நீங்களும் நானும், இதைப்
படிக்கும்பொழுது, பலவித வியாக்கினங்களைப் புரிந்து கொண்டு
விட்டொம். பகவான் கிருஷ்ணரைப் பற்றியும்
அர்ஜுனனைப் பற்றியும் நமக்கே உரிய கற்பனைகளாலும் சிந்தித்தோம். ஒரு சிலவற்றை நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள். ஒரு சிலவற்றை நீங்கள் எதிர்த்தீர்கள். இருந்தும் நம் இருவருமே ஒரு குரலில்
ஒன்றுபட்டிருந்தோம். அதாவது நாம் இருவருமே
அந்த ஒரே பரமாத்மாவிலிருந்து வந்தோம் என்பதையும், நாம் அந்த பரமாத்மாவின் அங்கங்களே என்பதையும், ஒப்புக்
கொண்டோம். இந்த சூழலில் வயது வரம்பு
இல்லை, பணமும் ஒரு
பொருட்டல்ல. ஒரு அந்தஸ்து என்பது கிடையாது.
இதைப் படிப்பதால் அல்லது எழுதும்பொழுதோ அல்லது இதைப் பற்றி வாதிடும்பொழுது,
இன்றிலிருந்து நாளைக்கு நாம் மாறிவிடப் போவதில்லை. நாம் செய்துகொண்டிருக்கும் பலவற்றை மீண்டும்
மீண்டும் செய்துகொண்டுதான் இருக்கப் போகிறோம்.
அதே போல்தான் செய்து கொண்டு இருப்போம்.
அப்படியே எதுவுமே அவரிடமிருந்துதான் வருகிறது என்று உணர்கிரேன். என்னையும் உட்படவே அவரிடமிருந்து வருகிறது
என்று உணர்கிறேன். இந்த உணர்வே
வாழ்க்கையில் எதிர்ப்படும் பலவற்றை மேலாண்மை செய்ய உதவும். அறிமுகத்தில் நான் ஒரு அடையாளத்திற்காக
தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னேன்.
இப்பொழுது அந்தத் தேடல் முடிந்து விட்டது. இப்பொழுது நான் யார் என்பது எனக்கு விளங்கி
விட்டது. நான் இப்பொழுது தனிமையாக
இருப்பதாக நினைக்கவில்லை. எதிர்காலத்திலும்
எந்தவித தனிமையும் என்னை அண்டப் போவதில்லை.
நிச்சயம் நான் தனியாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்கிறேன். உங்களுக்கு என்னுடைய கருத்துக்களிலிருந்து
வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்.
நல்லது! ஏனென்றால் நான் எழுதியது
எல்லாமும் அவர் கொடுத்தவையே. நீங்கள் நினைப்பதும்
அவரால் உருவாக்கப்பட்டதுதான்.
எல்லாவற்றையும் எழுத்தில் சொல்லக் கூடியவரல்ல அவர். இங்கு சொல்ல்ப்பட்டிருப்பவை எல்லாம் நமக்கு
தூண்டுகோல்கள். அத்துடன்
மட்டுமல்லாமல் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு
உயிரினமும் அவரை தங்களுக்குள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி என்றால், அவர் அங்கிருக்கும் நிலையை விட மேலும் நீங்கள் அவரை
வர்ணிக்கலாம். அவர் இங்கிருக்கும் நிலையை
விட மேலும் பூஜித்து அறியலாம். எந்தவித
முடிவும் இல்லை. இது ஒரு நடந்துகொண்டே
இருக்கும் அனுபவம். எப்படி ஒரு கிராமவாசி, உலகத்தையே
பார்க்காமல், கிராமத்திலேயே வாழ்ந்து
கொண்டிருக்கிறாரோ,
அப்படியேதான்
நானும் பகவத் கீதையை என் வழியிலேயே
புரிந்து கொள்ள முயற்சித்தேன். எனக்குத் தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கொள்ள
முயற்சித்தேன். எத்தனையோ பண்டிதர்கள், உலகம் சுற்ரி வந்தவர்கள் இருக்கலாம். அவர்கள் யாவரும் ஒவ்வொரு
வரி வரியாகப் படித்துப் புரிந்து கொண்டவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு சொல்லாகப் படித்தவர்களாக இருப்பார்கள்.
. பகவத் கீதையைப் பற்றி ஏராளமான
ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் இந்தத் தொகுப்பில் ஏராளமான தவறுகளைக் கண்டுபிடிக்கலாம். இருந்தாலும், ஒரு கிராமவாசிக்கு, எவருக்கு பறவைகளின் இனிய கூக்குரல்கள் பிடிக்குமோ, அழகான
பட்டாம் பூச்சிக்கள் பிடிக்குமோ, ஆரோக்கியமான
உணவைச் சாப்பிடுகிறாரோ,
அவருக்கு
திவி ரேடியோவில் என்ன கொண்டு வருகிறது
என்பது தெரியாமல் இருக்.கலாம். கணினியின்
இயக்க மொழி பற்றி தெரியாமல் இருக்கலாம்.
ஒரு விமான பைலட்டின் தொழில்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம். ...
இவைபற்றி அவர் கவலைப்பட வேண்டுமா என்ன? நீங்கள்
கடைசியாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். அப்படிப் புரிந்து கொண்டு எப்படி வாழ்கிறீர்கள்
என்பதும், கடவுளாகிய அவர்
உங்களுக்கு ஆசீர்வதித்திருக்கிறார் என்பதுமே அர்த்தமாகும்..!!! "
Bhagavad Gita in Tamil - For Common Man
Saturday, September 24, 2016
அத்தியாயம் 18 - எதையும் துறப்பதும் கிடைக்கும் மோட்சம் - அது ஒரு யோகம்
'தியாகம் என்றால் என்ன? துறப்பது என்றால் என்ன? சன்னியாசம் என்றால் என்ன?
என்றெல்லாம் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரைக் கேட்டான். அதாவது ஒரு சன்னியாசியாக வாழ்வது என்றால் என்ன?
என்றெல்லாம் பகவான் கிருஷ்ணரைக் கேட்டான். எல்லா நடவடிக்கைகளையும் துறந்து விட்டு
(பொருட்களால் வரும் ஆசைகளை விட்டு விட்டு)
வாழ்வதே சன்னியாசத்திற்கு வழிகோலுகிறது.
விளையும் பயன்களை எல்லாம் தவிர்த்து விடுவதே துறவிக் கோலத்திற்கு வழி
கோலுகிறது. எந்த ஒரு சமயத்திலு, பூஜிப்பது, தியாகம், தருமம்
இவற்றைக் கைவிடலாகாது. மிகவும் தூய்மையான
ஆன்மாக்களைக் கூட மேலும் உயர்ந்த நிலைக்கு அவை இட்டுச் செல்கின்றன. இருந்தாலும் ஒரு ஈர்ப்புடன் அவை செய்யப்பட்டால்,
அதற்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
முடிவுகள் எதையும் எதிர்பார்க்காமலேயே எதுவும் செய்யப்பட்டாலே, அவை நற்பண்புகளைச் சாரும்.
விதிக்கப்பட்ட கடமைகள் யாவும்
தேர்ந்தெடுத்துச் செய்யப்படுகின்றன.
ஒரு ஈர்ப்புடன் அவை எல்லாம் செய்யப்பட்டால், அவை
ஆசையின் பால் செய்யப்பட்டதாகிறது.
கடமைகளைச் செய்யாமல் விட்டு விட்டால், அறிவற்ற
நிலைமையைக் கொண்டு வருகிறது. கடமையே
செய்யாமல் ஒருவரும் இருக்க முடியாது. ஆகவே
முடிவுகளை என்னிடம் விட்டு விடு. அதுவே
சிறந்ததாகும். உடல், கடமையைச் செய்பவர், புலன்கள், எடுத்துக்
கொள்ளப்பட்ட கடமைகள் மற்றும் பரமாத்மா எல்லோருமே இணைந்துதான் செய்யப்பட்ட செயல்
நடைபெறுகிறது. ஆகவே தானும் சேர்ந்து செயலில் ஈடுபட்டான் என்று எவரும் கருதினால்,
அவன் அறிவற்றவனாகிறான்.
