Monday, August 19, 2013

அத்தியாயம் 6 - சுய கட்டுப்பாட்டு யோகா

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், செயலின் மீதோ, முடிவின் மீதோ பற்று இல்லாமல் தன் கடமையை செய்யும் ஒரு யோகி, செயலாற்ற இருப்பவனை விட மேலானவன். தன் எண்ணங்களை வென்ற ஒருவனே உயர் நிலைக்கு செல்கிறான். மனிதர்கள், தங்களை தாங்களே தாழ்த்திகொள்ளகூடாது,தன்னை வென்ற ஒருவன் தன் சுயத்திற்கு நண்பனாகிறான், அது இயலாதவனோ தனக்கு தானே எதிரி ஆகிறான். தன்னை வென்ற ஒருவனுக்கு மண்ணோ, நிலமோ,தங்கமோ அல்லது வேறு ஏதாகினும் எல்லாம் ஒன்று தான். அவன் தன்னை விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என உணர்ந்து, உயர்கடவுளின் மீது தன் எண்ணத்தை செலுத்துகிறான்.
""நமது வாழ்க்கை: நம் சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் பார்கிறோம், ஒருவர் மற்றவரிடம் பழகுவது அவர்களின் பதவி / சாதனை /அந்தஸ்து போன்றவற்றை அடிப்படையாக கொண்டு அமைந்துவிடுகிறது.நாம் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசும் போது, நாம் மிக பெரிய சாதனை செய்ததாகவும், அதே அலுவலக உதவியாளரிடம் பேசும்போது, அவருக்கு அறிவுரை செய்வதும் அவரை ஒரு முட்டாளை போல நடத்துவதும் வழக்கமாகிறது.  அவர்கள் இருவருமே இந்த உலகத்தில் கொடுக்கப்பட்ட தங்கள் கடமையை மட்டுமே செய்கினறனர். 1000 பேருக்கு வேலை தருகிற ஒரு தொழிலதிபராயினும்  அல்லது அவரது அலுவலக இடத்தை சுத்தம் செய்யும்  தொழிலாளி ஆயினும்இருவருமே சமமானவர்கள் தான்! இந்த உலகத்தில் எந்த உயிரினமும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ அல்ல, அனைவரும் சமமானவர்களே!  பதவி அதிகாரம் என்பது அந்த பதவியின் செயல் வெற்றிக்கு வழங்கப்பட்ட ஒரு உபகரணம் மட்டுமே! தனது முயற்சிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கும் ஒரு மனிதன், வாழ்க்கையில் தோல்வியாளனாயிருக்க வேண்டிய அவசியமில்லை, ஒருவேளை அவன் இணைப்புகள் இல்லாத வாழ்வும் எப்படி தோல்வியை கையாள்வது என அறிந்தும் இருக்கலாம். பெரும்பாலான வெற்றியாளர்கள், தோல்விகளை சந்தித்து அதிலிருந்து வெற்றி இலக்கை அடைந்தவர்களே, எனவே தான் அவர்களை நாம் பெரும் மனிதர்கள் என்கிறோம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு உயர் அதிகாரி முன்னால் உட்கார்ந்து பேசும் போது, நீங்கள் பயத்துடன் அல்லது பதட்டத்துடன் இருக்க வேண்டுமா? இல்லை...  நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ, என்ன அறிந்துள்ளீர்களோ அது அந்த அமைப்பு / தொழிலகம் / சமுதாயத்தில் தேவைப்படுவதன் காரணமாகவே, நீங்கள் அங்கே வேலைக்கு அமர்த்தபட்டிருக்கிறீர்கள், அதனால் உங்கள் பங்கை நீங்கள் முதலில் ஒப்பு கொள்ள வேண்டும். ஒரு தனிநபராக, நீங்கள் உயர் கடவுளின் வழிமுறைகளுக்கு நெருக்கமாகவும், வாழ்க்கை மற்றும் வேலையை நன்றாக புரிந்தும் இருக்கலாம். அதனால் நாம் யாரிடமும் தாழ்ந்தோ அல்லது உயர்த்தியோ நம்மை பிரதிபலிக்கதேவையில்லை."
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் , எவ்வாறு உடல் மூலம் யோகா செய்து மனதை கட்டுபடுத்தி, கவனத்தை நிலை நிறுத்துவதெனவும், யார் ஒருவன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உண்கிறானோ அல்லது உறங்குகிறானோ அவனால் அதை பயிற்சி செய்ய இயலாது என்றும் கூறினார். எவன் ஒருவன் தன் சுயத்தை, சுய மனம் கொண்டு பார்த்து, தனில் திருப்தியடைகிறானோ, அவனை பெரும் துன்பங்கள்  சேர்வதில்லை. யோகா பயிற்சி செய்யும் ஒருவன் தன் சுயத்தில் கவனத்தை செலுத்தி சிறிது சிறிதாக உணர்வுகளையும், இணைப்புகளையும் விட்டு, தனக்கு நிலையற்றதன்மை தருபவற்றை நீக்க ஆரம்பிக்கிறான். அவன் என்னை எல்லா இடங்களிலும், எல்லா பொருட்களிலும் பார்க்கிறான். அவனுக்கு நான் என்றும் மறைவதில்லைஎவன் ஒருவன் ஒப்பீடு தன்னுடன் மட்டும் உள்ளதோ, அவன் என்னை எங்கும் பார்கிறானோ அவன் உயர்ந்த யோகி ஆகிறான். எல்லா யோகிகளிலும் தன் மனதினுள்ளே என்னை யார் பார்கின்றானோ, என்னோடு இணைகின்றானோ அவனே உயர்ந்த யோகி.
"நமது வாழ்க்கை: மூன்று வகையான மக்கள் நம்மிடையே உள்ளனர், முதலாவது, எப்போதும் உயிர்வாழ போராடும் மனிதர்கள், அவர்கள் வாழ்வில் அனைத்துமே குறுகிய காலத்தில் வாழ்வதற்காக அல்லது இன்பத்திற்காக மட்டும் அமைகிறது. இரண்டாவது, ஒப்பீட்டு மனிதர்கள், தனது வாழ்க்கையில் எப்போதும் இவர்கள் இயக்கப்படுவது சூழல், சமூகத்தால் மட்டுமே, அவர்கள் மற்றவர்களின் வாழ்வுடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து குறிக்கோள்களை நிர்ணயிக்கின்றனர், அதை அடைய முயற்சிக்கின்றனர், மீண்டும் அவர்கள் ஒப்பிட தொடங்கி வாழ்கின்றனர். மூன்றாவது, முன் நிற்கும் மனிதர்கள், அவர்கள் வாழ்வில் எதையும் ஒப்பிடுவதில்லை, அவர்கள் தங்கள் உந்து சக்தியுடன் புதியவற்றை தொடங்குகின்றனர்.

