அர்ஜுனன், செயலாற்றாமை மற்றும் செயல் யோகா இவற்றில் எதை பின்பற்றுவது என குழப்பமடைந்தான்.
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், செயலின் மூலம் யோகா புரிதல்
, செயலாற்றாமையை விட மேன்மையானது. எவன்
ஒருவன் சமன்திறன் பராமரித்து எந்த வெறுப்பு அல்லது விருப்பு மற்றும் எதிர்ப்பத ஜோடிகளின் (நன்மை, தீமை போன்ற) ஆளுமை இன்றி,
செயலுடனோ அல்லது முடிவுடனோ தன்னை இணைத்துகொள்ளாமல் செயல்புரிவானோ அவன்
முக்தியடைகிறான். செயலாற்றாமை என்பது கடினமான ஒன்று, துறவிகளால்
மட்டுமே செய்ய கூடியது. எவன் ஒருவன், யோகா நிலை (சமன்திறன்)
கொண்டுள்ளானோ, எவன் மனம் தூய்மையானதோ, எவன் தன்னையே வென்று தன் உணர்வுகளை அடக்க வல்லவனோ, அவன்
செயல்களால் களங்கம் அடையமாட்டான். அவன் அறிந்துள்ளான்,
அவன் செய்வதேதும் இல்லையென, கண்கள் திறத்தல்,
கேட்டல், தொடுதல், கைகளை
பிடித்தல், தூங்குதல், சாப்பிடல், முகர்தல், கேட்டல், பார்த்தல் உள்ளிட்ட
அனைத்தையும் அவன் கடவுளிடத்தினில் அர்பணிக்கிறான்.
அவன் தாமரை இலை தண்ணீருடன் இருப்பது போல் வாழ்கிறான்.
உடலாலும், மனதாலும் மற்றும் உணர்வுகளாலும் யோகிகள் (சமனிலையில் வாழும் ஒருவர்) இணைப்பு
இல்லாமல் செயல்படுவதோடு, மன சுய சுத்திகரிப்புடன் வாழ்கின்றனர்.
"நமது வாழ்க்கை: நம் வாழ்க்கையில், நாம் சுவாசித்து
நுரையீரலை நிரப்புகிறோம், நாம் இரத்தத்தை நாளங்களில்
அனுப்புகிறோம், நாம் உணவை ஜீரணிக்கிறோம், நாம் நரம்பு அமைப்புகள் வேலை செய்ய
கட்டளையிடுகிறோம், நம் அனுமதி இன்றி இவற்றில்
ஏதுவும் வேலை செய்யாது! .... ஓ! மன்னிக்கவும்,
இவற்றில் எதுவும் நாம் செய்வதில்லை, நமது சிந்தனைக்கும்
அப்பாற்பட்ட சக்தி அவற்றை கவனிக்கிறது, ஆனால் நாம் நினைக்கிறோம் நாம் சாப்பிட்டால்
மட்டும் இவை அனைத்தும் தானே உடலில் நடக்குமென்று! ... உண்மையென்னவென்றால், "உடல்" எனப் பெயரிடப்பட்ட ஒரு முழுமையான சிக்கலான
அமைப்பை நாம் கொண்டுள்ளோம், ஆனால் அது என்றும் நமது கட்டுப்பாட்டில்
இல்லை! (நாம் பாக்டீரியாவை கண்டுபிடித்து கொல்ல வெள்ளை அணுக்களை பணிக்கிறோமா என்ன?) இருப்பினும், உடல் மிக
அதிக அறிவுடன் நமக்கு தெரியாமலேயே செயல்படுகிறது! ஆனாலும் அவ்வுடல் செய்யும் வேலைகளின்
முடிவை மட்டும் நமதென்று கொண்டாடுகின்றோம்! உதாரணமாக, ஒரு நாள் நாம் விழித்தெழும்
போது, நம் கைகள்
வேலை செய்யவில்லை; நாம் கைகளை வேலை செய் என கட்டளை இட முடியுமா? முடியாது.... எனவே நம் உடலில் நன்றாக
வடிவமைக்கப்பட்ட நுண் அமைப்பு, இன்று மட்டும் அல்ல எதிர்காலத்திலும்
நம்மால் அன்றி ஒரு உயர் சக்தியினால் கவனிக்கப்பட்டு, செயல்படும்போது,
ஏன் அந்த உடலால் விளையும் செயலையும், முடிவையும்
மட்டும் நமதென்று கொள்கிறோம். உங்களையும் என்னையும் காக்கின்ற
அவனே செயலையும் செய்கிறான், எனவே எல்லா நன்மை,தீமையையும் அவனிடம் விட்டு கடமையை செய்யவேண்டும்.”
