Tuesday, September 20, 2016

அத்தியாயம் 13 - புலன் அல்லது களம் என்றால் என்ன? அதை அறிந்தவர் யார்? - அவர்களைப் பற்றிய யோகம்.

களம், அல்லது புலன் என்றால் என்ன என்று அர்ஜுனன் பகவான் கிருஷ்ணரைப் பார்த்துக் கேட்டான்.   அவற்றை அறிந்தவன் என்பவன் யார்? என்று கேட்டான்.  அறிவு அல்லது ஞானம் என்றால் என்ன என்று கேட்டான்.   ஆத்மாவின் சரீரமே அல்லது உடலே புலனாகும் அல்லது களம் ஆகும் என்றார் பகவான்.  இந்த உடலைப் பற்றியும் இந்தப் புலன்களைப் பற்றி அறிந்தவனுமே ஞானியாவான்.  அவற்றை அறிந்து கொள்வதே ஞானமாகும் அல்லது அறிவாகும்.   இந்த உடலுக்கு ஐந்து புலன்கள் இருக்கின்றன.   அவை, சுயச் செருக்கு, புத்தி, 10 வகை புலன்கள், மனம், ஆசை, வெறுப்பு, மகிழ்ச்சி, வலி, புத்திசாலித்தனம், மரியாதை போன்றவையே அந்தப் புலன்கள் ஆகும்.  இவை எல்லாமே மனத்தோடு ஒன்றி இயங்கும்பொழுது செயல்பாடுகள் விளைகின்றன.  பணிவு, அடக்கம், மன்னிக்கும் குணம், குருவின் மீது மரியாதை, தூய்மை, என்றைக்கும் நிலைத்து நிற்றல், சுயக் கட்டுப்பாடு, பொருட்களின் மீது பற்று வைக்காமல் இருத்தல், சுயச் செருக்கு இல்லாம, பிறப்பு - இறப்பைப் பற்றிய துல்லியமான அறிவு, வயது மூப்படைந்த காலத்தில் வரும் நோய்களும் வலிகளும், பிள்ளை, மனைவி, இதர குடும்ப அங்கத்தினர்களின் பாசத்திலிருந்து விலகி நிற்றல், பிடித்ததற்கும் பிடிக்காததற்கும் ஒரே விதமான மனப்ப்பக்குவத்தோடு பார்த்தல், ஆத்மாவைப் புரிந்து கொள்வதில் என்றும் ஒரே நிலை, - இவை எல்லாம்தான் ஞானம் எனப்படும்.  இவற்றிற்கு எல்லாம் மாறுபட்டவை அஞானமாகும்.  எவன் ஒருவன் தன் உடலுக்கும் தனக்கும் வேறுபாடு உண்டு என்பதை அறிகிறானோ ஆனால் அந்த உடலே அவன் அறிவாகும் என்று அறிகிறானோ அவன் என்னை அடைந்து விடுவான்.

    "நமது வாழ்க்கை:  முகம் -பார்க்கும் கண்ணாடியைப் பார்க்கும்பொழுது ஒன்றை கவனித்திருக்கிறாயா?   எத்தனை தடவை நாம் முகம் பார்த்தலஉம், ஒரே நாளிலேயே எத்தனையோ முறைகள் பார்க்கிறோம், மீண்டும் மீண்டும் நாம் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்க நினைக்கிறோம் அல்லவா?  அதுவும் அலுவலக் கழிப்பறையிலோ அல்லது ஹோட்டல்களிலோ, ஆஸ்பத்திரியிலோ அல்லது கடைகளிலோ எங்கு வேண்டுமானாலும் சரி, நமது புலன்களை திருப்திப்படுத்திக் கொள்வதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிட்டால்,  அது ஒரு ருசிகரமான தகவலைத் தரும்.  நமக்கு உடலின் வெளிப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொல்ள நிரம்ப நேரம் தேவைப்படுகிறது.  நமது தோற்றம், நிறம், சருமத்தின் மீது கவனம், சருமத்தின் மீது வளரும் முடி, என்று எத்தனையோ நம் கவனத்தைக் கவருகின்றன.  (வாசனா திரவியங்கள் விற்பவருக்கு இவை நன்மை பயக்கும்.)  அதன் பின் ருசி பார்க்கும்பொழுது நிரம்ப நேரம் செலவிடுகிறோம்.  விரும்பிய உணவைத் தேடுகிறோம்.  ஹோட்டல்களில் உண்கிறோம்.  நொறுக்குத் தீனிகளை நாடுகிறோம்.  உடலுக்கும் மனத்திற்கும் மகிழ்வைத் தேட பல வழிகளில் முனைகிறோம்.  நம்மில் பெரும்பாலோர் இந்த உடலையும் புலன்களால் எழும் உணர்வுகளை திருப்திப்படுத்த எத்தனையோ வழிகளில் முனைகிறோம்.  நம்மிடமிருந்து நம் உடல் வேறு, நாம் வேறு என்று வேறுபடுத்தி உணர்வதில்லையே.   மிகவும் அரிதாகவே அப்படி உணர்கிறோம்...  ஆகவே நம் உடலை ஒரு வலி வந்து தக்கும்பொழுது உங்கள் மனத்தையும் புலன்களையும் அது வெகுவாகத் தாக்குகிறது.  ஏனென்றால் உங்கள் உடலுக்கு மட்டுமே மிக அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறீர்கள் அல்லவா?  உங்கள் புலன்கள் திருப்திப் படாத பொழுது, உங்களுக்கு கோபம் வருகிறது.  உங்கள் மனம் கட்டுப்பாடு அற்றுப் போகிறது.  (உதாரணம்:  ஒரு சில நாட்களுக்கு ருசியான உணவு இல்லாவிட்டால், உங்களுக்கு மனைவி மீதோ அல்லது உணவு தயாரிப்பவர் மீதோ கோபம் வருகிறது.)   ஒரு சிலருக்கு தங்கள் மீதே அவ்வளவு நம்பிக்கை கிடையாது; ஏனென்றால் தோற்றத்தில் அவ்வளவு எடுப்பாகத் தோன்ற மாட்டார்கள்.  இதற்கு யார் பொறுப்பு?   அவர்கள்தானே அதற்குப் பொறுப்பு.... அறிவு அல்லது ஞானம் என்பதே உயர்ந்தது.  நமது மனம் அதை நாடியே எப்பொழுதும் சிந்தித்திருக்க வேண்டும்.  அதன் பிறகு நமது உடலும் அதன் புலன்களும் அதற்குப் பிறகே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.  அப்படி இருந்தால், நாம் கட்டுப்பாடு உடையவர்க்ள் ஆவோம்."

