Thursday, August 15, 2013

அத்தியாயம் 3 - செயல் யோகா

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்டான், அறிவுசார்ந்த யோகா, செயலை காட்டிலும் மேலானது என்கிறீர்கள், அப்படியாயின் இதை தெரிந்து கொண்டு, நான் ஏன் கொலை செய்ய வேண்டும்? கூடுதலாக, ன்னுடைய உரையில் முரண்பாடு தெரிகிறது, எந்த வழியும் தெளிவாக இல்லை என்று கிருஷ்ணனிடம் தெரிவித்தான். கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், இரண்டு வழிகள் உள்ளன, ன்று யோகா அறிவு வாழ்க்கை இரண்டாவது மற்றொரு யோகிகள் நடவடிக்கை பாதையை தொடர்ந்து வாழ்வது. ஒரு செயலை செய்யாததன் மூலமோ அல்லது அந்த செயலை புறக்கணிப்பதன் மூலமோ, நீ செயலற்ற நிலைக்கு செல்லமாட்டாய்மேலும் உண்மையில் இந்த உலகில் எந்த உயிரினமும் செயலற்ற நிலையில் எப்போதும் இல்லை.  இயற்கையான குணங்கள் எப்போதும் வேலை செய்துகொண்டே இருக்கின்றன.
உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இங்கே கொடுக்கப்பட்ட வார்த்தை "யோகா" மூச்சு பயிற்சி அல்லது ஒரு "யோகா வகுப்பு"  பற்றி அல்ல. அது ஒரு சமநிலை, இந்த நிலையில் செயல்கள், முடிவுகள் மற்றும் சுற்றி நடப்பவைகளை, சுய நினைவுடன் சமநிலையில் ஏற்று வாழ்வது. இங்கே வார்த்தைகளுக்கு நாம் விளக்கங்கள் தேவைகேற்ப மட்டுமே கொடுக்கப்போகிறோம்.
"நமது வாழ்க்கை: நம்மில் சிலர் ஒரு கணத்தில் நான் இன்று முதல் கடவுளை மனதார வழிபடபோகிறேன் என முடிவு செய்கின்றனர் (ஆமாம், பலர் கடவுளை வழிபடுவதையும், நற்தொண்டு  செய்வதையும் நேரத்திற்கு தகுந்தாற்போல் முடிவு செய்கின்றனர்), உடனே பகவத் கீதை போன்ற ஒரு புத்தகத்தை வாங்கி படித்து, தொலைக்காட்சியில் பக்தி சேனல்களை பார்க்க தொடங்கி அல்லது  மத கூட்டங்களில் பங்கேற்க துவங்கி, இந்த உலகத்தில் எல்லாம் பொய் எந்த பொருளும் உண்மையல்ல என நினைத்து மிகவும் வித்தியாசமாக நடக்க தொடங்குகின்றனர் மற்றும் கடமையை மறக்கின்றனர், இதனால் அவர்களது குடும்பத்தினர் சலிப்பு மற்றும் சோர்வடைகின்றனர்.  நம்மில் சில வீடுகளில் கீதையை வைப்பதில்லை, நாம் ஒன்றாக போர்க்களத்தில் கிருஷ்ணன் மற்றும் அர்ஜூனன் உள்ள படத்தை நமது வீடுகளில் வைப்பதில்லை, அது வீட்டில் போர் கொண்டுவரும் என நம்புகின்றோம். உண்மையில் கீதையோ, எப்படி சாதாரண வாழ்க்கையில் சமன்திறன் கொண்டு வாழ்வது என நமக்கு சொல்கிறது, இது ஒவ்வொருவரும் படித்து அறிந்துகொள்ளவேண்டியது. பெரும்பாலானோர்க்கு கீதையின் சாரம்சம் கூட தெரியாது! நம் வாழ்வில் நாம் எதை இழக்க வேண்டும், எதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெளிவில்லாமல், சமநிலையில் இல்லாமல், தீவிரமாய் ஒரு செயலை திடீரென செய்வதும் பின் அது ஆகாது என நிறுத்துவதும் நன்மை தராது . நம்மை போலவே அர்ஜுனனும் இந்த நேரத்தில் தன் அரைகுறை  அறிவால் குழம்பி நிற்கிறான்."