நல்ல பண்புகளை உடையவனாக இருந்தால், செய்பவன்
பரமாத்மாவையே ஒவ்வொரு ஜீவனிடமும் பார்க்கிறான்.
செய்யப்பட வேண்டியது எந்தவித பற்றுதலும் இல்லாமல் செய்யப்படுகிறது. அன்போ அல்லது வெறுப்போ இல்லாமலும், செய்பவரின் சுயச் செருக்கு இல்லாமலேயே செய்யப்படுகிறது. மிகுந்த உற்சாகத்துடன் செய்யப்படுகிறது. வெற்றிக்கு முன்னால் எதுவும் தள்ளிபடி
செய்யவில்லை அல்லது தோல்விக்கு முன்னாலும் அப்படிச் செய்வதில்லை. வேட்கைகள் மிகுந்து பார்க்கும்பொழுது,
மனிதன் பிறரை வெவ்வேறு மனிதர்களாகப் பார்க்கிறான். எல்லா செயல்பாடுகளும் பெரும் முயற்சியால் அந்த
வேட்கைகளை திருப்திப் படுத்திக் கொள்ளவே செய்யப்படுகின்றன. காரியங்களைச் செய்பவருக்கு எப்பொழுதும்
முடிவுகளைப் பற்றிய கவலைகளே மிகுந்து நிற்கும்.
பொறாமையும் பேராசையுமே மிகுந்து நிற்கும். அறிவில்லாமல் போகும்பொழுது, புத்தி எதிலும் இருளையே காண்கிறது.
செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் ஒரு மயகத்திலேயும், உதாசீனத்துடனுமே செய்யப்படுகிறது.
செய்பவர் ஏமாற்றுகிறார், சோம்பேறியாகவும் பொருட்களை
விரும்புபவராகவும் இருக்கிறார்.
நற்பண்புகளுடன் செய்யும்பொழுது, ஒப்புதல் சரியான செயல்பாடுகளுக்கு வழிகோலுகிறது. அந்த தீர்மானமான உள்ளம், முறிக்க
முடியாதது மற்றும் தெளிந்த நம்பிக்கையுடன் கூடியது. கடுமையான சந்தோஷமாக ஆரம்பிப்பது தூய்மையானதாக
முடிகிறது. வேட்கை நிரம்பிய நேரத்தில்
புத்தியும் தீர்மானமும் எதையும் சரியானது அல்லது தவறானது என்று பிரித்து அறிய
முடியவில்லை. தீர்மானம் பெறும்
முடிவுகளைப் பொறுத்தவையாக ஆகின்றன.
மற்றும் கிடைக்கப் போகும் பொருட்களைப் பொறுத்தும், மத
சம்பந்தமானவற்றைப் பற்றியும், புலன்களின் திருப்தியைப்
பொறுத்தும் அமைந்து விடுகின்றன.
தூயமையுடன்தான் ஆரம்பிக்கின்றன ஆனால் விஷமாக முடிந்து விடுகின்றன. அறிவில்லாமல் போகும்பொழுது தவறானவை எல்லாம்,
நல்லவையாக எடுத்துக் கொள்ளப்படும்.
தீர்மானம் எல்லாம் மயக்கத்தின் அடிப்படையில் இருக்கும். கனவு படர்ந்தவையாகவும்
புத்திசாலித்தனமில்லாததாகவும் மகிழ்ச்சி என்பது ஆரம்பத்திலிருந்து ஒரு பெரும்
தவறான நம்பிக்கையாகவும் போய்விடும். இந்த
மூன்று குணங்களுமே எவரின் மீதும் தாக்கம் கொள்கின்றன. அறிவால் தூயமைப்படுத்தப்பட்டும், சுய அடக்கத்தின் பேரிலும் எவர் ஒருவர் கடமைகளைச் செய்கிறாரோ, அல்லது உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்கிறாரோ, போலியான
செருக்கு உணர்வை தவிர்த்து செயல்படுகிறாரோ, அமைதியில்
வாழ்ந்து வருகிறாரோ அவரே என்னைப் புரிந்து கொள்ள முடியும். என் உண்மையான சொரூபத்தில் பரமாத்மாவாகப்
புரிந்து கொள்ள முடியும். அவரகளே முழுப்
பிரக்ஞையுடன் எனக்கு சேவை செய்தும் ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். எல்லாவித செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும்,
என் பக்தர்கள் என்னை அடைந்து விடுகிறார்கள். என்னைப் பற்றியே எப்பொழுதும் முழு பிரக்ஞையுடன்
இருப்பவர், என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பவர்,
நான் அவருக்கு சென்று எல்லா உதவியையும் செய்வேன். அவர் இந்த வாழ்க்கையைக் கடக்க உதவி
செய்வேன். அவரை என்றும் எதையும் இழக்க விட
மாட்டேன். பரமாத்மா என்ற முறையில்,
நான் ஒவ்வொருவரிடமும் இருக்கிறேன். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்னிடம்
சரணாகதி அடைந்து விட வேண்டியது ஒன்றுதான்.
நான் அவர்கள் மீது கருணை செலுத்தி கவனித்துக் கொள்வேன். மிகவும் இரகசியமான புத்திசாலித்தனம்
என்னவென்றால், என்னைப் பற்றியே சிந்திக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். செய்யும் செயல்பாடுகளின் முடிவுகள்
எல்லாவற்றையும் என்னிடமே விட்டு விடல் வேண்டும்.
அப்படிச் செய்வதால் நீங்கள் யாவரும் என்னிடம் தவறாமல் வந்து விடுவீர்கள். உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்கிறேன். இதை அறிந்தவர்கள் எல்லோருமே பிறருக்கு எல்லாம்
எடுத்துச் சொல்ல வேண்டும். இதை யார் யார்
கேட்கிறார்களோ, நம்பிக்கையுடன் கேட்டு அனுசரிக்கிறார்களோ
அவர்களும் எல்லோரும் என்னையே வந்து
அடைவார்கள். இதைக் கேட்டவுடன் அர்ஜுனன்
பரமாத்மாவிடம் சொன்னது - தான் தன் கடமையை இப்பொழுது உண்ர்ந்ததாகவும் அதைச் செய்ய
உடனடியாக தயாராகி விட்டதாகவும் தெரிவித்தான்.
சஞ்சயன் எல்லாவற்றையும்
திருதிராஷ்ட்ரருக்கு எடுத்துச் சொன்னான்.
இந்த வார்த்தைகளே தனக்கு ஒரு நிலையான வகையில் நிற்பதற்கு உதவி செய்வதாகவும்
சொல்லி அவற்றை தான் என்றைக்கும் மனத்தில் வைத்திருக்கப் போவதாகச் சொன்னான். அதற்குப் பிறகு அர்ஜுனன் போர்க்கள்த்திற்குச்
சென்றான். பாண்டவர்கள் சண்டையில் அமோக
வெற்றி அடைந்தார்கள்.
"நமது வாழ்க்கை: ஒரு மனிதன்
எந்தவித பலன்களும் இல்லாமல் ஒரு செயல்பாட்டை ஏன் செய்ய வேண்டும் என்று நான்
ஆச்சரியப்பட்டதுண்டு. அப்படிப் பேசுவது
ஏனோ நன்மை பயக்கலாம், ஆனால் அது வாழ்க்கையில் நடப்பது அல்ல. மற்றும், வாழ்க்கை என்பது
தனிப்பட்ட உயர்வையும், பணம் சம்பாதிப்பதும் மற்றும்
குடும்பத்தைக் காப்பாற்றுவதும்தானே!