     'பரமாத்மாவானவர் ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கிறார்." என்றார் பகவான் கிருஷ்ணர்.  சிறியதோ, பெரியதோ எல்லா உருவத்திலும் அவர் குடிகொண்டிருக்கிறார்.  அவர் எப்பொழுதும் பிரிவுபடாத நிலையில் இருக்கிறார்.   இருந்தும் பிரிவுபட்ட   நிலையிலும் இருக்கிறார்.  அசையாத நிலையிலும் இருக்கிறார்.   அசையும் நிலையிலும் இருக்கிறார்.  அவரே ஒளியாகவும் இருக்கிறார்.  இருளாகவும் இருக்கிறார்.  இவற்றை எல்லாம் புரிந்துகொள்வதே ஞானம்.  இயற்கையிடமே எல்லா பொருட்களும் மண்டிக் கிடக்கின்றன.  அதுவே எதற்கும் காரணப் பொருளாகும், அதாவது உயிருள்ள ஒரு பொருளாகும்.  அந்தப் பொருளுக்கு ஆசை, சுயச் செருக்கு, நெருக்கம், அவை உபயோகப்படுத்தும் புலன்களின் உதவியால் செயல்பாடுகளை உருவாக்குகின்றன.  அவை நல்லது கெட்டது என்றும், மகிழ்ச்சி/வலி என்றும் தோற்று விக்கின்றன.  நானே எல்லாவற்றையும் சாட்சியாக நின்று கணித்துக் கொண்டிருக்கிறேன்.  நானே எதையும் அனுமதிக்கிறேன்; மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறேன்.  மற்றும் எதையும் அனுபவிக்காமலும் இருக்கிறேன்.  என் கடமையைச் செய்து கொண்டே தொடர்கிரேன் .......   எதன் மீதும் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் தொடர்கிறேன்.

எவர் ஒருவர் இதைப் புரிந்து கொள்கிறாரோ, புரிந்து கொண்டு செயல்படுகிறாரோ, அவர் மீண்டும் பிறப்பதில்லை.   அவர் மேற்கொண்டு பிறப்புக்கள் அற்றவராகப் போய் விடுகிறார்.   அவர் பரமாத்மாவின் தரிசனத்தைப் பெறுகிறார்.   தன் ஆத்மாவை அழித்துக் கொள்வதில்லை.  இதனால் அவர் கடவுளையே அடைகிறார்.   எவன் ஒருவன் எல்லா ஆசைகளும் இப்படித்தான் அடித்தளத்தில் உருவாகின்றன என்பதைப் புரிந்து கொள்கிறானோ, அவனே மிக உயர்ந்த புனிதத்தன்மையை அடைகிறான்.  எவன் ஒருவன் இந்த உடலைப் பற்றியும், உடலைப் பற்றிய அறிவையும், இயற்கையைப் பற்றியும் வாழ்வு முறைகள் பற்றியும் அறிய முடிகிறதோ அவனே எந்த ஒரு நிலையையும் கடந்து பரமாத்மாவிடம் சேர முடியும்.

     "நமது வாழ்க்கை:  "ஏன்?" என்று கேள்விகள் கேட்டே நமது வாழ்க்கையைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.  அந்த கேள்விக்குக் கிடைக்கும் பதில் இருக்கும் தர்க்க வாதத்தைப் புரிந்து கொள்கிறோம்.  அதன் மூலம் நமது அறிவு பெருகுகிறது.  குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த உத்தியைத் தான் அனுசரித்து அறிவைப் பெருக்கி வருகிறோம்.  ஆகவே பெரும்பாலான சமயங்களில் நமக்கு ஏதோ ஒரு தர்க்க ரீதியான தகவல் வேண்டி இருக்கிறது. அது நாம் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும்.  அது தரும் தகவலை அறிவு என்று கொண்டு, மனத்தில் பதிய வைத்துக் கொள்கிறோம்.  அதை வைத்துக் கொண்டு வாழத் தொடர்கிறோம்.  இருந்தாலும், எப்பொழுதுமே நமக்கு அந்த தர்க்க வாதம் தேவைப் படுவதில்லை.  அதில் திருப்திப் பட்டு வாழ முனைவதில்லை.  எங்கெல்லாம் நேர்மறை அல்லது எதிர்மறை நன்மைகள் நிரம்ப இருக்கின்றனவோ அங்கெல்லாம் இது உண்மையாகிறது.  நாம் எடுத்துக் கொண்ட நிலையில், நாம் எதையும் தர்க்க வாதம் இல்லாமல் ஒப்புக் கொள்கிறோம்.     தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது யாரோ ஒருவர், "அடுத்த தெருவில் எரிமலை வெடித்து சிதறிய நெருப்புக் குழம்பு தெளித்து ஓடுகிறது" என்று சொன்னால், - பலர் காயமுற்று விட்டனர் என்று சொன்னால், அங்கு நாம் செல்லக் கூட மாட்டோம்.  அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்க முடியாது என்று நமக்குத் தெரிந்தும் நாம் அங்கு செல்ல மாட்டோம்.  யாரோ ஒருவர், கடவுளின் விக்கிரகம் பாலைக் குடிக்கிறது என்று சொன்னதும் நாமும் கையில் ஒரு டம்ளர் பாலை எடுத்துக் கொண்டு செல்கிறோம்.  யாரோ ஒருவருடைய வாயிலிருந்து கடவுள் விக்கிரகம் ஒன்றை வெளியில் எடுத்து விட்டால், அதை நாம் கடவுளின் அனுக்கிரகம் என்று உணர்கிறோம்.  இந்த இயல்பே நம் மனத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.   நமது புலன்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது.   யாராவது, 'ஒரு குரங்கைப் பற்றிய சிந்தனையே வேண்டாம் உங்களுக்கு" என்று சொன்ன்வுடன் நீங்கள் குரங்கைப் பற்றியே நினைக்கிறீர்கள்.  ஏனென்றால் அது ஏன் என்று அறிந்து கொள்ளவே விரும்புகிறோம். ஒருவேளை, 'ஒரு குரங்கைப் பற்றி நீங்கள் நினைத்தால், உடனே இறந்து விடுவீர்கள்" என்று யாராவது சொன்னால், உடனுக்குடன் நீங்கள் அதையே நினைப்பீர்கள்.  ஏனென்றால் ஒரு பயம் உங்களை ஆட்கொள்ளுகிறது.  ஏதோ ஒரு மாற்றம் நிகழுமோ என்ற பயமே தீமை நேருமோ என்ற பெரும் பயத்தை உருவாக்குகிறது. நமக்கு ஏன் அந்த பயம் வருகிறது?  ஏனென்றால் இன்றைக்கு இருக்கும் நிலையில் நாம் சுகமாக உணர்வுகளுக்கு உறுதுணையாகவே இருக்கிறோம். அதிலிருந்து நாம் நிச்சயம் மாற விரும்பவில்லை.  இருந்தாலும் நமக்கு உடல், உறவு என்று பலவற்றோடு கொண்டுள்ள உறவுகளிலிருந்து விலக விரும்பவில்லை. ஆகவே மாற்றங்களை நாம் விரும்பவில்லை.  ஆகவே பயம் ஆட்கொள்கிறது.  எப்பொழுது பயம் பற்றிக் கொள்கிறதோ அப்பொழுது தர்க்க வாதம் தேவைப் படாது.  நமது அறிவு தோல்வி பெறுகிறது.   ... அந்த ஒரு நிலையில், நாம் நோய்வாய்ப்படலாம், மூட நம்பிக்கையைக் கொள்ளலாம், சமநிலையிலிருந்து பிறழ ஆரம்பிக்கலாம்.  ஆகவே "ஏன்?" என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.  அதை உபயோகிக்காவிட்டால், அதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும்.  அதே சமயத்தில், தர்க்க வாதத்தைப் பற்றி சற்றுக் கூட நாம் கவலைப் படுவதில்லை.  (அதை நாம் புரிந்து கொள்ள முடியும்).   அதையே நாம் அறிவாக சேமித்து வைத்துக் கொள்கிறோம்.  (நெருப்பு சுடும்! அதை நாம் சோதித்துப் பார்ப்பதில்லை.  இந்த தகவலை அறிவாகவே எடுத்துக் கொள்கிறோம்).   ....  ஆகவே அறிவு என்பது நமது உடலைப் பற்ரியோ, நம்முடைய ஒட்டுதல்களைப் பற்றியோ ஏன் எதைப் பற்றியும் முழுமையாக இருத்தல் வேண்டும்.  அப்படி நம்மிடம் உணர்வுகள் இல்லாவிட்டால், (பயம், சந்தோஷம், முதலிய உணர்வுகள்) போன்ற உணர்வுகள் நம்மை கட்டுப்படுத்த ஆரம்பித்து கஷ்டங்களைக் கொண்டு வரும்.

