Saturday, August 24, 2013

அத்தியாயம் 7 - ஞானத்தோடு புரிந்துணர்வு யோகா

கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும் அகம்பாவத்தை நான் உருவாக்கினேன் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, இங்குள்ள உயிர்களை  உருவாக்கினேன். இவை அனைத்தும் மணிகள் நூலின் மீது சரமாக தொகுக்கப்பட்டது போல என் மீது அமைந்துள்ளது. மேலும் அவர் கூறினார், நீரின் சுவையும், நிலவின் வெளிச்சமும், வேதங்களில் உள்ள "ஓம்" என்ற ஓசையும், மண்ணின் வாசமும், ஒளிக்கதிர்களின் ஒளியும், அறிவாளிகளின் அறிவும் மற்றும் அனைத்து வாழ்வும் என்னுள் அமைந்ததுவே.தூய்மை, செயல் புரிதல் மற்றும் செயலாற்றமை போன்ற பல பண்புகளும் உயர்கடவுளான என்னிடம் இருந்து வருகிறது, ஆனால் நான் அவற்றினுள் இல்லை, இவை அனைத்தும் தெய்வீக மாயைகள், இவற்றை கடப்பது மிகவும் கடினம். துயரத்தில் இருப்பவன், அறிவை தேடுபவன், செல்வத்தை தேடுபவன் மற்றும் ஞானிகள் இவர்கள் அனைவருமே என்னை வழிபடுகின்றனர், இவர்களில் என்னை மட்டும் குறிக்கோளாக வாழும் ஞானியே எனக்கு விருப்பமானவன். நான் வடிவம் இல்லாமலும் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் இருக்கிறேன், மனிதர்கள எந்த வடிவத்தை பின்பற்றி என்ன வேண்டுகின்றனரோ அதை அவர்கள் அடைகின்றனர், இதில் எவன் ஒருவன் என்னுடைய  உயர் வடிவத்தினை வழிபடுகின்றானோ அவன் என்னை அடைகின்றான், அவன் அழிவற்ற நிலைக்கு செல்கிறான். நான் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலத்தினை அறிந்தவனாயிருக்கிறேன், ஆனால் என்னை அறிந்தவர் எவருமில்லை. ஞானமுற்றோன் இறக்கும் தருவாயில் கூட என்னை வணங்கி என்னிடம் வருகின்றான், அவர்கள் மட்டும் அன்றி பாவம் செய்தவர்கள் கூட இறக்கும் போது என்னிடத்தில் சரணடைவார்கள் என்றால் என்னிடம் வந்தடைகின்றனர்.

"நமது வாழ்க்கை: இந்த பிரபஞ்சம் ஒரு அற்புதமான இடம், இதில் பல அற்புதமான படைப்புகள் உள்ளன! ஆனாலும் நாம் சற்று அருகே சென்று பார்த்தால், இவை அனைத்திலும் சில பொது அமைப்புகளை காணலாம். ஒரு உலோகத்தின் அணு, ஒரு உடலின் ஒரு செல் போன்ற மிகச்சிறிய வடிவமாயினும்,  மற்றும் மிகப்பெரிய இந்த பிரபஞ்சமே ஆயினும், இவை அனைத்தும் தன் மையத்தில் ஒரு கருவையும், அவற்றை சுற்றி சுதந்திரமாக சுற்றி திரியும் துகள்களும், மற்றும் சுற்றுவழிப்பாதையில் சுற்றி திரியும் துகள்களும் (எலக்ட்ரான்,கிரகங்கள்,போன்றவை) கொண்டு அமைந்துள்ளது, இங்கு அனைத்து பொருள் கூறுகள் மற்றும் உயிரினங்களின் அடிப்படையும் பொதுவான வடிவத்திலேயே உள்ளது. எனவே, நாம் பகவத் கீதையில் கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார் என படிக்கும் போது, ஆச்சரியம் ஒன்றும் இல்லை. மேலும் நியூட்டன் விதிகளின் படி (ஆம். .. பள்ளியில் நமக்கு மதிபெண்கள் பெற்று தந்த அறிவியல் பாடம்!) இந்த பிரபஞ்சத்தில் ஆற்றலை உருவாக்கவோ முடியாது மற்றும் அழிக்கவோ முடியாது, ஆனால் அது ஒரு வடிவத்தில் இருந்து மற்றொரு வடிவிற்கு மாற்ற முடியும். இது ஒரு அறிவியல் கோட்பாடு எனும் போது, நாம் கேள்வி கேட்பதில்லை, தே ஒரு புனித புத்தகத்தில் வரும் போது நாம் அவற்றை நம்புவதில்லை ... கடவுள் பிறப்பு மற்றும் அழிவற்றவர் மற்றும் அதே போல் ஆன்மா பிறப்பதுமில்லை மற்றும் இறப்பதுமில்லை, ஆனால் அவை வெவ்வேறு உடல்களின் வடிவங்களை அடையமுடியும்... அறிவியல் என்பது அவரது படைப்புகளை படிக்க பயன்படுத்தப்படும் ஒரு மொழி, ஆனால் அது கடவுளோ அல்லது அவரை அடையும் பாதையோ ஆகாது, அவரை அடையும் ஒரே வழி "நம்பிக்கை", அது மட்டுமே நம்மை உயர் கடவுளிடத்தில் இட்டு செல்லும்.

No comments:

Post a Comment