அதுதானே வாழ்க்கையின் முழு அர்த்தமாகும். அவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு
நான் எப்படி வாழ முடியும். கீதை என்பது
பொது ஜனங்களுக்காக ஏற்பட்டது அல்ல. . . இப்படித்தான் என் எண்ணங்கள் இருந்தன. உங்களுக்கும் அப்படித்தான் தோன்றி
இருக்கலாம். . ஏதோ ஒரு நிலையில், நம்
இருவருக்குமே சரியான பதில்கள் கிடைத்து விட்டன...
செயல்பாடுகளில் ஈடுபடுவதே வாழ்க்கையின் ஆதாரம், பொதுஜனங்கள் என்ற அளவில் நம்மால்
எதையும் செய்யாமல் இருக்க முடியாது. ஆனால்
முடிவுகளை எதிர்பார்ப்பதை வேண்டுமானால் செய்யாமல் விட்டு விடலாம். ஏனென்றால் முடிவுகளே நம்மை எதிர்பார்க்கத்
தூண்டுகின்றன. எதிர்பார்ப்பு ஆசைகளைத்
தூண்டுகிறது. ஆசைகள் அதற்குப் பிறகு கஷ்ட
நஷ்டங்களுக்கும் மாயைகளுக்கும் காரணமாகிறது.
செயல்பாடுகளில் ஈடுபடுவதால், நாம் எல்லோரும் கொஞ்சம்
காத்திருக்கலாம் என்று நம்மில் ஒரு சிலர் நினைக்கலாம். ஏனென்றால் முடிவுகளைக் கடவுளே கொடுப்பார்
என்பதால் அப்படிச் செய்யலாம். .. இன்னொரு
எதிர்பார்ப்பும் இருக்கிறது. இது கடவுளைப் பற்றியது. ..
உங்கள் க்டமையைச் செய்யுங்கள் முடிவுகளை கடவுளிடம் விட்டு விடுங்கள். .. இது
நமக்கு அதைவிட சற்று எளிதானது. நமது
வளர்ச்சி பிறருக்கு முக்கியமாக இருக்கும்பொழுது, மற்றும்
அதில் நாம் பெருமைப் படாமல் இருக்கும்பொழுது, அந்த
வளர்ச்சியுடன் நம்மை பொருத்திப் பார்க்கும்பொழுது, அந்த
வளர்ச்சி எந்தவித துன்பத்தையும் கொண்டு வரப்போவதில்லை. தவிரவும், இந்த ஆற்றலோடு
இருக்கும் நமக்கு நம் கடமையில் ஒரு அங்கமே
அது. அதைச் செய்வது அல்லது அதை தலைமைப்
பண்போடு நடத்திச் செல்லும்பொழுது, நாம் நம்மையே அதில்
ஆழ்ந்து விடுகிறோம். அது மட்டுமல்ல. ஒரு
பொதுஜன அங்கத்தினர் என்ற முறையில் நாம் எல்லோருமே புலன்களின் தேவைகளுக்காகவே
எதையும் செய்கிறோம். இருந்தாலும்
தேவைப்படும்பொழுது எல்லாம் நம்மை நாமே எதிலிருந்தும் தள்ளி வைத்துக் கொண்டு
பார்க்க தெரிய வேண்டும். அந்தக்
காரணத்திற்கு நடப்பனவற்றை எல்லாம் கடவுளுக்கே அர்ப்பணித்து விட வேண்டும். அந்தப் பரமாத்மாவிடமே எதையும் விட்டு விட்டு
நம்மோடு எதையும் பொருத்திக் கொள்ளக் கூடாது.
மீதமுள்ள எல்லாவற்றையும் நாம் பொறுத்துக் கொள்ளலாம். இன்றைக்கு எந்த ஒரு தெளிவுடன் வாழ்கிறார்களோ
அதே தெளிவுடன் நாளைக்கும் வாழப் போகிறார்கள் என்று சொல்ல முடியாது. நாம் குழந்தைகளுடன், மனைவியுடன்,
பெற்றோர்களுடன், சகோதரர்களுடன், நண்பர்களுடன் மற்றும் அந்தவித உபயோகமான செல்வங்களுடன் இருக்கலாம். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
- அவை எல்லாம் ஒரு நாளைக்கு நம்மை விட்டு நீங்கி விடும். எல்லாமே இந்த வாழ்க்கையை விட்டு நீங்கி
விடும். .. ஆனால் நாம் மாத்திரம் கடவுளோடு இல்லாமல்
தனித்து விடப் போவதில்லை. . அந்தப்
பரமாதமா உங்கள் மனத்திலேயே
குடிகொண்டிருக்கிறார். நீங்கள் அவருக்குள் இருக்கிறீர்கள். .. இந்த
சக்தியோடு உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள், உங்கள் கடமைகளைச்
செய்து வாருங்கள்... கவலைகளை விட்டு
விடுங்கள் மற்றும் உங்கள் பெருமிதத்திலிருந்து, சுயச்
செருக்கிலிருந்து மற்றும் எதிர்பார்ப்புக்களிலிருந்து விலக்கிக்
கொள்ளுங்கள்."
அத்தியாயம் 17 - மூன்று வழி நம்பிக்கை கொண்ட யோகம்
சத்வ, ரஜஸ் மற்றும்
தமோ குணங்கள் மூன்றும் உடையவர்களிடத்தில் எப்படி நம்பிக்கை குடிகொள்கிறது என்று
அர்ஜுனன் பகவானிடம் கேட்டான். இந்த
மூன்று குணங்கள் கொண்ட நபர்களின் அவரவர்களுடைய வாழும் வாழ்க்கையைப் பொறுத்தே
இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் அவருடைய
நம்பிக்கையைப் பொறுத்தே அவர் உருவாக்கப்படுகிறார். முழுக்க முழுக்க ஒரு கடுமையான விரதத்தின்
சிரத்தையோடு இருப்பவர்கள் தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள். சரியாக உண்பதில்லை. தங்கள் உடலை வருத்திக் கொள்கிறார்கள். அவர்கள் எல்லோருமே நான் அவர்களுக்குள் இருப்பதை
அறிய முடியாமல் தவிக்கும் முட்டாள்கள்.
யாரெல்லாம் பழச் சாறுகள் குடித்துக் கொண்டும்,
இலை தழைகள் கூடிய உணவை உண்கிறார்களோ
அவர்களெல்லோரும் நல்ல பண்புகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரமான உணவு பதார்த்தங்களை உண்பவர்கள்,
பெரும் வேட்கைகளை உடைத்தவர்களாக
இருப்பார்கள். எவரெவர் அழுகிப்போன பதார்த்தங்களையும் ருசியற்ற
உணவையும் உண்கிறார்களோ, தூய்மையற்ற பதார்த்தங்களை உண்கிறார்களோ அவர்கள் எல்லோரும்
அறிவிலிகளாக இருப்பார்கள். யார் நற்பண்பு
உடையவராக இருக்கிறாரோ மற்றும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறாரோ மற்றும் பெரும் வேட்கைகளை உடையவர்கள்
எல்லோருமே பூஜை செய்வார்கள் ஆனால்
கொஞ்சம் கொஞ்சம் எதிர்பார்ப்புக்களோடும் சில இலக்குகளோடும் செய்வார்கள். உடலுக்கு வேண்டிய விரதங்களின் நன்மைகள் யாவும்
கடவுளைப் பிரார்த்திப்பதால் கிடைக்கிறது.
தூய்மையான வாழ்க்கை, நேர்மறை குணங்கள் - இவற்றால் அந்த நன்மைகள் யாவும்
கிடைக்கின்றன. மற்றும் ஆரோக்கியத்தைக்
கெடாமல் பார்த்துக் கொள்வதால் கிடைக்கிறது.
நல்ல வாய்மொழியினால் வரும் விரத பூர்வ நன்மைகள் யாவும்,
ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்டு வரும்.
சொற்களாலும் உண்மையையே பேசுவதாலும் கிடைக்கின்றன.