     கடவுளும் சரி, அவருடைய படைப்புக்களும் சரி, எல்லாமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.  . . .  அவரை நாம் புரிந்து கொள்ளாவிட்டால், நமது கொள்கையும் அப்படித்தான் இருக்கும்.   ஒரு மிகத் மெல்லிய துணுவாக இருக்கும் அணுவானது நம் தேசத்தையே அழித்து விடும்.  வெகு சிறு அளவு காற்றே எந்த ஒரு அமைப்பையும் அழிக்க வல்லது.  மிக மிக சிறிய அணுவைப் போன்ற ஒரு செல் நம் உடலையே தோற்றுவிக்க வல்லது.  அப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.   அப்படிப் பார்த்தால், வானம் எப்படி திறந்த வெளியாக இருக்கிறது?  வெகு தூரத்திலிருந்து எப்படி பார்க்க முடிகிறது?   ஆனால் அதை நெருங்கப் பார்த்தால், முடிவதில்லை.  மேலும் தள்ளிப் போய் தூரத்தில் போய் விடுகிறது.  அதற்கு முடிவே இல்லை.  அப்படித்தான் கடவுளும்.   அவருக்கு ஒரு ஆரம்பம் என்று  கிடையாது.   முடிவும் என்று  கிடையாது.   அவரே மிக மிக சிறிய அணுவைப் போன்றவர்.  ஆனால் மிக மிக பெருமை படைத்த உயர்ந்தவர்.  அவரிடமே எல்லா இரகசியங்களையும் இருக்கச் செய்து கொண்டு விட்டார்.  அவற்றின் அறிவை எல்லாம் நம் மனத்தில் புதைத்து விட்டார்.  பிரபஞ்சத்திலும் பரவி  இருக்கச் செய்து விட்டார்.    அதே போல், நீரைப் போல,  நீங்கள் விரும்பும் உருவத்தில் தம்மை வைத்துக் கொள்கிறார்.  ஆகவே நாம் எந்த கோணத்தில் பார்க்க விரும்புகிறோமோ அதே கோணத்தில் அவரை நாம் பார்க்கலாம். அவரை ஒரு மலராகப் பாருங்கள்; உடனே அவர் மலராகவே உங்களை நெருங்கி வந்து பார்ப்பார்.  அவரை ஒரு கத்தியாக மனத்தில் வரியுங்கள். அவர் ஒரு க்த்தியாகி உங்களை நோக்கி வருவார்.  ஆகவே எல்லாமே உங்களைப் பொறுத்திருக்கிறது. (நாம் என்று நான் சொல்லும்பொழுது, அது அவரையும் சேர்த்துச் சொல்வதாகும்.  அவரில்லாமல், நீங்க்ளும் இல்லை, நானும் இல்லை, நாமும் இல்லை.)"

Wednesday, September 7, 2016

அத்தியாயம் 12 - பக்தி யோகம்

பரமாத்மாவின் வெகு உயர்ந்த நிலையை உணர்ந்து  அவரை அடைவதற்கு சிறந்த வழி என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்பினான்.  அவருக்கு மிகவும் பிடித்தமானவர்கள் யார் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினான்.   'என்னை எவர் எவரெல்லாம் பூஜித்து வருகின்றனரோ, என் மீது தளராத நம்பிக்கை வைத்து பக்தி செலுத்தி வருகின்றனரோ, அவர்களே மிகவும் முழுமை பெற்ற மனிதர்களாவார்கள்.   மற்றவர்களுள், எவரெல்லாம், ஐம்புலன்களை அடக்கி பிறருக்கு நன்மைகளையே செய்து வருபவர்கள் எல்லோரும் கூட என்னை எளிதாக வந்தடைவார்கள்' என்றார் பகவான் கிருஷ்ணர்.   தன்னை அடைவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன என்றும் அவர் மீது ஒரே நிலையாக பக்தி கொண்டு, அவருடனேயே மனத்தில் இருந்து விடுவதும் ஒரு வழி.   அதுவே சாத்தியப் படவில்லை என்றால், ஒரு பக்தி மார்க்கமான சேவை செய்து வாழலாம்.   தான் செய்யும் செயல்பாடுகளின் பலன்களை அவரிடம் விட்டு விடலாம்.  அதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால், அவர் மீது இருக்கும் அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.

     "நமது வாழ்க்கை:  நமது நாடான இந்தியாவில், குறைந்த பட்சம், கடவுளை எத்தனையோ உருவங்களில் தொழுது வருகிறோம். கல்லிலிருந்து மிருகங்கள் வரை, அவற்றிலிருந்து மேலும் பெரிய பெரிய மனித உருவங்கள் என்று வணங்கி வருகிறோம். இந்த வழிகள் எல்லாம் கடவுளை ஒவ்வொரு உருவத்திலும் காண முடியும் என்பதை நம்புவதற்காகவே செய்யப்படுகிறது.  ஒரு சில பழக்க வழக்கங்கள் ஜனங்களை பக்தி வழியில் மனத்தைச் செலுத்துவதற்காகவே உபயோகப்படுத்தப் படுகின்றன.   ஒரு மாத காலத்திற்கு ஒரு விழா நடத்துதல், ஒரு மாத காலத்திற்கு பிரார்த்தனைகள் என்று செய்வது நம் பழக்கம்.  அடிப்படையாக இந்த முறைகள் மூலம் மக்களின் மனத்தை இடைவிடாது மாற்ற முனைவதே அவற்றின் நோக்கம்.   . அத்துடன் கடவுளின் உருவங்கள் பெரும்பாலும், மகன், தாய், தந்தை போன்றவர்களின் குடும்ப அமைப்பாகவே இருக்கும்.   இவை எல்லாம் ஒரு குடும்பத்தின் கட்டுக் கோப்பான ஒரு அமைப்பையே கடவுள்களிடம் காண்பித்து, அவர்கள் எல்லோரும் ஒரு குடும்பத்தின் மேலான அமைப்பையே கொண்டுள்ளவர்கள் என்பதைக் காண்பிப்பதே.  ஆஸ்ரமம் அல்லது மடம் ஒன்றிற்குச் சென்றால், அங்கு வேதங்கள் கற்பிக்கப்படுவதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வதையும் பார்க்கிறோம்.  ஹிமாலய பிரதேசங்களில், யோகிக்கள், வாழ்க்கையில் எந்த பற்றையும் துறந்தவர்கள், வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாதவர்கள், பெரும்பாலும் தியானத்திலேயே வாழ்பவர்கள் போன்றவர்களைப் பார்த்து அறிகிறோம்.  நம்மைப் போன்றவர்கள் கடவுளைப் பற்றி கேட்டு அறிவதில் பெருமை அடைகிறோம்.   அவர் என்ன உருவத்தவர்?  அவர் ஏன் அப்படி இருக்கிறார், என்று மேலும் சில வாதங்களைச் சொல்லி அறிய முற்படுகிறோம்.   அந்த துறையில் நம்முடைய அறிவைப் பெருக்கிக் கொள்ளவே முனைகிறோம். (அதைப் போல மத விஷயங்கள் பேசப்படும் கூட்டங்களுக்கும் சென்று பிரார்த்தனைகள் செய்து நமது அறிவைப் பெருக்கிக் கொள்ள முனைகிறோம்.)   ஒரு சிலர் பிறருக்கு சேவை ச்செய்வதில் நம்பிக்கை கொண்டு செய்கிறார்கள்.   கடவுளுக்கு சேவை செய்வதிலும் நற்பணிகளைச் செய்வதிலும் அக்கறை கொள்கிறார்கள்.  எல்லாமே கடவுளை அடையும் வழிகள்தாம்.  அதாவது அந்த பரமாத்மாவை அடையும் வழிகளே.  (ஜிலீவீs sமீஸீtமீஸீநீமீ வீs ஸீஷீt நீறீமீணீக்ஷீ).