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், ஆசை பிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சமனிலையில் வாழும் ஒருவன்,
துறவி, பறவை, நாய், நாய் தின்னும் மனிதன்
போன்ற யாராகினும் அவரை ஒரே வழியில் பார்கிறான்.
அவன் அனைத்து சிந்தனை மற்றும் நடவடிக்கைகளை என்னிடத்தில் விட்டுவிடுகிறான். அவன் ஒவ்வொரு
கணமும் அனைத்து உயிர்களுக்கும் முதல் மற்றும் முடிவு உண்டு என்பதையும், இணைப்புகள், உறவுகள்
அவனுக்கு துன்பத்தை தரவல்லது என அறிந்து என்னிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து வாழ்கிறான்.
"நமது வாழ்க்கை: பலமுறை
நாம் கடவுளை நம்மில் இருந்து வேறுபடுத்தி, நாம் தான்
எல்லா செயல்களையும் செய்வதாக நம்புகிறோம். நாம் கடவுளை வீட்டின்
அல்லது அறையின் ஒரு மூலையில், ஒரு மாடத்தில் வைக்கிறோம்,
அதேபோல் கோவில் / தேவாலயம் / மசூதியில் கடவுளை வைத்து அவர் அங்கே மட்டும்
தான் உள்ளார் என்று நம்புகிறோம். நம் கடவுளின் முன், நாம் புனிதம்
இல்லாத எதையும் செய்யகூடாது என்று நம்புகிறோம். முதலில், நாம் வடிவமைப்பு மூலம், கடவுளை நம்மிடமிருந்து
பிரிக்கிறோம். இரண்டாவது, நாமே எல்லா செயல்களையும் செய்யவதாகவும்
கடவுள் ஒரு விருந்தாளி என எண்ணுகிறோம், மற்றும்
கடவுள் புனிதமான செயல்களில் மட்டுமே உள்ளார், மற்ற எதிலும்
இல்லை என எண்ணுகிறோம். ஆனால் கடவுளோ, நம்முடைய
எல்லா செயல்களையும் அவரிடம் ஒப்படைக்கவேண்டும், அவர் ஒவ்வொரு
இடத்திலும் ஒவ்வொரு உயிரிலும் எப்போதும் உள்ளார் என கூறுகிறார். ஆனாலும் அவரின் பேச்சை நாம் கேட்பதில்லை. சில நேரங்களில்
ஏதோ கடவுள் கால் சென்டர்/தொலைபேசி சேவை நடத்துவது போல,
எப்போதெல்லாம் அவரின் தேவை உண்டோ அப்போதெல்லாம் ஒரு விண்ணப்பத்தை செய்து,
அவர் சேவையை பூர்த்தி செய்ய காத்திருக்கவேண்டியது. அது நடக்காவிடில் அவரிடம் சென்று ஒரு புகார் மனுவை தர வேண்டியது. கவலைப்படாதீர்கள், நம்மில் பலர் வாரந்திர, மாதந்திர அல்லது வருடாந்திர சந்தா செலுத்துவதாகவும் நம்புகின்றனர்!
No comments:
Post a Comment