அதே போல் மனம் தூயமையடைவதற்கு மனக் கட்டுப்பாட்டினால் கிடைக்கிறது. மன அமைதியாலும், எண்ணங்களில் தூய்மை இவற்றால்
கிடைக்கிறது. இவற்றிற்கு அப்பால் ஒரு
பரிசை வேண்டி விரதங்கள் இருப்பது என்பது அல்லது ஒரு முடிவை எதிர்பார்த்துச்
செய்வது என்பது எல்லாம், அந்த வேட்கையினால் வருவது.
நிலையில்லாதது. வெறும்
சிற்றாவல்களைத் தணிக்கக் கூடியது. எந்த
ஒரு விரதத்தை முட்டாள்தனத்துடன் ஒருவர் செய்து வருகிறார்களோ அதை உதாசீனம் செய்ய
வேண்டும். ஒரு தர்மத்தைச் செய்யும்பொழுது
எந்தவித முடிவையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும். மற்றும் அது போய்ச் சேர வேண்டிய மனிதர்கள்
உயர்வானவர்களாக இருத்தல் வேண்டும். அப்படி
என்றால் அது நற்பண்பாகும். கீழான
ஒருவருக்கு அது செய்யப்பட்டால் அது அறிவில்லாமை.
ஒரு வேட்கையை தணிக்க அது செய்யப்பட்டால் அது மரியாதைக்காகச் செய்வது. ஆனால் எவர் ஒருவர் தர்மம் செய்து கொண்டு,
விரதத்தை அனுஷிடித்துக் கொண்டு
பிறவற்றையும் செய்து கொண்டிருக்கிறாரோ ஆனால் பரமாத்மாவின் மீது நம்பிக்கை வைத்துச்
செய்து கொண்டிருக்கிறாரோ அவர் வேறு எந்தவித இலக்கையும் கருதாது செய்கிறாரோ அவரே
மூன்று வழிகளையும் அனுசரித்து முன்னேறுவார்.
"நமது வாழ்க்கை: நம் அன்றாட வாழ்க்கையில்,
டி.வி. பார்க்கிறோம். செய்தித்தாள் படிக்கிறோம். பயணிக்கிறோம்.
எத்தனையோ விளம்பர போர்டுகளைக் காண்கிறோம்.
ஆனால் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பதில்லை. ஒரு இரு சக்கர வண்டியோ அல்லது நான்கு சக்கர
வண்டியோ வாங்க நின்2ஐத்தால், எத்தனையோ விளம்பரங்களை அதே செய்தித்தாளில் பார்க்க
முடிகிறது. அவற்றையே டீ.வி. சேனல்களில்
பார்க்க முடிகிறது. ஷாப்பிங் இடங்களிலும்
காண முடிகிறது. அவை எல்லாம் உங்கள்
எதிர்பார்ப்புக்களுக்காகவா வெளியிடப்படுகின்றன? இல்லை... அவை அங்குதான் எப்பொழுதும் வருகின்றன. நாம் அவற்றை கண்கொண்டு பார்ப்பதில்லை. தேட ஆரம்பிக்கும்பொழுது நம் கண்களில் அவை
படுகின்றன. (இன்றைய கால கட்டங்களில் பிரசுரிப்பவர்கள்
யாவ் அரும், 'சூடான'
தலைப்புக்களையே நாடிப்
பிரசுரிக்கிறார்கள். அதே போலத்தான்
நம்பிக்கையையும் நாம் பார்க்கிறோம். ஆகவே
நம்பிக்கையுடன் தேடுங்கள். அது கிடைத்து
விடும் உடனே. நமக்கு வேண்டுவதே கிடைத்து
நாமே கிடைத்த பொருளாகி விடுவோம். வேண்டியது நம்பிக்கை... கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பதை
நம்புங்கள். கடவுளை நாம் ஏன்
கண்டுபிடித்து அறிய முற்பட வேண்டும்?
... பரமாத்மாவை அறியவோ அவரை அடையவோ ஒரே வழிதான்
இருக்கிறது. நம்பிக்கை என்பதுதான்
அது. .
காற்றை உள்ளே வாங்கி விட்டு பின் வெளியிடுகிறோம். இந்த முறையை என்றைக்காவது நிறுத்த முடியுமா? இல்லை. நிறுத்தினால் இறந்து
விடுவோம். .. காற்று என்ப்து என்ன? அது பரமாதமாவின் ஒரு அங்கம் இல்லையா?
எல்லாமே
அவரிடமிருந்து வந்தவைதானே. அவர் பூஜை
அறைக்குள் மாத்திரம் அல்ல. அல்லது ஒரே
இடத்தில் மட்டும் அல்ல. ... அல்லது அலாவுதீன் விளக்கிலிருந்து வந்த பூதம்
என்று நினைக்கிறோமா?
... நான் அதைத்
தேய்த்தபொழுதெல்லாம் வருவாரா?
.. அது போல எத்தனையோ பூஜை புனஸ்காரங்கள் இருக்கத்தான்
செய்கின்றன. .. அவற்றில் சில விஞ்ஞான பூர்வமான காரணங்கள்
கொண்டவை. அவற்றுடன் சுத்தம் சேர்ந்து
அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கு அப்பால்
ஒன்றுமில்லை. வீட்டில் யாராவது இறந்து
விட்டால்ஓ அல்லது ஒரு குழந்தை பிறந்தாலோ அல்லது பெண்கள் யாராவது விட்டிற்கு
விலக்கமாகிப் போய் விட்டாலோ, இப்படி ஏதோ ஒன்று நடந்தால், அந்த சம்பவங்களை எல்லாம் சற்றே
விலக்கப்பட வேண்டிய நிலைகளில் வைக்கிறோம்.
.. அவைகளை புண்ணிய நிலைகளிலிருந்து நக்ர்த்தி வைக்கிறோம். ..
கடவுள் மயானத்தில் இருந்தால் (உதாரணத்திற்கு சிவபெருமான்) கடவுள் ஒரு பெண்ணின் உடம்பிலும் இருக்கத்தானே
செய்கிறார். அவளுடைய ஆன்மாவிலும் அவர்
இருக்கிறார். கடவுள்தானே அந்த அழகான
பிறப்பான குழந்தையைப் பெற்றுக் கொடுத்தார்.
இதற்காக எல்லாம் கடவுளைத் தனியாக வைத்துப் பார்ப்பது தவறு. உங்கள் வீட்டிற்கு ஒரு வருகையாளராக வந்து
சாப்பாடு/பிரஸாதம் சாப்பிட வந்துவிட்டுச்
செல்பவரா? ... அவரோ
பரமாத்மாவானவர். அவரில்லாமல் இந்த
உலகத்தில் எதுவும் அசையாது. ஒரு கணம் கூட
உயிரோடு இயங்கப் போவதில்லை. அவரே
உயிருக்குள் இருக்கும் இரத்தமானவர். அவரே காற்றாகவும்
இருக்கிறார். அவரே நீராகவும்,
அவரே உயிராகவும்,
அவரே பொருளாகவும் மற்றும் எல்லாமாகவும்
இருக்கிறார்... சுத்தத்தை எடுத்துக்
கொள்ளுங்கள். கடவுள் ஒரு கணத்திற்கு
எதிலும் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
.. ஏதோ ஒரு சடங்கைச் செய்து
முடித்து விட்டு கடவுளுக்கே
எல்லாவற்றையும் அர்ப்பணிக்கிறோம் அதற்குப்
பிறகு கோபமுள்ள ஒரு இளைஞனாகப் பார்க்கிறோம் அல்லது ஒரு கோபமிக்க ஒரு பறவையாகவோ
அல்லது கொல்பவராகவோ அல்லது கடன் கொடுப்பவராகவோ அல்லது தியாகம் செய்பவராகவோ அல்லது
ஒரு தலைவனாகவோ அல்லது எந்த ஒரு உருவத்திலாவது உருவகப்படுத்திக் கொண்டால்,
அதே உருவத்தில்தான் அவர்
வருவார்.... எவருமே கொடுக்கப்பட்ட
நியமங்களை எல்லாம் பரிபூரணமாகத் தெரிந்து கொண்டு செயலாற்றி விடப் போவதில்லை. ஆகவே மனிதர்களின் ஆற்றலைப் பொறுத்துத்தான் பூஜைகள்
புனஸ்காரங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. காலப் போக்கில் அவை எல்லாம்,
விதிகளாக மாறி விட்டன. .