நம்மில் சிலர் தியானம் செய்ய முயற்சிக்கிறோம், அது ஒரு செயலற்ற நிலை எனக்கருதி. நாம் சாதாரணமாய் கண்களை மூடி செய்யும் தியானம், நம் எண்ணங்களை உடைக்கவும், இரத்த அழுத்தம் குறைக்கவும் அல்லது மன அயர்வை நீக்கவோ ஒரு சில நிமிடங்கள் உதவும். எனினும், நாம் தியானத்தை முடித்தவுடன், நாம் நமது தொலைபேசியை தேடவும், நாம் மெயில்கள் பார்க்கவும், வாக்குவாதம் செய்யவும் ஆரம்பிக்கிறோம், அதாவது நாம் சாதாரண வாழ்க்கைக்கு மீண்டும் வருகிறோம் ... உண்மையில், தியானம் இந்த நிலையில் அவசியமாக அமைகிறது. அதாவது செயலுடனோ அல்லது அதன் முடிவுடனோ நம்மை இணைக்காமல், கடமையை தொடர்ந்து செய்வது. எந்த ஒரு மனம் இதனை தினசரி வாழ்வில் செய்யவல்லதோ அதுவே உண்மையான தியானத்தில் உள்ளது, 15 முதல் 30 நிமிடங்கள், சில வார்த்தையை கண்ணை மூடி உச்சரித்து மீண்டும் சாதாரண நினைவுக்கு திரும்பி வந்து, அல்லல் படும் மனமல்ல.
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், உணர்வுகளை உறுப்புகள் மூலம் கட்டுப்படுத்துத்துவது சரியான முறையல்ல, ஆனால் மனதின் மூலம் உணர்வுகள் மற்றும் அவற்றின் ஆதார பொருட்கள் மீது கட்டுப்பாடு செய்வதே உயர்ந்த வழி. எவன் ஒருவன் மனதில் மூலம் உணர்வுகளை கட்டுப்படுத்தி அவனது உறுப்புகளை கர்ம யோகாவில் ஈடுபடுத்தி தன் கடமையை செய்கிறானோ அவன் மேன்மையான நிலைக்கு செல்கிறான்.
"நமது வாழ்க்கை: நம்மில் பலர் வெவ்வேறு பழக்கம் கொண்டுள்ளோம், சில பழக்கங்கள் நமக்கே பிடிக்காது, உதாரணமாக, நாம் தினசரி அடிப்படையில் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம், ஆனால் நாம் எழ முயற்சிக்கும்போது, ஏன் மற்றொரு 15 நிமிடங்கள் தூக்கங்கூடாது என நினைத்து நாம் உறக்கத்திற்குள் நழுவுகிறோம். இதேபோல், சிலர் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என நினைக்கின்றனர், ஆனால் முடிவதில்லை ... இதற்கு காரணம், நம் கட்டுப்பாடுகளை உணர்வுகளின் மீதோ அல்லது உறுப்புகளின் மீதோ விதிக்கிறோம், இதனால் தோல்வி அடைகிறோம். உணர்வுகள் வல்லமையாது ஆனால் மனம் அதை விட சக்தி வாய்ந்தது. மனத்தால் அறிவு கொண்டு ஆராயமுடியும், ஆனால் உணர்வுகளால் அது முடியாது. எனவேமனதை கட்டுப்படுத்துவது நடைமுறையில் எளிதானது. நம்மில் பலரும் இதனை அறிந்திருப்போம், நம் மனதில் நாம் ஒரு நேரத்தில் எழவேண்டும் என்று நினைத்துவிட்டால், அலாரம் கூட அடிக்கதேவையில்லை நாம் சரியான நேரத்தில் எழுகிறோம், ஆனால் மனதில் பதிய வைக்காவிட்டால், அலாரம் அடித்தாலும் அதை அணைத்துவிட்டு தூங்கிவிடுவோம் ".
