படி இருந்தால் இது நன்றாக இருந்திருக்கும் என்று கற்பனையில் வாழ்கிறார்கள்! மனம் எண்ணக்கிளைகளை பரப்பி அதில் பயணம் செய்ய வைப்பதில் வல்லது, ஆனால் அந்த கிளைகளை  வெட்டி நிகழ்காலத்தில் வாழ மட்டுமே விரும்பி, உயர்கடவுளை பற்றி உறுதியாக அல்லது நமது ஆன்மாவுடன் நம்மை இணைத்து எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் கடமையை செய்யவேண்டும்!"
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், வேதங்கள் (புனித விதிகள்) கடவுள்தன்மையுடையோரை (சூரியன், சந்திரன், பிற கடவுளர்களை ) அடைய, ஒரு நல்ல வாழ்க்கையை பெற, ஒரு நபரை வழிநடத்த முடியும், ஆனால் யோகி நிலை (சமனிலை) பெற்ற ஒருவன், இதனால் மகிழ்ச்சியடைவதோ, ஈர்க்கப்படுவதோ இல்லை. யோகி நிலையில் வாழும் ஒருவன் சதாரண வாழ்வை தன் சுயத்தைக் கட்டுப்படுத்தி வாழ முடியும். அவன் உயர்கடவுளின் அருள் பெரும்போது, அவன் உலகார்ந்த விருப்பங்களை இழந்து, எந்த இடையூறும் இல்லாமல் கடவுளை அடைகிறான். அந்த யோகிக்கு, வேதங்களால் எந்த உபயோகமும் இல்லை.
"நமது வாழ்க்கை: நம்மில் பெரும்பாலோனுருக்கு வேதத்தின் நோக்கம் மற்றும் அதன் பொருள் தெளிவாக தெரிவதில்லை. யாரோ சிலர் வேதத்தின் பொருளுணர்ந்து கற்று கொண்டு இருக்கலாம், ஆனால்  அவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை ... நாம் பெரும்பாலான நமது விழாக்களை / சடங்குகளை நோக்கம் தெரியாமல்,  கடவுளின் மொழி அல்லது விழா மற்றும் இதனால் அவர் என்று சந்தோஷப்படுவார் என நம்பிக்கை கொண்டு வீடு / கோயில் ஆகியவற்றில் செய்கிறோம், ஆனால்  நாம் எப்போதும்  நம் மனதில் / இதயத்தில் அவரை பற்றி மட்டும் யோசித்து நமது கடமை செய்வது, வேறு எதை விடவும் அதிகமாக அவரை மகிழ்வடைய செய்யும் என்பதை மறக்கிறோம்! எனினும், நாமோ சடங்குகள் மட்டுமே நமது குடும்பம் மற்றும் நமக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரும் என்று நம்புகிறோம். இது எவ்வளவு உண்மையற்றது! மேலும் சில கோவில் / தேவாலயம் / மசூதி போன்ற இடங்களில் சில பெரிய மனிதர்கள் / பணக்காரர்கள் ஆகியோர் முன்னுரிமை மற்றும் பூசாரிகள் இடம் இருந்து சில நல்ல வார்த்தைகள் பெறுகின்றனர், அதை அவர்கள், கடவுள் அவர்களை ஆசிர்வதித்தாக கருதுகின்றனர். கடவுள் இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும்  சமமாக உள்ளார், அவருக்கும் எந்த  ஒரு உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் இடையே  மத்தியஸ்தர் என்ற தேவை  (குரு என்பதின் கருத்து வேறு) இல்லை, எனவே அங்கே அவர்களுக்கு கொடுக்கப்படுகிற முக்கியத்துவம்  மனிதனால் தரப்படுகிறதே தவிர, அது கடவுள் அல்ல. முதல் விஷயம், உங்கள் கடவுள் அறிவை பிறப்பித்தவர், அவரை ஏமாற்றி விட முடியும் என் நினைக்க வேண்டாம். இதேபோல், சில கோயில்கள் / தேவாலயங்கள் / மசூதிகள் உயர் நன்கொடைகள் பெறுகின்றன. நாம் உறுதியாக இருக்கலாம், இந்த பணம் பாவத்திற்கான பங்கு பகுதியாக வருகிறதென. பலர் பாவ பங்கை கடவுளிடத்தில் திணித்து , தம் தண்டனையை குறைக்க வேண்டும் என்று வேண்டுகின்றனர்.
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், வெற்றி/தோல்வியில் சமனிலையில் இருப்பது  யோகா மற்றும் யோகி நிலை. விருப்பம்/கவலை இன்றி  அவனுக்கு கொடுக்கப்பட்ட செயல்புரியும் ஒருவன் உண்மையில் யோகி நிலைக்கு செல்கிறான். அவன் முடிவின் பலனை பற்றி கவலையின்றி உறுதியான நிலையில் கடமையை செய்கிறான்.  தான் எந்த நிலையில் உள்ளோமோ அந்த நிலையில், சுயத்தில் திருப்தி அடைபவனே,  உறுதியான ஞானத்தில் உள்ளவனாவான்!
"நமது வாழ்க்கை: நம்மில் எத்தனை பேர் இன்று வரை நல்ல வாழ்வை வாழ்வதாகவும், என் வாழ்வே சிறந்த வாழ்வு என்றும் கருதுகிறோம்? வெகு சிலர் ... நாம் இன்னும் சிறந்த வாழ்க்கை என வேறு ஒருவர் வாழ்க்கையை பார்கிறோம், நாம் இன்னும் சிறந்த நபர்   என வேறு ஒருவரை பார்கிறோம். நம்மை நிறைவு செய்ய இன்னமும்  வேறு ஏதாவது தேவைபடுகிறது. "காஸ்ட்அவே" என்ற திரைப்படம் ஒரு  தீவில் மாட்டி, வேறு வழியின்றி சுய திருப்தி அடைந்த ஒரு மனிதனை காட்டியது. பொருட்களின் மோகம் உங்களை என்றும் விடாது, நீங்கள் தான் பொருட்களின் மீதான மோகத்தை விட வேண்டும் ! நம்மிடையே பலரால் ஒரு போன் இல்லாமல் வாழ முடியாது, ஒரு தொலைகாட்சி இல்லாமல் வாழ முடியாது, நண்பர்கள் இல்லாமல் வாழ முடியாது, ஏதாவது  ஒரு இணைப்பு இல்லாமல் வாழ முடியாது, உண்மையில் அவை நாம் யார் என்று சுயமாக இருக்கவிடாமல், நம்மை ஏதாவது ஒன்றுடன் இணைத்து நம்மை உண்மையை மறக்க செய்து  அடிமையாக்கிவிடுகின்றன. யார் நாம், நாம் என்ன செய்கின்றோம் இங்கே, என அறிய மிகுந்த மனகட்டுபாடு தேவை ... நாம் நம்மை பற்றி நினைக்க தொடங்கவேண்டும், மனதின் உள்ளிருந்து ...திரும்பவும், சாம் மற்றும் ரகு உங்கள்  வாழ்க்கையில் என்ன செய்கின்றார்கள் மற்றும் உங்கள் மனைவி / மகன் / பெற்றோர் உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று நினைத்து வாழாதீர்கள்! ... கடவுளின் படைப்பில் நீங்கள் தான் மிகவும் அழகான படைப்பு மற்றும் கடவுளின் படைப்பில் உங்களை விட புனிதமானது எதுவும் இல்லை! "
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், ஒருவன் உணர்வுகளுக்கு ஆட்படும்போது உலக பொருட்களுடன் இணைகிறான், அதனிலிருந்து ஆசை பிறக்கிறது, நிறைவேறாத ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது, கோபத்திலிருந்து மாயை பிறக்கிறது,  மாயையிலிருந்து குழப்பம் பிறக்கிறது, மேலும் பகுத்தறிவை இழந்து  அழிவை நோக்கி செல்கிறான்.
இந்த பேச்சு தொடரில், நாம் இதே வார்த்தைகளை  புனித புத்தர் கூறியதையும் ஞாபகப் படுத்திகொள்ளலாம் ... ஏனெனில் உண்மை என்பது ஒன்றுதான்.