இருந்தாலும் நீங்கள் அவரை ஒளியாக பாவித்தால், அவர் உங்களுக்கு ஒளியாகத்தான்
தெரிவார். அவரை ஒரு துப்பாக்கி என்று
கற்பனை செய்து கொண்டால், அவர் ஒரு துப்பாக்கியாகத்தான் தெரிவார். ...
அவருக்கு எது ஒன்றின் மீது பற்றுஇ கிடையாது மற்றும் அவர் எவருக்கும்
சமமானவரே. ... நமது நம்பிக்கைதான் நம்மை நமக்கு உரிய
தகுதிக்கு ஏற்றது போன்ற நிலைக்கு எடுத்துச் செல்கிறது.
Tuesday, September 20, 2016
அத்தியாயம் 16: புனிதமும், இராட்சஸ குணமும் நிறைந்த யோகம்.
'இயற்கை
இருவகைப்படும்" என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்னார். ஒன்று புனிதமானது. மற்றொரு இராட்சஸத் தன்மையைக் கொண்டது. தூய்மை, பயமற்ற தன்மை,
நிலைத்து ஒரே நிலையில் நிற்றல், ஆத்மாவைப்
பற்றித் தெரிந்திருத்தல், ஆடம்பரமே இல்லாத எளிமையான தன்மை,
சத்தியம், அஹிம்சை. கோபமே வராத குணம், பக்குவமும்
பணிவும், மன்னித்து அருளும் தன்மை, சக்தி,
செருக்கு இல்லாமை, போன்றவையே புனித
குணங்களாகும். கோபம், அறியாமை, தன்னையே புகழ்ந்து கொள்ளுதல், தூயமையில்லாமை, சத்யத்தோடு ஒழுகாமல் இருத்தல்,
ந்ல்ல குணங்களோடு இல்லாமல் இருத்தல், அநதந்த
கணங்களில் தன் சுய சந்தோஷத்திற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருத்தல்,
போலியான நம்பிக்கை, புலநின்பங்களில் ஒரு தீவிர
பற்றுதல், வெறி மிகுந்த கோபம், சோகப்படுதல்,
அநீதியான வழியில் செல்வம் சேர்த்தல், அதை வைத்து
புலனின்பம் நாடுதல், எதிர்காலத்திற்காக மேலும் மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டே போதல் (சில
விடுபட்டிருக்கின்றன)........ இவை எல்லாம்
இராட்சஸ குணங்களைச் சாரும். அத்துடன்
இராட்சஸ குணம், சுயச் செருக்கைக் கொண்டு வருகிறது, பேராசையும், அனாவசிய பெருமிதத்தையும், பொய்யான தியாகங்களையும், போலியான நம்பிக்கைகளை
வைத்திருத்தல், மற்றும் பழக்கங்களுக்கு அடிமையாதல், புலன்களின் இன்பத்தை நாடுதல்,
தன்னையே மரியாதை செய்து கொள்ளுதல், வெறியுடன்
ஒன்றையே பற்றி நிற்றல், அதிகார துஷ்பிரயோகம் என்பன வெல்லம
இராட்சஸ குணங்களைச் சேர்ந்தவை. இந்த
குணங்களோடு இருப்பவர்கள் கடவுளையும் நேசிப்பதில்லை. தங்கள் உடல்கள் மூலம் என்னையும் பார்ப்பதில்லை
அல்லது பிறர் உடல்களின் மூலமும் என்னைப் பார்ப்பதில்லை. இவ்வகையில் தீங்கே அல்ல்து தீமைகளையே செய்து
கொண்டிருப்பவர்கள் எல்லாம் இராட்சஸர்களுக்க்கு நடுவில்தான் பிறக்கிறார்கள். அவர்களுடைய செயல்களினால், இந்த இராட்சஸ குணமுடையவர்களால் என்னை அடையவே முடிவதில்லை. பேராசை, கோபம் மற்றும்
அதிகமான பாலியல் ஆசைகள் எல்லாம் தவிர்க்கப் பட வேண்டியவை. அப்பொழுதுதான் அந்த இராட்சஸ குணங்களிலிருந்து
விடுபட முடியும். இந்த இருள்நிறைந்த
நிலையிலிருந்து வெளியே வருபவர்கள் தமக்கும் சரி, பிறருக்கும்
சரி, நல்லவற்றையே செய்து கொள்ள முடியும். இவற்றை எல்லாம்
தவிர்க்கக்கூடியவர்கள் இருளில் எதையும் செய்ய முடியாது. எப்பொழுதும் எதிலும் ஒரு முழுமையை அடைய
முடியாது. சந்தோஷத்தையும் அடைய முடியாது. அத்துடன் பரம உயரத்தில் இருக்கும் ஆன்மிக
இலக்கையும் அடைய முடியாது.
" நமது வாழ்க்கை: நாம் சற்று எண்ணிப்பார்ப்போம். மூன்றே மூன்று செயல்பாடுகளில் நம்மைப் பற்றிப்
பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் சற்றே எண்ணிப் பார்ப்போம் ... வேண்டுமானால் 1 லிருந்து 60 வரை
எண்ணுவோம். .. அவற்றில் ஒன்றைப் பற்றிக்
கூட நாம் பெருமை கொண்டு வாழ்ந்தொஒமானால், நாம் இன்னமும் கீதையைப்
புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.
நம்மைப் பற்றிப் பெருமைப் பட்டுக் கொள்ள நமக்கு ஒன்றும் இல்லை. எல்லாமே அந்த பரமாதமாவிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. அல்லது நாம் எல்லோரும் அவ்வளவு நல்லவர்கள்
அல்ல என்று எண்ணவே தேவையில்லை. புனித
குணங்களின் சேர்ப்போ அல்லது இராட்சஸ குணங்களோ தனிப்பட்ட முறையில் ஒரே மனிதரிடம்
குவிந்து கிடப்பது அல்ல. அவை ஒரு கலவையாக
இருக்கலாம். ஒருவர் சமூகத்தில் வகிக்கும் நிலை, பணம்,
அதிகாரம், போன்றவை எல்லாம் வெகு சுலபமாக,
பேராசை, துஷ்பிரயோகம், மற்றும்
வீண் பெருமை இவற்றைத் தானே கொண்டு வந்திருக்கின்றன. இந்த குணங்களுக்கு மனிதர்கள் இரையாகி
விடுகிறார்கள். ஒரு வாயிற் காப்பாளர்
தன்னுடைய சிறிய அதிகார நிலையிலேயே பெரும் கர்வம் மற்றும் அகந்தையைக்
காட்டலாம். ஒரு அதிகாரிக்கு இது
வரும். ஒரு அரசியல்வாதி அப்படி நடந்து
கொள்வார். நமக்குக் கொடுக்கப்பட்ட
அதிகாரங்களை நாம் நம்மை அறியாமலேயே துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கலாம். நமக்கு திருப்தியைக் கொண்டு வருவதற்காக
அப்படிச் செய்து கொண்டிருக்கலாம். அவற்றை எல்லாம் முழுமையாக நம்மிடமிருந்து
ஒதுக்குதல் வேண்டும். நம் ஆன்மிகத்
தொடர்பிலிருந்து அவற்றை அகற்றுதல் வேண்டும்.
அதை ஏன் செய்ய வேண்டும்? ஒரு கோவிலோ அல்லது மசூதியோ தொழுவதற்கு ஏற்ற இடம். அமைதியாக தொழுதல் நடக்க வேண்டிய இடம் அது. எங்கெல்லாம் அந்த இடங்கள், வருவாயைத் தேடும் இடங்களாகி விட்டனவோ ஜனங்கள் அமைதி உணர்வை இழந்து,
ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு, பூஜை
புனஸ்காரங்கள் செய்ய முற்படுகின்றனர்.