     எத்தனை எத்தனையோ விளம்பர பலகைகளைப் பார்க்கிறோம்.   தர்மத்திற்காகக் கொடுக்கப்படும் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கிறோம்.  தர்ம கைங்கர்யங்கள் செய்யும் ட்ரஸ்டிகளின் பெயர்களை ஆங்காங்கே கவனிக்கிறோம். கோவில்கள் ஆங்காங்கே ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சமூகத்திற்கும் என்று கட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.  அதாவது கடவுள் அந்தந்த தெருவினருக்கும் சமூகத்திற்கும் நன்மைகள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார்கள்.   அது மட்டுமல்ல, பூஜை புனஸ்காரங்கள் செய்து - கீதையில் சொல்லப்பட்ட கொள்கைகள் பிரகாரம் பூஜைகள் செய்து - மதக் கூட்டங்கள் நடத்தி, மக்களோடு தொடர்புகள் பல ஏற்படுத்திக் கொண்டு தம் இடங்களில் எல்லாம் இவ்வகை கூட்டங்களை நடத்துவதில் பெருமை கொண்டு வாழ்கிறார்கள்.  இவற்றை எல்லாம் செய்வதினால், ஏற்கனவே நாம் எல்லோரும் அவரை அடையும் வழிகளைத் தவற விட்டு விட்டோம்.  அப்படி இழந்ததினால் அவரைப் பற்றிய நினைவுகள் வருவது கடினமாகிறது. (இப்படி எல்லாம் செய்வதினால் அதைத் தான் நாம் நிரூபித்துக் கொண்டு வருகிறோம்.)"

     கிருஷ்ணா மேலும் அர்ஜுனனுக்குச் சொன்னார்: " எவரெல்லாம் வெறுப்பை உமிழிந்து விட்டு, பிறருடன் நட்புரிமை கொண்டு வாழ்கின்றனரோ,  சுயச் செருக்கு (மீரீஷீ) இல்லாமல் வாழ்கின்றனரோ, எப்பொழுதும் ஒரு மனத் திருப்தியுடனும் சுய அடக்கத்துடனும், எவருடைய புத்தி என்மீதே எப்பொழுதும் படிந்து நிற்கிறதோ - இவ்வகைப் பட்டவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்களாக ஆகி விடுகிறார்கள்.  எவரெல்லாம் மகிழ்ச்சியோடு திளைக்காமலும் சரி, சோகப்படாமலும் சரி இருக்கிறார்களோ,எவருக்கெல்லாம் புண்ணிய பொருட்களும் சரி, புண்ணியமில்லாதவைகளும் சரி இரண்டிற்கும் அப்பால் பட்டு நிற்கிறார்களோ, மரியாதையோ அல்லது அவமரியாதையோ எதுவும் அவர்களை பாதிக்கவில்லையோ, புகழோ அல்லது புகழில்லாமையோ, எவருடைய மனமெல்லாம் அறிவிலேயே திளைத்திருக்கிறதோ மற்றும் எவரெல்லாம் பக்தி மார்க்கத்திலேயே தன் மனத்தைச் செலுத்தி வருகிறார்களோ - இத்தகைய மனிதர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆகிறார்கள்.  எவரெல்லாம் பக்தி மார்க்கத்தை பின்பற்றுகிறார்களோ நம்பிக்கையிலேயே ஊன்றி வாழ்கிறார்களோ, மற்றும் என்னை அடைவதையே வாழ்க்கையின் முக்கிய குறிக்கொள் என்று வாழ்கிறார்களோ - அவர்கள் எல்லோரும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். 

     "நமது வாழ்க்கை:  நமது நண்பர்களுக்கும் சொந்தக் காரர்களுக்கும் வாழ்க்கையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றியோ, பதவி உயர்வுகள் , கல்யாணங்கள், சொத்துக்கள் குவிவது பற்றி சிந்திக்காமல் இருக்க முடியுமா?... நிச்சயம் நம்மால் முடியும்...  முதன் முதலில் நமக்கு நாமே மரியாதை செய்து பழகிக் கொள்ள வேண்டும்.  இரண்டாவது கடவுளின் பரமாதம் சொரூபத்தை விட வேறு ஒன்றும் இல்லை என்பதை உணர வேண்டும்.  பிற எதுவும் மதிப்பற்ற நிலையைக் கொண்டது.   ...   ஆகவே, முதலில் என்ன சொன்னோம்? நம்மை நாமே மரியாதைக்கு உரியவராக நடத்திக் கொள்ள வேண்டும்.    ... அதற்குக் காரணம், நமக்குள்ளேயேதான் கடவுள் இருந்து கொண்டிருக்கிறார்.  அதனாலேயே நீங்கள் முதலில் உங்களையேதான் மரியாதை செய்து கொள்ளுதல் வேண்டும்.