"நமது வாழ்க்கை: இந்த உலகத்தை மூன்று அல்லது நான்கு கடவுளர்கள் உருவாக்கவும் இல்லை மற்றும் ஆட்சிசெய்யவும் இல்லை. இந்த பிரபஞ்சம், மற்ற பிரபஞ்சங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் முதல் அணைத்தையும் பராமரித்து வருகிறது ஒரு தலையாய சக்தி. கூடுதலாக, ந்த தலையாய சக்தி கிருஷ்ணன் ! நான் இப்படி சொல்ல போகிறேன் என நீங்கள் நினைத்தால்,  நிச்சயம் இல்லை! இது நபி, இயேசு அல்லது எந்த பெயருடனும் இருக்க முடியும், ஆனால் ஒரு உயர்கடவுள் உண்டு என்பது மட்டும் உண்மை. என் பிராந்தியத்தில் (மதம் அதன் தொடர்புடையது), நான் கிருஷ்ணன் என்ற வடிவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன், நான்  அவரை உயர்கடவுள் என அழைக்கிறேன், ஆனால் சவுதி அல்லது இத்தாலியில் பிறந்திருந்தால், நான் வேறு பெயரில் அவரை அழைத்திருப்பேன்.  கிருஷ்ணன் கடல் கடந்து ரோம் சென்றதாக இல்லை, அல்லது நபி நியூசிலாந்து சென்றதாக, அல்லது இயேசு வியட்நாம் சென்றதாக  இல்லை. மதம் மற்றும் சடங்குகள், பிராந்தியம் மற்றும் கால நிலைமைகள் பொறுத்து பிறந்தது. ஆயினும் இதற்கு கடவுள் இல்லை என்று அர்த்தம் இல்லை. ஒரு  உச்ச சக்தி, நம் கற்பனை மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டு இந்த உலகை இயக்குகிறது. மனிதனின் பரிதாபம் என்னவென்றால், அவனால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் அது உண்மையானது இல்லை என்று நம்புவதுதான். எடிசன் மின்சாரத்தை கண்டுபிடித்து நிருபிக்கும்வரை  பழைய தலைமுறை அவரை ஒரு முட்டாள்  என்றே நினைத்தது, ஆனால் இப்போது மின்சாரம் சில மதிப்பெண்கள் தரும் பாடமாகிவிட்டது ... நாம் ஏதோ பார்க்க / ஏதோ கேட்க / ஏதோ உணர முடியவில்லை என்பதால், டவுள் இல்லை என்றாகிவிடாது ... இது நமது வரையறை .... மேலும் இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது ... நம்பிக்கை, அது மட்டுமே அந்த கடவுளை காண ஒரே வழி! 

No comments:

Post a Comment