(கோவிலுக்குச் செல்வது ஒரு கடமையாகி விட்டது. அங்கு நிறைந்திருக்கும் பரமாத்மாவைப் பற்றி
நினைப்பதை விட ஒரு கடமையாகக் கருதி கோவிலுக்குச் செல்கிறோம்.) இவை எல்லாம் புனித காரியங்களா அல்லது இராட்சஸ
செயல்களின் மறு உருவங்கலா? நம் எல்லோருக்குமே இதற்கு பதில் தெரியும். ....
நாம் செய்து கொண்டிருப்பவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்தால், நம்மிடம் இராட்சஸ குணங்களும் குடிகொண்டிருப்பதை அறிகிறோம். நிரந்தரமாகவும் முழுப் பிரக்ஞையுடனும் அவற்றை
எல்லாம் நாம் வெட்டி அகற்ற வேண்டும்.
... எவரெவருடன் எல்லாம் நம்
வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்? என்பதை சற்றே எண்ணிப்
பார்ப்போம். ... மனைவியா, தாயாரா , நண்பர்களா அல்லது குழந்தைகளா? ....!!!! இதற்கு பதில் ஒன்று
தான் அதாவது இவர்களில் ஒருவரிடமும் கூட
நாம் இணைந்து இருந்ததில்லை. ஆனால்,
நம்முடனேயேதான் என்பதுதான் சரியான பதில். அதாவது மேற்கண்ட இராட்சஸ குணங்கள் யாவும்
நம்மிடையே இருந்தால், நமக்கு நாமேதான் முதல் எதிரி என்று
புலனாகிறது.
அத்தியாயம் 15 - பரமாத்ம சொரூபத்தின் யோகம்
வேதங்கள் யாவும் ஆலமரத்தைப் பற்றிச்
சொல்கின்றன என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னார். அது தலை கீழாக வளர்கிறது. வேர்கள் வானத்தை நோக்கி வளர்கின்றன. கிளைகள் பூமியை நோக்கி, நீள்கின்றன. வேர்களின் மேல் பாகமே வேதங்கள் ஆகும். கிளைகளில் அந்த மூன்று குணங்களைப் பார்க்கலாம். கீழே செல்லும் வேர்கள் மனித சமூகத்தை
அடைகின்றன. அதன் ஆரம்பத்தையும் சரி, முடிவையும் சரி, மக்கள் அறிவதே
இல்லை. ஆனால் இந்த மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்பதை அறியவே வேண்டும். அதற்காக உபயோகிக்கும் ஆயுதம், 'விருப்பு
வெறுப்பு அற்ற தன்மை' ஆகும்.
அதைக் கொண்டே கடவுளை அடைய முடியும்.
பகவான் கிருஷ்ணர் மேலும் சொன்னது - " இந்த உலகத்தில் வாழும்
உயிரினங்கள் எல்லாமே என் அங்கங்களே.
புலன்களோடும், புலனறிவோடும் குணங்களோடும் அவர்கள் ஒரு
தத்துவத்தின் பெயரில் வாழ்கிறார்கள். இந்த
புதிய உடலுடன், தனிப்பட்ட ஒருவருக்கு வகை வகையான காதுகள், கண், நாக்கு, மூக்கு மற்றும்
புலன்கள் என்று அடைகிறார். புதிய
புலன்களின் அறிவைக் கொண்டு, உடல் மீண்டும் மீண்டும் செயல்களில்
ஈடுபடுகிறது. எவரும் தன்னுடைய
வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில்லை.
தன்னுடைய குணங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதில்லை. அத்துடன் தன் ஆன்மாவைப் பற்றியும் அறிந்து
கொள்வதில்லை அது எப்படி புதிய உடலுக்குள் புகுந்து கொள்ளும் என்பதையும் அறிந்து
கொள்வதில்லை. இருந்தாலும், தன் ஆத்மாவைப்
பற்றிப் புரிந்து கொண்டவன் இதை தெளிவாக உணரலாம்.
சூரியனின் ஒளியோ, நிலவொளியோ அல்லது நெருப்பின் ஜுவாலையோ
என் மீதுதான் விழுகின்றன. நான் ஒவ்வொரு
கிரகத்திற்குள்ளும் பிரவேசிக்கிறேன்.
அவற்றை எல்லாம் முறையான வட்டங்களில் சுற்ற வைக்கிறேன். நானே உணவை ஜீரணிக்கும் நெருப்பாவேன். வாழ்க்கையின் காற்றே நான்தான். நானே தாவரங்களை அவற்றிற்குக் கிடைக்கும் உணவுப்
பொருட்களைக் கொண்டு வலுவாக வளர வைக்கிறேன்.
நான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் குடிகொண்டிருக்கிறேன். என்னிடமிருந்துதான் நினைவுகளோ, மறதியோ அல்லது
எதுவுமே வருகிறது. நான் எல்லா வேதங்களின்
மூலமும் அறியப்படுகிறேன். நானே எல்லா
வேதங்களையும் அறிந்தவனாகிறேன். அழியக்
கூடிய பொருட்களைக் கொண்ட இந்த உலகமோ அல்லது அழியாத ஆன்மிக உலகமோ எல்லாமே
என்னிடத்திலிருந்துதான் வருகின்றன. நானே
பரப்பிரும்மம் ஆவேன். நானே பரமாத்மா
எனப்படுபவன். நானே எல்லாவற்றிற்கும்
அப்பாற்பட்டவன். இதை அறிந்தவனும் என்னுள்
வசி9ப்பவனுக்குமே இனி பிறப்பு என்பது கிடையாது.
"நமது வாழ்க்கை: நான் இதைப்
படிக்கும்பொழுது, ஒரு புதிய உடல், புதிய
காதுகளுடனும்,கண், நாக்கு, மேலும் புதிய
ஆன்மிகக் கொள்கைகள் - முன்ஜன்ம வாழ்க்கையைப் பொறுத்து அமைந்தவை - பிறக்கக்
காண்கிறேன். இதில் இருக்கும் பேருண்மை
என்னவென்றால், அவை இரண்டிற்கும் சம்பந்தமே இல்லை. 500+ கோடி ஜனங்கள்
ஒவ்வொருவருடைய கை ரேகைகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இதற்கு முந்தைய 400 கோடி ஜனங்களுடைய கை
ரேகைகளும் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன.
இதேதான் உண்மை - அதற்கு முந்தைய சந்ததிகளுக்கும் இதுவே உண்மை. இது ஒரு பேராச்சரியமான தனித்தன்மையான அடையாளமாக
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கிறது.
இதுவே கண் விழிகளுக்கும் பொருந்தும்.
அவை ஏன் ஒன்றாகவே இருக்கக் கூடாது.
குறைந்த பட்சம் உதாரணத்திற்கு சிலர் என்று கைக்கு வந்தவாறு
தேர்ந்தெடுத்துப் பார்க்கும்பொழுது! அவை
ஏன் ஒன்றாக இருப்பதில்லை? இப்படி தனிப்பட்ட வடிவமைப்பு
எப்படி சாத்தியமாக ஆயிற்று? வெறும் கண்களுடன் அவை எல்லாமே
பார்ப்பதற்கு ஒன்றாகவே தோன்றுகின்றன. 1.5
அங்குலத்திற்குள் - கட்டைவிரல் அகலம் - காணப்படுகின்றன. அதே போல் இந்த உலகத்தில் 7 நபர்கள் ஒன்றாக
இருக்கிறார்கள் என்றும் சொல்கிறோம். இருந்தாலும் இதுவரை நாம் அப்படிப்
பார்த்ததில்லை. பிறக்கும் இரட்டைக்
குழந்தைகளிடம் கூட வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இதை எல்லம் உருவாக்கியது யார்? அல்லது
வடிவமைத்தது யார்? 'கிளோநிங்'கைப் பற்றிக்
கவலைப் படாதீர்கள். அதுவும் ஒரே நபரின் செல்களிலிருந்தே
உருவாக்கப்படுகிறது.... அது க்ஸீராக்ஸைப் போன்ற வழிமுறை. அதே போலத்தான் டார்வினின் பரிணாமக் கொள்கையைப்
பற்றியும் படிக்கிறோம். நான் தனிப்பட்ட
வகையில் அதை இரசித்துப் படிக்கிறேன்.