     சுயச் செருக்கு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் முக்கியமான உணர்வு.  ஒரு எல்லைக்கு மேல் அது இருந்தால், ஒரு மிருகம் உங்களைக் காயப்படுத்துவது போல உங்களை அது காயப்படுத்தி விடும்.     நமக்குள் இருக்கும் ஒரு உணர்வு எப்பொழுதும் எதையும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டு நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கிறது.  நம்மில் ஒருவரே முக்கியமானவர், பிறரை விடப் பெரியவர் என்ற உணர்வோடு அது உலவச் செய்கிறது.  ஒரு குறிப்பிட்ட சமூகமே ஒன்றைவிட மற்றொன்று பெரியது என்று நினைக்கத் தோன்றுகிறது.  நாம் அவர்களை விட பெரியவர்கள் என்றோ தாழ்ந்தவர் என்றோ நினைக்க வைக்கிறது.  ஒரு சிலர் பெரும் பிரபலஸ்தர்கள் செல்லும் பாதையிலேயே செல்ல நினைக்கிறார்கள்.  அப்படி அனுமதி மறுக்கப்பட்டால், அவர்களுடைய சுயச் செருக்கு தூண்டப்படுகிறது.   எந்த ஒரு உரையாடலிலும் அவர்களுடைய கருத்தே, அபிப்பிராயமே அறுதியான ஒன்றாக இருக்க வேண்டும் என்று பிரியப்படுகிறார்கள்.  அடிப்படையாக ஒருவர் சுயப் பிரக்ஞை உடையவராக இல்லாவிட்டால் மற்றும் பிறரால் பெரும்பாலும் உதாசீனம் செய்யப்படுபவராக இருந்து விட்டால், இவ்வகை சூழல்களைச் சந்திப்பார்கள்.  தவறான வழியில் உபயோகப்படுத்தப்படும் சுயச் செருக்கு உணர்வு சம்பந்தப் பட்ட வகையில் ஒரு சமநிலையற்ற நிலையை அவரிடம் தோற்றுவிக்கிறது.   அந்தப் பொய்மையான ஒரு நிலை, நமது பேச்சுக்களையும் செயல்பாடுகளையும் அர்த்தமற்றவைகளாக ஆக்கி விடுகின்றன.  இறுதியில் இந்த நிலைமை நிலைநிறுத்த,  பிறர் நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும்.  அல்லது பிறர் ஏதோ உங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவே எண்ணிக் கொண்டிருக்க வேண்டும் (உண்மையைவிட அது பன்மடங்கு மேலாக இருக்கலாம்.)  ... இந்த பொய்மை கலந்த சுயச் செருக்கை தவிர்க்க, உங்களை நீங்களே பரிசோதித்துக் கொண்டு பாருங்கள்.  பிறரிடம் குடிகொண்டிருக்கும் கடவுளைப் பாருங்கள்.  கடவுளின் செயல்பாடுகளில் நம்பிக்கை வையுங்கள்.   உங்களை எந்தவித புகழுக்கும் சரி, மரியாதை வார்த்தைகளோடும்சம்பந்தப் படுத்திக் கொள்ளாதீர்கள்.
.       அப்படி ஒருவேளை அவற்றோடு உங்களை சம்பந்தப்படுத்திக் கொண்டு உங்களை நீங்கள் பார்க்க ஆரம்பித்தால் போதும், உடனே உஙக்ளுடைய சுயச் செருக்கைத் தூண்டி விட்டவர்கள் ஆவீர்கள்.  பெரும்பாலான சமயங்களில், எங்கெல்லாம் வன்முறையும் உறவு துண்டிக்கப்படுவதும் நடக்கிறதோ இந்த பொய்மையான சுயச் செருக்கே பிரதான காரண்மாக இருப்பதைக் காணலாம்.  இந்த குணத்தை விட்டு விட்டால், உங்கள் வாழ்க்கை மிக அருமையாக இருக்கும்.  (உங்களோடு உறவாடும் நண்பர்களோ, உறவினரோ போன்றவர்களும் சுகமான மனப்பாங்குடன் நடந்து கொள்வார்கள்.)   அதைச் சொன்னதால், ஒரு முட்டாளின் வாழ்க்கையை வாழச் சொல்லவில்லை... அல்லது பிறர் எவரும் உங்களை ஏளனமாக நடத்துவதை அனுமதிக்கச் சொல்லவில்லை.  ...  எதுவெல்லாம் சரி என்று படுகிறதோ அதை உறுதியாக்ச் சொல்லி நிலைத்து நிற்கச் செய்து வாழுங்கள்.  அதுவே உங்களுடைய கடமை.   ஆனால் எப்பொழுதும் அந்த சுயச் செருக்கு உணர்வோடு வாழ வேண்டாம்."

அத்தியாயம் 11. பரமாத்ம சொரூபத்தின் யோகம்

எதிர்பார்ப்புக்களின் ஒரு சுருக்கம்:  இந்த அத்தியாயத்தைப் படிக்கும் முன் எவருக்கும் கொஞ்சம் கற்பனை தேவை என்பதைச் சொல்கிறேன்.  ஆகவே இப்பொழுது நாம், "சூரியனை" மனத்தில் கற்பனை செய்து கொள்வோம்.  ஒரி சில வினாடிகள் எடுத்துக் கொள்வோம்.   சரியா?   அந்த சூரியன் எவ்வளவு பெரியது என்று நினைத்துக் கொண்டோம்.  அது ஒரு காகித அளவு இருக்குமா அல்லது கட்டிட அளவா அல்லது ஒரு மலை போன்றதா?   நம் கற்பனை ஒன்றும் அவ்வளவு பிரமாதமில்லை.  உண்மையில் நேரிடையாக நாம் சூரியனைப் பார்க்கிறோம்.  வெகு தூரத்தில் இருக்கும் அந்த சூரியன்.  அது ஒரு காரின் டயரைப் போன்றதாக தோன்றுகிறது.  ஆனால் பல லட்சம் அல்லது கோடி அளவு உங்கள் கற்பனையைவிட அது பெரியது.  நீங்கள் நினைத்துக் கொண்ட அளவையே மேலும் 100 மடங்காக்கிப் பாருங்கள்.   அதன் பின் 1000 மடங்காகவும், அதன் பின் 2 மில்லியன்கள் மடங்காகவும் ஆக்கிப் பாருங்கள்.   அப்பாடியோவ்...  நினைவு போதவில்லை.   மூளையால் அந்த உருவத்தை ஜீரணித்து அறிய முடியவில்லை.  மீண்டும் உங்கள் மூளையைத் தட்டிவிட நினைக்கிறீர்கள்.   இதுவே கற்பனையின் எல்லையும் உண்மையுமாகும்.  ஆனால் நாம் எவருமே நமக்கு மயக்கமாகத் தெரிந்த உருவங்களுடன்தான் வாழப் பிரியப் படுகிறோம்.  மீண்டும் சொல்ல வேண்டுமானால், இந்த கற்பனையின் சக்தி இந்த அத்தியாயத்தைப் படிக்கும் முன் உங்களுக்குத் தேவை என்பதை சொல்லி விடுகிறேன்.
அர்ஜுனன் இப்பொழுது பகவான் கிருஷ்ணரிடம் பதில் சொல்லும்பொழுது, தனக்கு இருந்த மயக்கமான நிலை இப்பொழுது இல்லை என்றான்.  ஒரு பொருள் விளங்காத நிலை விலகி விட்டது என்றான்.  பகவான் கிருஷ்ணரே எல்லாமாக இருப்பதை உணர்ந்து கொண்டான்.  அதை அடுத்து தான் பார்க்கும் எல்லா உருவங்களிலும் கடவுளையே பார்க்க விரும்பினான்.  அதாவது கடவுளே சொல்லி இருப்பது போன்ற ஒரு நிலையைக் காண விரும்பினான்.  ஒரு புனிதமான உருவம் லட்சோப லட்சம் வகையான பொருட்களை அதனுள் கொண்டது என்றார்.  வெவ்வேறான நிறங்கள், வெவ்வேறான வடிவங்கள் மற்றும் கடவுள்கள், உயிரினங்கள் மற்றும் எல்லாமே அவற்றுள் இருக்கின்றன.   அவற்றை எல்லாம் எவரும் இதற்கு முன் பார்த்ததே இல்லை.  எதை எல்லாம் அர்ஜுனன் பார்க்க விரும்பினானோ , எல்லாமே, காலம், பூகோளம், இரகசியங்கள் மற்றும் உருவங்கள் - எல்லாவற்றையும் அர்ஜுனன் அதில் பார்க்க முடியும்., என்றார் பகவான் கிருஷ்ணர்.  அப்படி எல்லாவற்றையும் பார்ப்ப்தற்கு அர்ஜுனனுக்கு ஒரு புனிதமான பார்வை ஒன்று வேண்டும் என்றார், பகவான் கிருஷ்ணர்.   அதையும் அவனுக்கு பகவான் கிருஷ்ணர் அளித்தார்.  அதன் பிறகு எங்கெங்கும் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உருவத்தை அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் காட்டினார்.    கால வரமப்ற்றதும் எதையும் உள்ளடக்கியதுமான அந்த உருவத்தை பகவான் கிருஷ்ணர் காட்டினார்.