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், ஒவ்வொரு நடவடிக்கைக்கும் விளைவுகள்/முடிவுகள் உண்டு, அதனை அர்பணித்து தன் கடமையை செய்ய வேண்டும், எவன் ஒருவன் தன்னுடைய சுயத்தில் திருப்தி   அடைகிறனோ, அவனுக்கு எந்த ஒரு செயலாலும் பலனில்லை. அவன் முடிவுடன் மட்டும் அல்லாமல் செயலுடனும் தன்னை இணைத்துக் கொள்வதில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒருவனும் தன் கடமையை செய்யவேண்டும். சொர்கம், பூவுலகம் மற்றும் பாதள உலகம், இந்த மூன்றிலும் அடையகூடியது எதுவுமே இல்லாத நானும் என் கடமையை செய்துகொண்டே இருக்கிறேன்
"நமது வாழ்க்கை: எனக்கு எப்போதும் இந்த கேள்வி உண்டு, உங்களிடமும் அது இருக்கலாம், எதற்காக கடவுள் என்னை பிறப்பித்தார், அவர் என்ன நிரூபிக்க பார்கிறார், நான் இங்கு பிறக்காவிட்டால் நன்றாக இருந்திருக்கும்."ம்", இதுவரை என் மனதிற்கு புரியக்கூடிய வகையில் ஒரு பதில் கிடைக்கவில்லை. கடவுள் இவ்வுலகில் உயிர்களை பிறப்பிக்கிறார், காக்கின்றார் மற்றும் அழிக்கின்றார், எந்த ஒரு இணைப்பும் இல்லாமல், முடிவை எதிர்பார்த்தோ அல்லாமல். ஆனால் இவ்வுலகில் பிறப்பிக்கபட்ட உயிர்களோ தம்மை அனைத்து வித பந்தங்களோடு இணைத்து கொண்டு மகிழ்கின்றன, அதே ஒரு நாள் துன்பம் என்றுணர்ந்து, ஏன் கடவுள் என்னை இங்கே பிறக்கவைத்தார் என்று கேட்கிறோம். என்ன அடைவதற்காக , அவர் என்னை இங்கே பிறப்பிக்கவேண்டும்? ஆனால் அவரோ தான் தன் கடமையை செய்வதாகவும், அவர் அடைவதற்கு எதுவும் இல்லை என்றும் கூறிவிட்டார், ஆனால் நம்மாலோ அதை ஏற்க முடியவில்லை. யாரவது பலனின்றி ஒரு செயலை செய்வார்களா? பேசாமல் கடவுள் தன் வேலையை நிறுத்திவிடலாம், இப்படி நமது சிந்தனை. முதலில், நாம் பலனின்றி கடமையை செய்வதை ஏற்கமுடியவில்லை, இரண்டாவது, கடவுள் ஏன் தன் வேலையை நிறுத்தகூடாது என அவருக்கும் அறிவுரை தருகிறோம். கடவுள் நமக்கு பிறப்பு, இறப்பிலிருந்து வெளியே வர, யோகி நிலையில் அவரை மற்றும் உறுதியாக பின்பற்ற, வழியும் சொல்லியுள்ளார். ஆனாலும் நமக்கோ இங்குள்ள எல்லா இன்பத்தையும் அனுபவிக்கவேண்டும் ஆனால் நம் வழியால் நாம் துன்பத்தை அடையும்போது,நாம் கடவுளை கேள்வி கேட்பதோடு அல்லாமல் அறிவுரையும் செய்கிறோம் !
கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கூறினார், ஞானமடைந்த ஒருவன் தன்னை இணைக்காமல் செயல் செய்யவல்லவனாகிறான், ஆனாலும் அவன் தன் ஞானத்தை அதை ஏற்க இயலாத ஒருவனிடம் தரக்கூடாது. ஏனென்றால் அது, அந்த மனிதனின் வாழ்வில் குழப்பத்தை தரும், மற்றும் அவனால் சாதரண வாழ்வை தொடர்வதில் கடினம் ஏற்படும். ஒவ்வொரு உயிரினமும் இவ்வுலகில் அதன் குணாதிசயங்களுக்கு தகுந்தவாறு தன் செயலில் ஈடுபடுகின்றன. உணர்வுகள் அவர்களை கட்டுப்படுத்துகின்றன. ஞானமடைந்தவன் அந்த உணர்வுகளை மேலாண்மை செய்ய அறிந்துள்ளான். மேலும் ஒருவன் மற்றொருவனுக்கு கொடுக்கப்பட்ட கடமையினுள் நுழைந்து அதனை தான் ஏற்க கூடாது, அது ஏற்கதக்கதல்லஎப்படி நெருப்பை சுற்றி புகை சூழ்ந்துள்ளதோ, அது போல் அறிவை சுற்றி ஆசை சூழ்ந்துள்ளது, எனவே ஞானமுடைய ஒருவன் ஆசையை, உயர்கடவுளினிடத்தில் தன் எண்ணத்தை அர்பணித்து, அல்லது பிறலாது கடமை செய்து யோகி நிலையடைகிறான்.