மற்றும் அதைப் பற்றி சிந்திக்கிறேன்.
அதில் நான் கண்ட மிக இரசனையான உண்மை என்னவென்றால், அண்டைய
உயிரினங்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையை அது எடுத்துக் காட்டுகிறது. இருந்தாலும், எந்த ஒரு
பரமாதமாவான கடவுளின் உதவியில்லாமல் உயிரினங்கள் எல்லாம் பிறந்து விட்டன அல்லது
பரிணாமம் நடந்து விட்டது என்று அது
சொல்லவில்லை. அப்படி நடக்கவும்
முடியாது. இந்த உலகின் பல காலக்
கட்டங்களில், கடவுள் வித்தியாசமான உருவங்களை மேற்கொண்டார். வித விதமான மிருகங்களைப் படைத்துக் கொண்டே
போனார். ஒரு சில கால கட்டங்களில் மனிதன் கூட வாழ்ந்து வந்திருக்க மாட்டான். .
க்டந்த 2000 வருடங்களில், நமது சரித்திரம் தெளிவாக
இருக்கிறது. ஆனால் எந்த பரிணாமத்தையும்
நாம் பார்க்கவில்லை. ஏதொ ஒரு புதிய
மிருகம் உண்டானதாக கேள்விப்படவில்லை.
குறைந்த பட்சம் 5000 வருடங்களுக்குக் கேள்விப்படவே இல்லை. இது நிச்சயம்.
இவை எல்லாம் பரிணாமத்தாலேயே ஏற்பட்டவி.
நாம் சற்றே மாறுபட்ட உருவான மனிதனை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நாம் எல்லோருமே ஒரே வகையினராகத் தான்
இருக்கிறோம். இவை யாவும் நமக்கு
ஒன்றைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
அதாவது ஒரு பரமாத்மாவானவர், எல்லா
உயிரினங்களையும் உருவாக்கி அவை எல்லாவற்றையும் பேணி வருகிறார். இந்த உலகில் வாழும் உயிரினங்கள் எல்லாவற்றின்
மீதும் அவருக்கு ஒரு முழுமையான பார்வை இருக்கிறது. அவற்றின் உயிர்கள் மீதும் அவருக்கு முழுமையான
பார்வை இருக்கிறது. மீண்டும் மீண்டும்
உருவாக்கி மற்றும் அழித்தும் மற்றும் மாற்றை அமைத்தும் செய்து கொண்டே
இருக்கிறார். மேலும் புதிய புதிய
உயிரினங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன.
இருந்தாலும், வாழ்க்கையை வாழ்ந்துகொண்டும், ஒருவரோடு
ஒருவர் ஒப்பனை செய்து கொண்டும், வேடிக்கைகள் பல செய்து கொண்டும்
இருப்பது நமக்கு முக்கியம். நாம் ஒரு
பரமாதமாவானவரால் முழுக்க முழுக்க கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்பதைப் பற்றி நமக்கே முழு பிரக்ஞை இல்லை.
நாம் மட்டும் அல்ல, இந்த உலகம் முழுவதுமே அப்படித்தான்
இருக்கிறது. இதை நாம் செய்வதற்குக் காரணம், அந்த
பரமாதமாவானவர் நம்மை விட்டு வெளியே இருக்கிறார் என்று எண்ணி வருவதால்தான். நமது வாழ்க்கையின் நிமித்தம் நாம் மேற்கொண்டு
செயல்களைச் செய்து கொண்டே இருக்கிறோம்.
ஆமாம்... நாம் எல்லா கடமைகளையும்
சரி, எந்தவித
பற்றுதல்கள் அல்லது ஒட்டுதல் இல்லாமல் செய்து கொண்டு, நம்முள்
இருக்கும் அந்த பரமாத்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டும் வாழ்ந்து வரலாம்.
அத்தியாயம் 14 : மூன்று குணங்கள் கொண்ட யோகம்
பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்துச்
சொன்னது. அவரே உயிருள்ள எல்லா
ஜீவன்களுக்கும் தந்தை, உயிருள்ள பிராணிகள் அனைத்தின் உடல்
அமைப்பையும் தன்னிடத்தே கொண்டிருக்கிறார்.
எல்லா உயிரினங்களும் பிறக்கும்பொழுதே, மூன்று
குணங்களோடுதான் பிறக்கிறார்கள். அவையாவன-
சத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என்பனவாகும். சத்வம் என்பது நற்குணத்தைக் குறிக்கிறது, ரஜோ குணம்
என்பது பெரும் ஆவல்கள் அல்லது ஆசைகளைக் குறிக்கிறது மற்றும் தமோ குணம் என்பது
அறிவில்லாமையைக் குறிக்கிறது. நற்குணங்கள்
அறிவு, ஞானம் மற்றும்
ஒளி பெறுதல் இவற்றைக் குறிக்கிறது. ரஜோ குணம் என்பது ஆசை, மகிழ்ச்சி, வலி, நெருக்கம், போன்றவற்றையும், அறிவின்மை
இருள், கொடுமை பைத்தியக்காரத்
தனம் இவற்றைக் குறிக்கிறது. ஒருவரிடம்
இருக்கும் நற்குணம் ஆசைகளையும் அறிவீனத்தையும் வெல்லத் தக்கது. அதே போல் அறிவின்மையும் கூட நல்ல குணத்தையும்
ஆசைகளையும் வெல்லத் தக்கது. இவை எல்லாமே
ஒருவருடைய வாழ்க்கைக் காலத்திலேயே நடக்கக் கூடியவை. எந்த தருணத்திலும் இவை நடக்கலாம். ஒருவர்
இறக்கும்பொழுது, ஒருவரிடம் நற்குணமே படிந்து நின்றால், அவர்
சுவர்க்கத்தையே அடைவார். மீண்டும்
பிறக்கும்பொழுது நற்குணங்கள் மிக்கவர்களில் ஒருவராகவே பிறக்கிறார். ஒருவர் ஆசைகள் மிக்கவராக இருந்தால், பேராசை
மிக்கவர்களிடையே ஒருவராகப் பிறக்கிறார். அறிவீனத்தையே கொண்டிருந்தால், அவர் நரகத்தையே
அடைகிறார். அதே குணமுடையவர்களிடையே
மீண்டும் பிறக்கிறார் அல்லது ஒரு மிருகமாக;ப் ;பிறக்கிறார். இவை எல்லாவற்றையும் அறிய முடிந்தவரே வாழும்
உயிரினங்களை வாழ வைக்கிறார் மற்றும் அந்த கடவுளே எல்லாவித மயக்கங்களையும்
உருவாக்குகிறார் என்பதை அறிந்து கொண்டதும், அவற்றிலிருந்து
தூர நிற்கிறார். எந்தவித
செயல்பாடுகளோடும் மற்றும் அதன் முடிவுகளோடும்
அவர் தன்னை இணைத்துக் கொள்ளாமல், தனித்து
நிற்கிறார். மகிழ்ச்சியையோ அல்லது
சோகத்தையோ அல்லது வெறுக்க மாட்டார்.
அவருக்கு இரண்டும் ஒன்ரே. இவரே
பரமாத்மாவை அடைகிறார்.
"நமது வாழ்க்கை: நமக்கு முன்
சில நிலைகளைக் கற்பித்துக் கொள்வோம்.