"நமது வாழ்க்கை:  எனக்கு இது முன்பே தெரியும்.  அந்தக் காட்சியைக் காண தனிச் சிறப்பு வாய்ந்த கண்ணாடிகள் தேவை என்றது போன்ற உண்மையை நான் அறிவேந்.  .. ஹ§ம்...  அதுவும் சிறப்பான சில திரைப்படங்கள், முப்பரிமாணங்களைப் பார்க்க உதவும் கண்ணாடிகளோடு பார்க்கவில்லைய் என்றால், என்னால் எதையும் பார்க்க முடியாது.  உண்மையில் நாம் பார்ப்பனவெல்லாம், சற்றே புகை படர்ந்தாற்போல தெளிவாக இருக்காது.  ஆனால் கண்ணாடியை அணிந்ததும் முப்பரிமாணம் தெளிவாகப் புலப்படும்.  அதே போல் படங்களை டீ.வி.யில் பார்க்கும்பொழுது, எல்லா நிகழ்வுகளையும் அந்த 9 திரைகளில் ஏதோ ஒரு தருணத்திலேயே பார்த்து அறிய முடியவில்லை. இருந்தாலும் அந்த சமயங்களில் டீ.வி.யில் எல்லா காட்சிகளும் ஓடிக் கொண்டுதான் இருக்கும்.  அதே போல் என் கண்கள் சுமார் 180 டிகிரிக் கோண விலாசத்தைக் காண வல்லது.  ஆனால் அந்த பரப்பளவை முழுக்க என்னால் மனம் குவித்துப் பார்க்க முடியாது.  அவற்றை மனம் எப்படியோ புரிந்து கொள்ளும்.  இருட்டில் என் கண்களுக்கு எதுவும் புலப்படாது.  ஆனால் சிறப்பான ஒரு பைனாகுலரால் எல்லாவற்றையும் காண முடியும்.  இத்தனைக்கும் கண்களைப் போல ஒரு தானியுங்கியான வகையில் குவித்துப் பார்க்கக் கூடிய லென்ஸ் வேறு ஒன்றும் கிடையாது.   இதைப் போல வேறு ஒன்று இன்னமும் உருவாக்கப்படவில்லை.  இப்பொழுது எனக்குப் புரிகிற்து - அர்ஜுனனுக்கு ஏன் சிறப்பான ஒரு புனித கண் தேவைப்பட்டது என்று  ..."