"நமது வாழ்க்கை: வாழ்க்கையில், நாம் ஒருவருக்கு ஒரு விஷயத்தையோ அல்லது பொருளையோ அவர்கள் ஏற்க கூடிய அளவிற்கு மட்டுமே கொடுக்கவேண்டும். எல்லாரும் எல்லாவற்றையும் ஒரே அளவிற்கு, ஏற்க முடியுமானால், எல்லாரும் ஒரே அளவில் இயந்திரம் போன்றே வாழ்வோம். வழ்வில் தேவை மற்றும் பூர்த்தி செய்தல் இருக்காது. எல்லாரும் மருத்துவராக அல்லது  பொறியாளராக இருந்தால் இங்கு வாழ்வு நடக்காது. உலகின் சுழற்சியில் ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஏற்ற வேலையில் ஈடுபடுகின்றனர். இதில் எவன் ஒருவன் தன் பங்கை உணர்ந்து கடமையாற்றி, இணைப்பின்றி வாழ்கின்றானோ அவனால் மற்றவர்களுக்கு வழிகாட்ட இயலும். ஆனால் மற்றொருவனால் எடுத்துகொள்ளும் அளவிலேயே அந்த ஞானம் கொடுக்கப்படவேண்டும், இல்லையினில் அமைதியற்ற நிலை அதை ஏற்பவன் வாழ்வினில் உண்டாகலாம். ஒரு கட்டிட தொழிலாளி 25வது மாடியில், வானத்திற்கும் தரைக்கும் இடையே தொங்கிகொண்டிருக்கிறான், அவனிடம் சென்று இந்த அறிவை கொடுத்தால் அவனால் ஏற்கமுடியுமா?!..... ஏன் முடியாது, கட்டிட வேலை எனபது அவனது தொழில், அதன் அர்த்தம் அதுவல்ல அவன் ஞானமற்றவன் என்று, இது ஒவ்வொரு மனிதனிலிருந்தும் வேறுபடும். ஆனால் ஏற்க இயலாத ஒருவனிடம் இவற்றை பேசி குழப்பக்கூடாது. அதேபோல் ஒருவர் மற்றொருவருக்காக முடிவு செய்தல் கூடாது, அதுவும் உரிமையென கருதி முடிவு செய்தல் கூடவே கூடாது. இது உங்கள் மனைவி, மக்கள், பெற்றோர் யாராயிருந்தாலும் சரி! அது போன்ற உரிமையை கடவுள் யாருக்கும் தரவில்லை. பெரும்பாலானோர் தன் சுய வாழ்வில் முடிவெடுக்கமுடியாமல், தன்னை சார்ந்தவரின் வாழ்விற்காக முடிவெடுத்து பரிசீலிகின்றனர். நாம் ஒருவருக்கு வழிகாட்டலாம், உறுதுணையாக இருக்கலாம், ஆனால் அவர்களுக்காக முடிவெடுப்பதோ அல்லது அவர் கடமையை நாம் செய்வதோ, பாவமாகும். இன்னும் ஒரு நிலையில், ஒரு நாட்டிற்கோ, கூட்டத்திற்கோ, அணிக்கோ தேர்ந்தெடுக்கபட்ட சிலர் முடிவெடுக்கின்றனர், அது அவர்களின் கடமை. அவர் வாழ்வில் பாவ,புண்ணியங்கள் அவர் கடமையினை பொறுத்து அமையும்.

எப்பொழுது யாரும் தலைமை ஏற்க தயாராக இல்லையோ, அப்போது தலைமை ஏற்றிடு! எப்பொழுது யாரும் முடிவெடுக்க தயாராக இல்லையோ, அப்போது முடிவெடுக்கும் உரிமையை ஏற்றிடு! இதை நம் கடமை என்ற சமயத்தில் மட்டுமே ஒதுக்கிடவேண்டும்!

No comments:

Post a Comment