எப்பொழுதாவது நாம் எவருக்காவது உதவி செய்திருக்கிறோமா? என்று கேட்டுக்
கொள்வோம். எப்பொழுதாவது நாம் மிகவும்
மகிழ்ச்சியாக இருந்து கொண்டு, காலம் இத்துடன் நின்று போய் நான் ஏன்
இப்பொழுதே இறந்து விடக் கூடாது? என்று நினைத்ததுண்டா? எப்பொழுதாவது நாம் ஏமாற்றப்பட்டு
விட்டோம் என்றும், வஞ்சிக்கப்பட்டு விட்டோம் என்றும், யாரோ ஒருவரைப்
பற்றி தூஷணையாகப் பேசிக் கொண்டு இருந்தோமா? உண்மையில் சொல்லப் போனால் இவற்றிற்கு
எல்லாம் பதில், நம்மில் பெரும்பாலோரிடமிருந்து, 'ஆம்' என்றுதான்
வரும். அதற்கு என்ன அர்த்தம்? அதாவது நாம் நற்குணங்கள், ஆசைகள் மற்றும்
அறிவீனம் போன்ற குணங்களுக்கு இடையேதான் பயணித்து க் கொண்டு வருகிறோம் என்பதே
அர்த்தம். நாம் பிறருக்கு சேவை செய்யும்பொழுதோ மற்றும் அந்த உதவி அவருடைய நிலைமையை
மேம்படுத்தி இருக்கிறது என்று கண்டால், அதைக் கண்டு
நீங்கள் மகிழ்வது நற்குணத்தின் ஒரு அங்கமே.
ஒருவேளை ஆசைகள் என்ற அங்கத்திற்குள் நாம் சென்று கொண்டிருப்போம். அதை ;மட்டுமே
நம்மால் செய்ய முடியும் என்று கருதினால், நாம்
அறிவற்றவர்கள் என்று அர்த்தம். வெறும்
செயல் ஒன்றில் ஈடுபடும்பொழுது இந்த மூன்று குணங்களுமே நம்மை ஆட்கொள்ளக் கூடியவை.
நம்மில் பெரும்பாலோர் ஆசைகளால் உந்தப் பட்டே வாழ்கிறோம். ஏனென்றால் நம் செயல்களுக்கு எல்லாம் பின் இந்த
ஆசையே இருக்கிறது. நம்மை மகிழ்ச்சிக்கு
உட்படுத்துகிறது. ஒரு சாதனையைச் செய்து
விட்ட சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதே
சமயத்தில் நாம் உணர்ச்சி வசப்பட்டு, மிகவும்
உணர்ச்சிகளால் தாக்கமடைந்து விட்டோமானால், கஷ்டத்தையே
தருவித்துக் கொண்டு விடுகிறோம். ஒரு
சராசரி இந்தியனின் வஅழ்க்கையில், அரசியல் பேசுவது, கிரிக்கட்
ஆடுவது (விளையாட்டு), திரைப்படம் பார்ப்பது, நடிகர்களைப்
பார்ப்பது, பங்குச் சந்தையில் ஈடுபடுவது மற்றும் நிலம் வகையறாக்களில்
வாங்குதல், விற்றலை மேற்கொள்ள்வது, ஆன்மிகத்தில்
புதிய வழிகளை நாடுவது (தியானத்துடன்) அல்லது ஆரோக்கியத்துடன் இருப்பதை நாடுகிறோம்.
- ஒரு சில ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு நாகரிக விரிவாக இருக்கிறது. மற்றும் உண்ணுதலும், பயணித்தலையும்
அவர்கள் மேற்கொள்ளுகிறார்கள். இவை எல்லாமே
நமக்கு ஆசைகள், நாம் பேசுகிறோம் மற்றும் பார்க்கிறோம். இவற்றைப் பற்றி எல்லாம் படிக்கிறோம். நமது கணிக்கும்
சுபாவத்தையும் அறிவையும் திருப்திப்படுத்திக் கொள்கிறோம். இவை எல்லாம் ஆசையின் மாறுபாடுகளே. ஆத்ம விசாரணையில் ஈடுபடுவதை விட்டு விட்டு, அதை உதறி
விடுகிறோம். ஒரு மணி நேரத்திற்கு நம்மால்
சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.
டி.வி.யோ, மொபைல் டெலிபோனோ, ரேடியோவோ
அல்லது சுற்றத்தில் நண்பர்களோ இல்லாமல் நம்மால் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது.
நமக்கு நம்மை திருப்திப் படுத்த ஏதோ ஒன்று அல்லது ஏதோ ஒருவர் அவசியம் சுற்றத்தில்
வேண்டும். இங்குதான் ஆசைகள் நம்மை உந்த
வைக்கின்றன. நம் செயல்களை யாராவது
புகழ்ந்தால், நாம் சந்தோஷமடைவது இல்லையா? ஆமாம்.
நம்மில் பெரும்பாலோர் அதை இரசிக்கிறோம்.
யாரோ ஒருவர் ஒரு பரிசுப் பெட்டியை அழகாக பரிசை உள்ளே வைத்து உங்களிடம்
கொண்டு வந்து கொடுத்தால், அதை திறந்து என்ன இருக்கிறது என்று
பார்க்க நாம் யாவரும் ஆசைப்படுவது இல்லையா? உடனே நம்மில் சிலர் அந்தப் பரிசின்
மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று மதிப்பிட ஆரம்பிகிக்கிறோம். சம்பந்தப்பட்டவருக்கு நாம் எவ்வளவு
மதிப்பிற்க்கு பரிசு கொடுத்தோம் அத்துடன் அதை ஒப்பிட்டு நோக்குகிறோம்.
ஒரு சில சமயங்களில் நாம் சந்தோஷப்படுகிறோம் - அதாவது நாம் சொல்வதைக் கேளாதவனுக்கு
தண்டனை கிடைக்கும்பொழுது மிகவும் சந்தோஷப்படுகிறோம். அல்லது அவனுக்கு பிரச்னைகள் சூழும்பொழுது
அப்படி சந்தோஷப்படுகிறோம். அவனைப்
பார்த்துச் சொல்லப் பிரியப்படுவது - 'உனக்கு
அப்பொழுதே சொன்னேன் பார்த்தாயா?' என்றெல்லாம் சொல்ல நினைக்கிறோம். சில
சமயங்களில் கடவுளிடம் சென்று மிகவும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம் - மற்றவனுக்கு
கடும் தண்டனை கிடைக்க வேண்டுகிறோம். ஒரு சில சமயங்களில், 'உனக்கு நான்
சரியான பாடம் கற்பிக்கிறேன் பார்! ' என்று சவால்கூட
விடுகிறோம். ... அதைச் செய்ய நாம் யார்? நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்கிறோமா? நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்
என்பதை உணர்ந்து செய்கிறோமா? நல்லதும்
கெட்டதும் அவரவர் செய்கையால் அவர்களுக்குக் கிடைப்பது. ஒருவருக்கு அவசியம் கிட்ட வேண்டியது கிட்டியே
தீரும். வெறும் காழ்ப்புணர்ச்சியைக்
காட்டி, நம் மனத்தில்
அறியாமையையும் இருளையும் பரவ விடக் கூடாது.
ஆமாம் .. அதைக் கொஞ்சம் பழக்கிக் கொள்வது கடினம்தான். இருந்தாலும் பிறருக்கு பாடங்களைச் சொல்லிக்
கொள்வதிலும், அல்லது கடவுளை நமக்காகச் சென்று செயல்களில் ஈடுபடச்
சொல்வதும், நமது மனத்திற்கு நல்லது. .. ஒன்று மாத்திரம் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடங்களில்
எவருக்கும் விதிகளுக்குப் புறம்பாகச் செல்ல முடியாது... யாரோ ஒருவர் வாழ்க்கையை நன்கு
அனுபவிக்கிறார்கள் என்று கற்பனை செய்வதும், - அப்படி
நினைப்பதற்கு அவர்களுக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம் - அவர்களுடைய வாழ்க்கை
முழுக்க இன்னல்கள் உடையதாகவே இருப்பதும் அவர்கள் அறியாமையிலேயே இருக்கிறார்கள்
என்பதையும் நம்புங்கள். இதைவிட வேறு
என்ன வேண்டும்? இதைவிட
வாழ்க்கை வேறு எந்த வித்த்தில் நன்றாக இருக்க முடியும்?
Subscribe to:
Posts (Atom)