   அந்த எல்லையற்ற உருவம், பல்லாயிரம் வாய்களைக் கொண்டதாக இருந்தத்.  பல்லாயிரம் கண்களைக் கொண்டதாக இருந்தது.  அதன் மேல் எங்கு பார்த்தாலும் புனித நகைகளையே கண்டான் அர்ஜுனன்.  ஆயிரம் ஆயிரம் கைகளில் எண்ணற்ற ஆயுதங்கள்.  அந்தக் கைகளில் எத்தனையோ மாலைகளையும் எண்ணற்ற நிறங்கள் கொண்ட ஒளியையும் கண்டான்.  ஏதொஒ ஆயிரம் ஆயிரம் சூரியன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூடியது போலத் தோன்றியது.   எங்கு பார்த்தாலும் ஆயிரம் ஆயிரம் முகங்கள்.  அதில் அர்ஜுனன் எண்ணற்றவற்றைப் பார்த்தான். பகவானைப் பார்த்து சொன்னான். "எல்லா தெய்வங்களையும் நான் உன்னிடத்திலேயே பார்க்கிறேன்.  பல எண்ணற்ற வகையான முகங்களைப் பார்க்கிறேன். எத்தனையோ கைகள், வயிறுகள் பார்க்கிறேன்.   எந்த இடத்தில் ஆரம்பம் என்று தெரியவில்லை.  எங்கு மத்திய நிலை இருக்கிறது என்றோ முடிவு எங்கு என்றோ என்னால் காண முடியவில்லை.  எந்த ஒரு இடத்தை நான் மேற்கோளாகக் காட்ட முடியும் என்று தெரியவில்லை.   எந்த கோணத்தை நான் பிறருக்கு எடுத்துச் சொல்லலாம் என்றும் தெரியவில்லை.  எல்லாமே எங்கும் பரவி நிற்கிறது. ஆயிரம் ஆயிரம் மலர்கள், ஒளிக் கீற்றுக்கள் எல்லாம் எங்கெல்லாமோ பரவி நிற்கின்றன.  அவை எல்லாவற்றையும் வேதமே உருவாக்கியது.  அவை எல்லாவற்றையும் நீக்க முடியாது.  சூரியனையும், சந்திரனையும் மற்றும் எத்தனையோ கிரகங்களையும் நான் பார்க்க முடிகிறது.  இவை எல்லாவற்றையும் உங்கள் உடம்பிலே பார்க்கிறேன்.  அங்கிருந்துதான் இந்த பூவுலகத்திற்கு வரும் தீ, காற்று, நீர் - இவற்றின் முகங்களை நான் உங்கள் உடம்பில் பார்க்கிறேன். அந்த உருவம் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.  அதே சமயத்தில் பிரமிப்பையும் பயத்தையும் ஊட்டுகிறது.   முனிவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறேன்.  இராட்சசர்கள் எங்கேயோ கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  படை வீரர்கள், மிருகங்கள், தொழிலாளர்கள், பறவைகள், பாம்புகள்,  நல்ல காரியங்கள் மற்றும் எத்தனையோ உங்கள் வாயிருந்து வரக் கூடியவை எல்லாவற்றையும் பார்க்கிறேன்.    என் சொந்தக் காரர்கள் யாவரும் உன் வாய்க்குள் சென்று மடிந்து கொண்டிருக்கிறார்கள்.  நல்லவர்களும் சரி கெட்டவர்களும் சரி, வெவ்வேறான வகையில் நடத்தப்படுவதை நான் பார்க்கிறேன்.  அவர்களுக்கு வேறொரு வாயில் புதிய பிறப்புக்கள் உண்டாவதைப் பார்க்கிறேன். இந்த உலகத்தின் கடந்த கால நிகழ்வுகள் எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன்.  தீப்பிழம்பு போல இருக்கும் உங்களுடைய நெருப்பான முகத்தை பார்க்கிறேன்.  எல்லா உயிரினங்களையும் அது அழுக்கும்.  இவற்றை எல்லாம் நான் பார்த்து பிரமிப்பும் பயமும் கொள்கிறேன்.
அர்ஜுனன் கண்ட விஸ்வரூபம்
    "நமது வாழ்க்கை:   அர்ஜுனன் என்பவன் என்னையும் உன்னையும் அல்லாது வேறு ஒருவனும் அல்ல.  அவனே கடவுளின் இந்த பரமாத்ம சொரூபத்தைப் பார்த்தவன்.  அவனால் அந்தக் காட்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  ஒருவேளை அந்தக் காட்சியை மேலும் ஒரு திண்மையுடன் தெளிவாகப் பார்க்க ஒரு உபகரணம் வேண்டுமோ என்னவோ?  அல்லது அதை விட சிறந்தது ஒன்று வேண்டுமோ?   நிச்சயம் இப்பொழுது இருப்பதை விட அது மேம்பட்டு இருக்கும்.  ...இப்பொழுது என்னைக் காட்டும் அந்த பரமாத்ம சொரூபமானது அது ஒரு டிஸ்னியின் படத்தைப் பார்ப்பதை விட மேலாக இருக்கிறது.   அல்லது ஒரு அவதாரத்தைக் காட்டும் திரைப்படத்தை விட மேலாக இருக்கிறது.   அதிலிருந்து வரும் ஒளி மிக் மிக கவர்ச்சியாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் இருக்கிறது.    வானிலிருந்து பூமி வரை நீண்டு இருக்கிறது.   பரமாத்மாவுக்கு ஆயிர்ம் ஆயிரம் முகங்கள் - ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் - இருந்தன.  ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறத்தில் சருமத்தைக் கொண்டதாக இருந்தன.  செயல்பாடுகளும் வேறு, உருவமும் வேறாக இருந்தன.  அதில் நாம் ஒரு முகத்தில் அட்லாண்டிக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் பார்க்க முடிந்தது.   மற்றொன்றில் இமாலய மலையையும் ஆல்ப்ஸ் மலையையும் இன்னொரு முகத்தில் பார்க்க முடிந்தது.  பனிவிழும் ஆர்க்டிக்கை ஒரு முகத்தில் பார்க்க முடிந்தது.  இன்னொரு முகத்தில் சஹாரா பாலைவனத்திலிருந்து காலஹரி பாலைவனம் வரை பார்க்க முடிந்தது.  எல்லா அணு ஆயுதங்களையும் ஒரு முகத்தில் பார்க்க முடிங்ஹது.  எரிமலைகளை எல்லாம் மற்றொரு முகத்தில் பார்க்க முடிந்தது.  இப்படி எத்தனை எத்தனையோ.  அத்துடன் எல்லா 500 கோடி மக்களையும் ஒரே வீச்சில் ஒரே சமயத்தில் பார்க்க முடிந்தது.  அவர்களுடைய கடந்த கால சரித்திரங்களை எல்லாம் பார்த்து அறிய முடிந்தது.   அவர்களுடைய எதிர்காலங்களையும் பார்த்து அறிய முடிந்தது. எல்லா மிருகங்களையும் ஒன்று விடாமல் பார்க்க முடிந்தது.  அவர்களுடைய கடந்த கால வாழ்க்கையும், எதிர்கால வாழ்க்கையையும் பார்க்க முடிந்தது.  அதே போல் தாவரங்கள் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.  இந்த பூமிக்குக் கீழே உள்ள நிலங்களையும் சரி, மற்றவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது.  ,   இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கிரகங்களையும் பார்க்க முடிந்தது.  அவற்றிற்கும் அப்பால் விவீறீளீஹ் ஷ்ணீஹ் எனப்படும் பால்வழி நட்சத்திரக் கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.  அங்கு உள்ளது உள்ளபடிக் காண முடிந்தது.  ஜீஸஸ், நபி நாயகம், விஷ்ணு, புத்தர் போன்றவர்களை எல்லாம் நான் பார்த்தேன்.  கிரேக்க கடவுள்களைப் பார்த்தேன்.  புனித முங்களை எல்லாம் தரிசித்தேன்.  எல்லா வேதங்களிலும் இருக்கும் அத்தியாயங்களை எல்லாம் அந்த ஒரே கணத்தில் படித்தேன்.   அது மட்டுமல்ல.  ஸ்விஸ் வங்கியில் உள்ள இரகசிய கணக்குகளைப் பார்த்தேன்.  கோடீஸ்வரர்களின் இரகசிய எண்களையும் அறிவேன்.  இந்த பூமியின் எதிர்காலத்தைப் பார்த்தேன். இந்த உலகத்தின் கடந்த காலத்தை பார்த்தேன்.  லட்சோப லட்சம் ஆண்டுகளுக்கான சரித்திரத்தை அங்கு பார்த்தேன்.  அதை எல்லாம் ஒரே வினாடியில் நான் பார்த்தேன்.  இதுவரை காணாத நிறங்கள், கண் கொள்ளாக் காட்சியாகப் பார்த்தேன்.  லட்சோப லட்சம் பசு மாடுகள், லட்சோப லட்சம் பாகிடிரீயாக்கள், எல்லாவற்றையும் ஒரே கணத்தில் பார்த்துத் தீர்த்தேன்.  ஏழைகள் உணவுக்காக அலைந்ததைப் பார்த்தேன், வன்முறையையும் பார்த்தேன், கோடீஸ்வரர்கள் பணத்தைக் குவித்து தம் அலமாரிக்களில் வைத்து சீரழிய விட்டதைக் கண்டேன்.  அவை எல்லாம் அவர்களுடைய கல்லறைகளில் இருந்த அலமாரிக்கள்.  பங்கு மார்க்கெட்டுக்கள் சரிவதைப் பார்க்கிறோம்.  மோட்டார் வாகனங்களிலிருந்து எழும் மாசுப் புகைகளைப் பார்க்கிறோம். நமது பெற்றோர்கள் பிறப்பதையும், இறப்பதையும் பார்க்கிறோம். குழந்தைகளின் பிறப்பையும் இறப்பையும் பார்க்கிறோம்.  நமது பிறப்பையும் இறப்புக்களையும் பார்க்கிறோம்.  உங்கள் கற்பனை இது வரை நீடித்திருந்திருக்கும்.  அது முடிந்து கூட விட்டிருக்கும்.