ம்மில் பலர் இங்கே ஒரு ஒப்பீட்டு வாழ்க்கையை வாழ்கிறோம், நாம் நமது வாழ்க்கையை திரும்பி பார்க்க விரும்புவதில்லை. பயம் ... ஆம் நாம் பயப்படுகிறோம்!  உண்மையில் நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்கிறோமா, நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம், மற்றும் பலவற்றை சிந்திக்கவும் அஞ்சுகிறோம்... ஏனென்றால்  நாம் இவற்றை சிந்திக்கும் நேரத்தில், நம்மை மற்றவர்கள்  கடந்து போய்விடுவார்கள் என கவலைகொள்கிறோம்... எனவே நம்மை நாமே உந்தி தள்ளி, போட்டியிட்டுகொண்டிருக்கிறோம் ... நாம் முன் நிற்கும் மனிதர்கள் என்று கூறியவர்கள் தொழிலதிபர்களோ அல்லது உயரதிகாரிகளோ அல்ல, அவர்கள் தங்கள் மனதிலோ, மூளையிலோ தங்களை மற்றவருடன் ஒப்பிடாமல், எந்த மாற்றத்திற்கும் தயாராக தன் சுயத்தின் மீதோ அல்லது கடவுளின் மீதோ முழு நம்பிக்கை கொண்டு, வாழ்வில் முன் நோக்கி செல்கின்றனர். சுய நம்மிக்கை அல்லது கடவுள் நம்பிக்கை இவை இரண்டில், ஏதாவது ஒன்று அவசியம் அந்த உயர் கடவுளை அடைவதற்கு."

No comments:

Post a Comment