. அர்ஜுனன் பகவான் கிருஷ்ணருக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.  கடவுள்களின் உருவங்களையும், நெருப்பையும், கொலைகளையும் அழிவையும் மீண்டும் உருவாக்குதல்களையும் உன்னிடம் நான் கண்ட பிறகு நிலையில்லாமல் தவிக்கிறேன்.   என்மீதே எனக்கு அமைதி இல்லாமல் போயிற்று.   என் வீரர்கள் யாவரும் சரி, என் மூதாதையர்களும் சரி, அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்கள் உன்னிடம் வந்து சேர்ந்து விட்டார்கள்.  இந்த வழியிலே ஒரு சிலருக்கு மிக மோசமான அனுபவங்கள் கிட்டி விட்டன.  எப்படி எல்லா நதிகளும் கடலை நோக்கிச் செல்கின்றனவோ எல்லா வீரர்களும், பிரபல மனிதர்களும் சரி, உன் வாய்க்குள் சென்று நுழைந்து தங்கள் அழிவைத் தேடிக் கொள்கிறார்கள்.  எங்கு பார்த்தாலும் நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கும் முகங்கள்.   இதே தீ எரிந்து கொண்டிருக்கும் முகங்களை உன்னிடம் பார்த்திருக்கிறேன்.  அதே முகத்தோடு நீயும் எனக்கு பதிலளித்தாய்.  "  நானே அழிவுமாவேன்.  நானே காலத்தின் முடிவும் ஆவேன்.  இந்த உலகத்தை அழிப்பதில் என் நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். அதில் உள்ள உயிருள்ளவறையும் சரி, உயிரில்லாதவற்றையும் சரி அழிப்பதில் முனைந்திருக்கிறேன்.   அதை ஒவ்வொரு கணத்திலும் செய்து கொண்டிருக்கிறேன்.   அர்ஜுனனே போரில் ஈடுபடாவிட்டால் கூட, கௌரவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் நிச்சயம் கொல்லப்பட்டு விடுவார்கள்.  அர்ஜுனன் இந்த நிகழ்வுக்கெல்லாம் ஒரு சிறு ஆயுதம் போல.  அவர்கள் எல்லோரையும் கொல்லப் போவது அர்ஜுனன் அல்ல.  பகவான் கிருஷ்ணர் அவர்களை ஏற்கனவே கொன்று விட்டார்.  அந்த அழிவு ஒரே ஒரு கணத்தில் ஏற்படப் போகிறது.  அர்ஜுனன் பகவானை அடி பணிந்து வணங்கினான்.   இப்பொழுது எனக்குப் புரிகிறது - உங்களை ஏன் எவருமே புகழ்ந்து வருகிறார்கள் என்று எனக்குப் புரிகிறது. ரிஷிகள் உன்னையே நோக்கி பிரார்த்தனை செய்கிறார்கள்.  நீங்களோ அழிவற்றவர்.  நீங்களே எல்லா கிரகங்களுமாக ஆவீர்கள்.   உங்களிடமிருந்துதான் எதுவுமே உருவாகி வருகின்றன.  உங்கள் முன் பக்தி சிரத்தையுடன் நான் வணங்குகிறேன்.  வெவ்வேறு சமயங்களில் உங்களை வெவ்வேறான நாமங்களும் நமஸ்கரித்து வந்திருக்கிறேன்.  உங்களை வெகு சாதாரண மனிதராகவே பார்த்து வந்திருக்கிறேன்.  ஒருவேளை சில சமயங்களில் உங்களை நான் கேலியாகவோ கிண்டலாகவோ கூடப் பேசி இருக்கலாம்.  என்னை மன்னித்து விடுங்கள்.  நீ9ங்களே இந்த பிரபஞ்சத்தின் தந்தையாவீர்கள்.  நீங்களே இந்த உலகின் மஹா பெரிய குருவாவீர்கள்.  நீங்களே பரப் பிரும்மம் ஆவீர்கள் என்பதை நான் அறிவேன்.  உங்கள் உருவத்தைப் பார்க்கும்பொழுது நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.  இப்பொழுது உங்களை மிக சாந்தமான சொரூபத்தில் நான்கு கரங்களுடன் பார்க்க விரும்புகிறேன்.   அது என் மனத்திற்கு அமைதியைக் கொடுக்கும்.  அந்த உங்கள் சொரூபத்தை தயவுசெய்து இப்பொழுது எனக்குக் காட்டுங்களேன்.  " என்னுடைய பரமாதம சொரூபத்தை, எல்லாவற்றையும் அடக்கிய ஒரு பெரும் சுவரூபத்தை நீ பார்த்து விட்டாய்.  இதுவே என்னுடைய மூல சுவரூபம்.    இதை வேறு எவரும் ஊன்றிப் பார்த்ததில்லை இதற்கு முன்பு.  இதை எந்த பூஜை புனஸ்காரங்களால் பார்த்திருக்க முடியாது.  இந்த உருவத்தை உன் ஒருவனால்தான் பார்க்க முடிந்தது.  இதற்காக நீ பயந்து விட வேண்டாம்.   குழம்பிப் போய் விட வேண்டாம்.  நீ கேட்ட உருவத்திற்கு என்னை நான் மாற்றிக் கொள்ளவும் முடியும்." என்றார் பகவான் கிருஷ்ணர்.   இதை அடுத்து அர்ஜுனனுக்கு நான்கு கரங்களுடன் கூடிய பரம சுவரூபத்தைக் காட்டினார்.
    "நமது வாழ்க்கை:   7 அடி உயரமுள்ள ஒரு மனிதனைப் பார்க்கும்பொழுது - அடர்ந்த தோள்களை உடையவனாக 46 அங்குலம் அகலம் கொண்டவை - நம்மைக் கடந்து செல்லும்பொழுது, நமக்கு எங்கேயோ கொஞ்சம் பயம் தோன்றத்தான் செய்கிறது.  ஒரு கடலுக்கு முன் அமர்ந்து அலைகளைப் பார்க்கும்பொழுது, நன்றாகவே இருக்கிறது.  பெரும் அலைகள் எழும்பி வருகின்றன.  நமக்கு நரம்புகள் புடைத்து பயமுறுத்துகின்றன.  சாலைகளில் நடந்து செல்லும்பொழுது,   திடீரென்று எங்கிருந்தோ ஒரு பெரும் ஓசை எழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.  இரு வாகனங்கள் ஒன்றுக் கொன்று மோதிக் கொண்டு விட்டன.  சில மனிதர்கள் இறந்து விழுந்து கிடைக்கிறார்கள்.   இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள்.  மீண்டும் நரம்புகளில் வலியும் சோகமும்.  நாம் அவ்வளவுதான் என்றாலும், எங்கிருந்தோ வந்து விட்ட கடவுளை பார்க்கிறோம்.  அவர் அவ்வளவு அளவிட முடியாதவர் அல்ல என்று தெரிகிறது.   (ஓ! மனிதர்களுக்கு அளவுகோல் என்று ஒன்று வேண்டுமல்லவா?  இல்லாவிட்டால் அளப்பது முடியாமற் போய் விடுமே.  உதாரணத்திற்கு 2000 மீட்டர்களுக்கு மேல் (6000 அடிகள்) அதுவும் எத்தனை தலைகள், எத்தனை கைகளும், கால்களும் - எப்படி இருக்கும் அந்தக் காட்சி?  உங்கள் வாழ்க்கையிலேயே மிக நெருக்கமான ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள்.  அவருடைய பணி இப்பொழுது மாறி விட்டது.  அன்றாடம் அவர் குறைந்தது 2 நபர்களையாவது கொல்ல வேண்டுமென்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்பொழுது அவர்கள் உங்களை வந்து பார்ப்பார்கள்.  அவரைப் பற்றி நீங்கள் அப்பொழுது என்ன நினைப்பீர்கள் - அதுவும் இந்த ஒரு செயல்பாட்டைச் செய்ய வரும்பொழுது எப்படி நினைப்பீர்கள்.  ஆகவே எப்பொழுதுமே நமக்குப் பிடித்த செயல்களிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கடவுளை நாம் திடீரென்று அவருடைய அழிக்கும் சுபாவத்தைக் காண்கிறோம்.  அது நமக்கு சாதாரண செயலாகவா தோன்றுகிறது?  இல்லை.  இல்லவே இல்லை.  கொஞ்சம் எலுமிச்சை சாறு கொஞ்சம் ஐஸ்கட்டிகள், - இவற்றை அப்பொழுது வேண்டுவோம்.  ஒரு சிலர், 'உம்! எல்லாம் நன்றாகவே இருக்கிறது' என்பார்கள்.  நாமும் பகவானுடைய எல்லாம் சூழ்ந்த உருவத்தைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தோம்,. இந்த ஒரு கற்பனை எல்லாம் அவருடைய மஹா சக்தியே.  அவரில்லாமல் இந்த கற்பனை எழுந்திருக்கவே எழுந்திருக்காது.  அர்ஜுனன் வேறு யாருமில்லை.  நீயும் நானும் போல ஒருவன்தான்.  கடவுள் தன் சுய விஸ்வரூபத்தைக் காட்டி விட்டார்.  அப்படி ஒரு விஸ்வரூபத்தைக் காட்டி விட்டு இருக்கும்பொழுது அவருடைய சாந்த சுவரூபத்தை நான்கே கைகளோடு பார்க்க வேண்டும். ...நம்மால் இப்பொழுதும் கற்பனை செய்து கொள்ள முடிவதுதான்.  ஆகவே நானே அதை உனக்குத் தருகிறேன்...  அதைப் பற்றி வாழ்க்கை முழுவதும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.